ஹம்பியில் பார்க்க வேண்டிய இடங்கள்
(படத்தை பெரிதுபடுத்தி பாருங்கள்)
அடுத்து ஹம்பியில் பார்க்க வேண்டிய ஆலயம் விந்தைமிகு விஜயவிட்டல ஆலயம். மிலேச்சர்களால் சிதைக்கப்பட்டும் இவ்வாலயம் இன்றும் நம் கண்ணுக்கு விருந்தாக விளங்குகின்றது. இவ்வாலயம் கி.பி. 1513ல் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. பல்கோண வடிவில் கட்டப்பட்டுள்ள ஆலயத்தின் ஒவ்வொரு தூணும் ஒரு கதை சொல்கின்றது. இவ்வாலயத்திற்கு எதிரே உள்ள கல் இரதம் ஒரு அருமையான கலைப் படைப்பு.
கல் இரதம்
இதில் உள்ள சிற்பங்களின் அழகைக் காணுங்கள்
( இப்பதிவில் உள்ள படங்களை எடுத்தவர்கள் இவர்கள் )
ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் ஆலயத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் மதங்க மலை உள்ளது இம்மலையின் மேல் வீரபுவனேஸ்வரர் ஆலயம் உள்ளது. மலை உச்சிக்கு சென்று பார்த்தால் விருபாக்ஷீஸ்வரர் ஆலயத்தின் மேற்கு பகுதியை அருமையாக தரிசிக்கலாம். மேலும் ஹேமகூட மலை, இரத வீதி, துங்கபத்ரா, யாணை கொட்டகை , கோட்டை ஆகியவற்றை பறவைப் பார்வையில் காணலாம்.
உக்ர நரசிம்மர்
பெருமாளின் அழகே அழகு
படாவி லிங்கம்
கண்காணிப்பு காவற் கூடம்
இதுவல்லாமல் ஹம்பியிலிருந்து கமலாப்பூர் செல்லும் வழியில் 18அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன கடலேகலு கணபதி, அழகிய நீராழி மண்டபத்துடன் கூடிய கிருஷ்ணர் கோயில், 12 அடி கருப்புக் கல்லால் ஆன படாவி லிங்கம், லிங்கத்தின் கீழே கால்வாய் ஒன்று செல்கின்றது. மற்றும் 22 அடி உக்ர நரசிம்மர் கைகள் சிதைந்த நிலையிலும் சுவாமியின் உக்கிரம் இன்னும் குறையவில்லை, வீரபத்திரர் கோவில், பாதாளீஸ்வர் கோவில் , இராஜ மாதா குளிக்கும் “குயின்ஸ் பாத்” , 11 யாணைகள் கட்டப்பட்ட எலிபென்ட்ஸ் ஸ்டேபிள். ஆகியவை அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள் சமயம் எடுத்துக்கொண்டு அனைத்தையும் பார்த்து மகிழுங்கள். மேலே உள்ள ஹம்பியின் வரைபடத்தை பாருங்கள். மழைக்காலம் விடுத்து செல்ல ஹம்பியில் அருமையாக பார்க்க அநேக இடங்கள் உள்ளன.
படிக்குளம் (Stepped tank)
நீங்கள் ஹம்பியை சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்த போது ஹரிப்பிரியா விரைவு வண்டி மந்திராலயம் ரோடு புகைவண்டி நிலையத்தை அடைந்து விட்டது. இரவு சுமார் 3.oo மணிக்கு நாங்கள் அந்த நிலையத்தை அடைந்தோம். அந்த நேரத்திலும் மந்திராலயம் செல்ல அரசு பேருந்து காத்துக்கொண்டிருந்து. விசாரித்த போது பக்தர்களின் நன்மையை முன்னிட்டு புகை வண்டி வரும் சமயங்களில் பேருந்து உள்ளது என்று கூறினார்கள். மந்திராலயம் ரோடு புகைவண்டி நிலையத்திற்கும். ஸ்ரீ ஸ்ரீ இராகவேந்திரர் மந்திராலயத்திற்கும் இடையே 32 கி.மீ தூரம் உள்ளது. நாங்கள் ஆட்டோ மூலமாக மந்திராலயத்திற்கு புறப்பட்டோம். மந்திராலயம் சென்று சேர்வதற்குள் இராகவேந்திர சுவாமிகளின் சரிதத்தை சுருக்கமாக பார்த்து விடுவோமா?
இத்துடன் நவபிருந்தாவன பதிவுகள் நிறைவுற்றன. இது வரை ஒரு சிறு விபத்து காரணமாக வீட்டின் உள்ளேயே இருந்த காரணத்தால் நவபிருந்தாவன யாத்திரைப்பகுதியை வெகு வேகமாக பதிவிட முடிந்தது, இனி பணிக்கு செல்ல வேண்டும் மற்ற வீட்டு வேலைகளை கவனிக்க வேண்டும் என்பதால் சிறிது இடைவெளி விட்டு மந்திராலயப் பதிவுகள் தொடரும். தொடர்ந்து வந்து படித்து ஊக்குவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இத்துடன் நவபிருந்தாவன பதிவுகள் நிறைவுற்றன. இது வரை ஒரு சிறு விபத்து காரணமாக வீட்டின் உள்ளேயே இருந்த காரணத்தால் நவபிருந்தாவன யாத்திரைப்பகுதியை வெகு வேகமாக பதிவிட முடிந்தது, இனி பணிக்கு செல்ல வேண்டும் மற்ற வீட்டு வேலைகளை கவனிக்க வேண்டும் என்பதால் சிறிது இடைவெளி விட்டு மந்திராலயப் பதிவுகள் தொடரும். தொடர்ந்து வந்து படித்து ஊக்குவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment