சத்ய நாராயணப் பெருமாள் ஆலயம்
ஸ்ரீ ராமர் அனுமந்த வாகன சேவை

இராமாயணம் பாராயணம் செய்த நிறைவும், திவ்ய பிரபந்தத்தை சேவித்த அமைதியும் ஒருங்கே தரவல்ல பாசுரப்படி ராமாயணத்தை இராம நவமி சமயத்தில் பதிகின்றேன் அன்பர்கள் சேவித்து ஸ்ரீ சீதா ராமனின் அருள் பெற வேண்டுகின்றேன்.
ஸ்ரீ கோதண்டராமர் வைகுண்ட நாதர் சேவை
ஆரண்ய காண்டம்
மறை முனிவர்க்கு அஞ்சேல்மின் என்று அருள்
வெங்கண் விறல் விராதன் உக, வில் குனித்து கொடுத்து
வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி,
புல் மலர்ந்து எழுந்த காமத்தால்
சதைக்கு நேர் ஆவான் என்ன
பொன் நிறம் கொண்ட கடு சினத்த
சூப்பணகி கொண்ட மூக்கும் காது இரண்டும்
கூர் ஆர்த்த வாளால் ஈரா விடுத்து
கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி,
அவள் கதறி தலையில் அம் கை வைத்து,
மலை இலங்கை ஓடிப்புக
கொடுமையின் கடு விசை அரக்கன்,
அலை மலி வேல் கணாளை அகல்விப்பான்
ஓர் உரு ஆய மானை அமைத்து
செங்கல் பொடிக் கூறை, சிற்றெயிற்று,
முற்றல் முங்கில் மூன்று தண்டத்தன் ஆய் வஞ்சித்து
இலைக் குரம்பில் தனி இருப்பில்
கனி வாய்த் திருவினைப் பிரித்து,
நீள் கடல் சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்கு நஞ்சு ஆக கொண்டு போய்
வம்பு உலாம் கடிக் காவில் சிறையா வைக்க
அயோத்தியர் கோன் மாயமான் மாயச்செற்று
அலை மலி வேல் கண்ணாளை அகன்று தளர்வு எய்தி
சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
கங்குலும் பகலும் கண் துயில் இல்லாக்
கானகம் படி உலாவி உலாவி
கணை ஒன்றினால் கவந்தனை மடித்து
சவரி தந்த கனி உவந்து
பால காண்டம் : http://narasimhar.blogspot.com/2008/04/1.html
அயோத்தியா காண்டம் : http://narasimhar.blogspot.com/2008/04/2.html
பாசுரப்படி ராமாயணம் தொடரும்............
No comments:
Post a Comment