திருமயிலை, மயூர வல்லித் தாயார் சமேத ஆதி கேசவப் பெருமாள் பிரம்மோற்சவத்தில் பெருமாள் சந்திரப் பிரபையில் கஜேந்திர மோக்ஷ தரிசனம் தந்து அருளினார் அந்த திவ்ய காட்சிகளின் சில துளிகள்.
மேற்கரத்தில் இருக்க வேண்டிய திருவாழி கீழ் கரத்தில் பிரயோக நிலையில் அமைத்திருக்கும் அழகைக் காணுங்களேன்.
அலங்கார மண்டபத்திலிருந்து ஒய்யாளி சேவை சாதித்து, மணவாள் மாமுனிகள், வீராஞ்சனேயர், பேயாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர்களுக்கு சேவை சாதித்து சடாரி அளித்து மயூரவல்லித்தாயார் சன்னதி முன் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் ஆடிக் கொண்டே பெரிய பிராட்டியாருடன் மாலை மாற்றிக் கொள்கின்றார் பெருமாள். மேலே உள்ள படத்தில் உள்ள மாலை பெருமாள் அணிந்து வந்த மாலை கீழே உள்ள படத்தில் உள்ள மாலையும் பீதாம்பரமும் மயூரவல்லித்தாயாரின் சீர்.
பின் ஆண்டாள் ச்ன்னதிக்கு எழுந்தருளி, பெருமாள் அலங்கார மண்டபம் அடைந்து சந்திரப் பிரபையில் உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கின்றார்.
கோபுர தரிசனம் கோடி புண்ணீயம்
கஜேந்திர மோக்ஷம்
http://www.blogger.com/post-edit.g?blogID=2817236838138128585&postID=5220801715542039804
கஜேந்திர மோக்ஷ சேவையை நன்கு கண்டு களித்தேன். நன்றிகள்.
ReplyDeleteநன்றி குமரன் அவர்களே.
ReplyDelete