Pages

Thursday, February 14, 2008

திருவல்லிக்கேணி கருட சேவை

பார்த்தசாரதிப்பெருமாள் கருட வாகனத்தில்
பெருமாள் கையில் சக்கரம் இல்லாமல், முறுக்கு மீசையுடன் வேங்கட கிருஷ்ணர் என்ற திரு நாமத்துடனும், பாரதப் போரில் அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக, பார்த்தசாரதியாக தேர் ஓட்டிய போது பீஷ்மரின் அம்புகளால் பட்ட காயங்களின் வடுக்களுடன் இந்த கலி யுகத்திலும் சேவை உற்சவராக சேவை சாதிக்கும் திவ்ய தேசம் இரவியின் கதிர்கள் நுழைந்தறியாத திருவல்லிக்கேணி.


இத்தலத்தில் பெருமாள் வேங்கட கிருஷ்ணர், தெள்ளிய சிங்கர், கஜேந்திர வரதர், அரங்க நாதர், சக்கரவர்த்தித்திருமகன் என்று ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார். ஐந்து பெருமாள்களுக்கும் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. ”

சித்திரையில் ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் பிரம்மோற்சவம்.
வைகாசையில் ஸ்ரீ கஜேந்திர வரதர் பிரம்மோற்சவம்.

தெள்ளிய சிங்கர் கருட வாகன சேவை (Close up)
ஆனியில் ஸ்ரீ அழகிய சிங்கர் பிரம்மோற்சவம்
பங்குனியில் இராம நவமியை ஒட்டி இராமருக்கு பிரம்மோற்சவம்.

பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை தங்க கருட சேவை சிறப்பாக நடைபெறுகின்றது. காலை 5:30 மணியளவில் கோபுர தரிசனம் சிறப்பு , பின் பெரிய மாடவீதியுலா வருகின்றார் பெருமாள். மண்டகப்படி நடைபெறுகின்றது பெருமாளுக்கு, பட்டுப் பீதாம்பரங்கள் வந்து மலையாக குவிகின்றன.
சிறுவர்கள் தங்களுடைய சிறிய(miniature) கருட வாகன பெருமாளை ஏழப்பண்ணிக் கொண்டு வருவது சிறப்பு.

ஆனி பௌர்ணமியன்று கஜேந்திர மோக்ஷம்.


தெள்ளிய சிங்கர் கருட சேவை



மாசி மகத்தன்று அதிகாலை சமுத்திரக் கரைக்கு கருட வாகனத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகிறார். இவ்வருடம் 21-02-08 அன்று மாசி மகம், பெருமாள் அருள் இருந்தால் அவரின் தீர்த்தவாரி கருட சேவையை அன்பர்களுக்கு அளிக்க முயற்சி செய்கின்றேன்.



3 comments:

  1. மதிய பெருமாள் சேவை திவ்யமாக கிடைத்தது.
    நன்றி

    ReplyDelete
  2. புகைப்படங்களுக்கும் தகவலுக்கும் நன்றி. பகிர்ந்துகொண்ட உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. `நன்றி வடுவூர் குமார் அவர்களே.

    தோகாவில் வசிக்கும் பாரதிய நவீன இளவரசன் அவர்களே. தாமதத்திற்கு வருந்துகின்றேன்.

    ReplyDelete