லக்ஷ தீப ஒளியில் ஒளிரும் ஸ்ரீ கோதண்ட இராமர்
இராமாயணம் பாராயணம் செய்த நிறைவும், திவ்ய பிரபந்தத்தை சேவித்த அமைதியும் ஒருங்கே தரவல்ல பாசுரப்படி ராமாயணத்தை இராம நவமி சமயத்தில் பதிகின்றேன் அன்பர்கள் சேவித்து ஸ்ரீ சீதா ராமனின் அருள் பெற வேண்டுகின்றேன்.
வடுவூர் இராமன் வடிவழகு
மரா மரம் ஏழ் எய்து
உருத்தெழு வாலி மார்பில் ஒரு கணை உருவ ஒட்டி
கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி அரசளித்த
வானுரக் கோனுடனிருந்து,
வைதேகி தனைத் தேட விடுத்த திசைக் கருமம் திருத்த
திறல் விளங்கு மாருதியும் மாயோன் தூதுரைத்தல் செப்ப!
* * *
மும்மதிள்நீள் இலங்கை புக்குக்கடிகாவில்
வாராரு முலை மடவாள் வைதேவி தனைக்கண்டு
நின்னடியேன் விண்ணப்பம் கேட்டருள்வாய்!
அயோத்தி தனில் ஓர்
இடவகையில் எல்லியம் போது இனிது இருத்தல்
மல்லிகை மாமாலை கொண்டார்த்ததும்
கலக்கியமா மனத்தனளாய் கைகேயி வரம் வேண்ட
மலக்கிய மனத்தன்னாய் மன்னவனும் மறாதொழியக்
குலக்குமரா காடுறையப்போ என விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னோடங்கேகியதும்
கங்கை தன்னில்
கூரணிந்த வேல்வலவன் குகனோடு
சீரணிந்த தோழமை கொண்டதும்
சித்திரக் கூடத் திருப்பப் பரத நம்பி பணிந்ததுவும்
சிறுகாக்கை முலை தீண்டி மூவுலகும் திரிந்தோடி
வித்தகனே! ராமா ஓ! நின்னபயம் என்ன
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்
பொன்னொத்த மானொன்று புகுந்தினிது விளையாட
நின்னன்பின் வழிநின்று சிலைப்பிடித் தெம்பிரானேகப்
பின்னேயங்கு இலக்குமணன் பிரித்ததுவும்
அயோத்தியர் கோனுரைத்த அடையாளம்
ஈதவன்கை மோதிரமே என்று
அடையாளம் தெரிந்துரைக்க
மலைகுழலால் சீதையும்
வில்லிறுத்தான் மோதிரம் கண்டு
அநுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சி மேல் வைத்து உகக்க
திறல் விளங்கு மாருதியும்
இலங்கையர்க்கோன் மாக்கடி காவையிறுத்து
காதல் மக்களும் சுற்றமும் கொன்று
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர்கோன் சினமழித்து மீண்டு அன்பினால்
அயோத்தியர்கோன் தளிர்புரையும் அடியிணைபணிய
பால காண்டம் : http://narasimhar.blogspot.com/2008/04/1.html
அயோத்தியா காண்டம் : http://narasimhar.blogspot.com/2008/04/2.html
ஆரண்ய காண்டம் : http://narasimhar.blogspot.com/2008/04/3.html
பாசுரப்படி ராமாயணம் தொடரும்............
No comments:
Post a Comment