Pages

Saturday, April 5, 2008

ஸ்ரீ ராம நவமி - 2 (பாசுரப்படி ராமாயணம் - அயோத்தியா காண்டம்)

வடுவூர் இராமரின் வடிவழகு








ஸ்ரீ:
பெரிய வாச்சான் பிள்ளை தொகுத்தருளிய
திவ்ய பிரபந்த பாசுர ராமாயணம்








இராமாயணம் பாராயணம் செய்த நிறைவும், திவ்ய பிரபந்தத்தை சேவித்த அமைதியும் ஒருங்கே தரவல்ல பாசுரப்படி ராமாயணத்தை இராம நவமி சமயத்தில் பதிகின்றேன் அன்பர்கள் சேவித்து ஸ்ரீ சீதா ராமனின் அருள் பெற வேண்டுகின்றேன்.





காகுத்தன் பட்டாபிஷேக காட்சி





அயோத்தியா காண்டம்







கொங்கை வன் கூனி சொல் கொண்ட




கொடிய கைகேயி வரன் வேண்ட




அக்கடிய சொல் கேட்டு மல்கிய மாமனத்தனன் ஆய்




குலக்குமரா! காடு உறையப் போ




என்று விடை கொடுப்ப, இந் நிலத்தை வேண்டாது,




ஈன்று எடுத்த தாயரையும்,




இராச்சியமும் ஆங்கு ஒழித்து




மைவாய களிரு ஒருந்து




மா ஒழிந்த தேர் ஒழித்து கலன் அணியாதே




காமர் எழில் விழல் உடுத்து




அங்கங்கள் அழகு மாறி




மான் அமரும் மென் நோக்கி வைதேவிஇன் துணையா




இளங்கோவும் வாளும் வில்லும் கொண்டு பின் செல்ல




கலையும் கரியும், பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்




பத்திஉடைக் குகன் கடத்த கங்கை தன்னைக் கடந்து




வனம் போய் புக்கு




காயோடு நீடு கனி உண்டு,




வியன் கான மரத்தின் நீழல்




கல் அணை மேல் கண் துயின்று




சித்திரக் கூடத்து இருப்ப




தயரதன் - தான் நின் மகன் மேல் பழி விளைத்திட்டு




என்னையும் நீள் வானில் போக்க,




என் பெற்றாய்? கைகேசி!




நானும் வானகமே போகின்றேன்




என்று, வான் ஏற,




தேன் அமரும் பொழில் சாரல் சித்திரக் கூடத்து,




ஆனை, புரவி தேரோடு,




கால் ஆள் அணி கொண்ட சேனை,




சுமந்திரன். வசிட்டருடன் பரத நம்பி பணிய,




தம்பிக்கு மரவடியை வான் பணையம் வைத்து




குவலயத் துங்கக் கரியும், பரியும்




இராச்சியமும் எங்கும் பரதற்கு அருளி விடை கொடுத்து




திரு உடைய திசைக் கருமம் திருத்தப் போய்




தண்டகாரணியம் புகுந்து:



பால காண்டம் : http://narasimhar.blogspot.com/2008/04/1.html

பாசுரப்படி ராமாயணம் தொடரும்............

No comments:

Post a Comment