அன்பாவாய் ஆரமுதாவாய் அடியேனுக்கு
இன்பாவாய் எல்லாமும் நீயாவாய் - பொன்பாவை
கேள்வா! கிளரொளியென் கேசவனே கேடின்றி
ஆள்வாய்க்கடியேன் நானாள்
கடந்த பத்து நாட்களாக காலையும் மாலையும் வாகன சேவையும், மாலையில் பத்திஉலா, தாயார் சன்னதி ஊஞ்சல், தாயாருடன் மாலை மாற்றல், ஒய்யாளி சேவை என்று கோலாகல திருவிழாக் கண்ட , வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவரான ஸ்ரீ பேயாழ்வார் விழுங்கும் கோதிலின் கனியான திருமயிலை ஆதிகேசவப் பெருமாள் பங்குனி சிரவணத்தன்று( திருவோணம்) சந்திர புஷ்கரணி என்னும் சித்திரக் குளத்தில் தீர்த்தவாரி கண்டருளினார். அன்று இரவு கண்ணாடிப் பல்லக்கில் உபய நாச்சியார்களுடன் பெருமாள் சேவை சாதித்த அழகை, அரிய காட்சியை சேவித்து மகிழுங்கள்.
கண்ணாடிப் பல்லக்கில் ஆதி கேசவப் பெருமாள்
உபய நாச்சியார்கள் பல்லக்கில்
பல்லக்கின் முழு அழகு
ஸ்ர்வதேவ நமஸ்கார ஸ்ரீகேசவம் ப்ரதிகச்சதி
ஸ்ரீகேசவம் சரணம் சரணம் ப்ரபத்தயே.
கண்ணாடி பல்லக்கு சேவை அற்புதம். மிக்க நன்றி.
ReplyDeleteசேவித்தத்ற்கு நன்றி
ReplyDelete