Tuesday, October 9, 2012

திருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -7

Visit BlogAdda.com to discover Indian blogs
சந்திரப் பிரபை வாகன சேவை



மின் விளக்கு அலங்காரத்தில் ஒளிரும் இராஜகோபுரம் 




ரத சப்தமிக்காக  எழிலாக வைக்கப்பட்டிருக்கும்
 சில மின்   விளக்கு அலங்காரங்கள். 






 சந்திர பிரபையில் மலையப்பசுவாமி



அதிகாலையில் சூரியபிரபையில்   சிவப்பு மாலையுடன் சேவை சாதித்த மலையப்பசூவாமி அன்றைய தினம் இரவு வெள்ளை(மல்லிகை) மாலையுடன் சேவை சாதிக்கும் அழகு.



பின்னழகு

கை விளக்கு ஏந்திய காரிகைகள்

அதிகாலை முதல் இரவு வரை இந்த பக்தர்கள் சலிக்காமல் பெருமாளி முன்னர் ஆடி வரும் இந்த  பக்திக்கு தலை வணங்குகின்றேன். 

ஸ்ரீவேங்கடேச  மங்களாசாசனம் 

ஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரு முனி மானஸ வாஸிநே,
ஸர் லோக நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம் (13)

ஒவ்வொரு பொருளிலும் உள்ளும் புறமும் உறைந்து நிற்கும் உத்தமன், உத்தம பாகவதர்களின் திருஉள்ளத்திலும் உவகையுடன் உறைகின்றான். அத்தகைய திருவேங்கடவனுக்கு    எல்லா மங்களங்களும் உண்டாகட்டும். 

மங்களாசாஸந பரைர் மாதாசர்ய புரோகமை,
ஸர்வைஸ்ச பூர்வைராசார்யைஸ் ஸத்க்ருதாதாஸ்து மங்களம் (14)

என்பெருமானுக்கு பல்லாண்டிசைப்பதென்னும் மங்களாசாசனத்தில்  என் ஆச்சார்யர்களும், அவர்களுடைய  ஆச்சார்யர்களும் அதே போல பூர்வாசார்யகளும்  போற்றப்பட்ட  திருவேங்கடமுடையானுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.

********

இத்துடன் இத்தொடர் நிறைவு பெற்றது வந்து சேவித்த அன்பர்கள் அனைவருக்கும் திருவேங்கடவனின் திருவருள் சித்திக்க பிரார்த்தித்து கொள்கிறேன்,. வரும் பதிவுகளின் சில திவ்ய தேசங்களின் தரிசினத்துடன் சந்திக்கின்றேன் அன்பர்களே.  




Labels: , ,

Sunday, October 7, 2012

திருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -6

Visit BlogAdda.com to discover Indian blogs
சர்வ பூபால வாகன சேவை 


மலையப்ப சுவாமி 


அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பே  மலையப்ப சுவாமி நமக்கு அருள சூரியப் பிரபை வானத்தில்  சேவை சாதித்தருளினார். பின்னர் பல்வேறு வாகன சேவை சாதித்த சுவாமி சூரியன் மறையும் வேளையில் சர்வ பூபால வாகனத்தில் சர்வ லோக சக்ரவர்த்தியாக எழுந்தருளி உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கும் அழகை காண்கின்றீர்கள். 
   





பூபாளர்கள் என்பவர்கள் அந்தந்த பகுதியை நிர்வகிக்கும் அரசர்கள் என்று கொள்ளலாம், அந்த அரசர்களுக்கெல்லாம் அரசனாக, ஏக சக்ரவர்த்தியாக,  சகல புவனங்களையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அலகிலா  விளையாட்டுடை  ஜகந்நாதனாக, சர்வ லோக சரண்யனாக  மலையப்பசுவாமி சர்வ பூபாள வாகனத்தில் சேவை சாதிக்கின்றார்.  நாமும்  அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பினனிடம் சரணாகதி அடைவோம்.  





சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி
 உபய நாச்சியார்களுடன் 

பின்னழகு



பகவானுக்கு சேவை செய்யும் பிஞ்சுக்குழந்தைகள் 



ஸ்ரீவேங்கடேச  மங்களாசாசனம் 

ஸரக்பூஷாம்பர  ஹேதீநாம் ஸுஷமாவஹமூர்த்தயே
ஸர்வார்த்திதச மநாயாஸ்து ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம் (11)

எல்லோருடைய துன்பங்களையும் துடைக்கும் திருவேங்கடமுடையான், தன் திருமேனியின் சோபையில் ஒரு சிறு பகுதியைக் கொடுத்து மாலை , ஆபரணங்கள், வஸ்திரங்கள், ஆயுதங்கள் இவற்றுக்கெல்லாம்  அழகு தருகின்றாம், அத்தகைய   திருவேங்கடமுடையானுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும். 

ஸ்ரீவைகுண்டவிரக்தாய ஸ்வாமிபுஶ்கரணிதடே,
ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம் (12)

பரமபதத்தில் பரவாஸிதேவனாய் பக்த ரக்ஷணம் செய்யும் எம்பெருமான் , திருமலையில் ஸ்வாமி புஷ்கரணி தீரத்தில்  திருவேங்கடமுடையான்  உருவத்தில் அர்ச்சையாய் எழுந்தருளி பக்த ரக்ஷணம் என்னும் காரியத்தை சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றான்.ஸ்ரீமஹாலக்ஷ்மியும் திருமலையில் தனிக்கோவில் கொண்டிராமல் திருவேங்கடமுடையான் திருமார்பையே தன்  கோயிலாகக் கொண்டான்   அத்தகைய திருவேங்கடமுடையானுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும். 


                                                                              மலையப்ப சுவாமியின் சேவை தொடரும்.........

Labels: , ,