Pages

Thursday, June 16, 2016

கோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -2

ஆதி காலத்தில் இவ்வாலயத்தில் இராமர் பத்ராசலத்தில் உள்ளது போல பத்ராசலத்தில் உள்ளது போலவே ஸ்ரீ ராமரின் இடத் தொடையில்          ஸ்ரீ சீதா பிராட்டியர் அமர்ந்திருக்க, இளைய பெருமாள் இலக்குவன் குடைப் பிடிக்க, திருவடியை அனுமன் தாங்க பட்டாபிஷேக கோலத்தில் எழுந்தருளி அருள்பாலித்துக்கொண்டிருந்தார். பின்னர் சீதா லக்ஷ்மண  கோதண்டராமரராகவும் கோவில் கொண்டார் 




இவ்வாலய வளாகத்தின் உள்ளேயே  ஹனுமத் தீர்த்தம் என்ற திருக்குளமும், லக்ஷ்மி தீர்த்தம் என்ற மடப்பள்ளி கிணறும் அமைந்துள்ளன.  திருப்பணி செய்தவர்கள் அமைத்த கல்வெட்டு. 

ஹனுமத் தீர்த்தக்கரையின் கருடாழ்வார் 


பத்ராசல இராமன் வைபவம்: இராமதாசர் ஹைதராபாத் திவானிடம் பணி செய்து வந்தார். அவர் வரியாக வசூலித்த பணத்தைக் கொண்டு பத்ராசலத்தில் இராம பெருமானுக்கு ஒரு சிறந்த கோவிலைக் கட்டினார். அதனால் திவான் அவரை சிறையில் அடைத்தார். சிறையில் வாடிய இராமதாசர் அந்த ஸ்ரீ இராமனையே சரண் என்று அடைந்தார். இராமா உனக்காக கோவில் கட்டியதற்கு கிடைத்த பலன் இது தானா? எத்ற்காக எனக்கு இந்த தண்டனை என்று மனமுருகி வேண்டி நின்றார். தன் அன்பன் சிறையில் வாடுவதைக் கண்டு பொறுக்க முடியாமல் அந்த இராமனும் இலக்குவனுமே அந்த பணத்தை இரு வாலிபர்களாக வந்து திவானிடம் திருப்பித்தர, உண்மை உணர்ந்த திவான் இராமதாசரை விடுதலை செய்தார். ஸ்ரீ இராமரின் பரிபூரண கடாட்சத்திற்க்கு ஆளான பக்த இராம தாஸர் வழி வந்த வேங்கட வரத தாசர் என்பவர் , பத்ராசலத்தில் உள்ளது போலவே ஸ்ரீ ராமரின் இடத் தொடையில் ஸ்ரீ žதா பிராட்டியர் அமர்ந்திருக்க, இளைய பெருமாள் இலக்குவன் குடைப் பிடிக்க, திருவடியை அனுமன் தாங்க பட்டாபிஷேக கோலத்தில் பெருமாளை பிரதிஷ்டை செய்து இக்கோவிலைக் கட்டினார். இந்த ஸ்ரீ பட்டாபிஷேக இராமரே இக்கோவிலின் ஆதி மூலவர். நஞ்சை அமுதாக்கி கோதண்டராமராகவும் இக்கோவிலில் பெருமாள் வந்து அமர்ந்த அற்புத லீலையைப் இனிப் பார்ப்போமா?




மஹா மண்டபத்தின் முன் உள்ள அழகிய யானை சிற்பங்கள் 


ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே |
ரகுநாதாய  நாதாய சீதாயா பதயே நம:  ||


நஞ்சை அமுதாக்கிய பெருமாள் (உற்சவர்)



யாக சாலை 






சயனாதி  வாசத்தில்  தாயாரும் பெருமாளும்


பெருமாளுக்கு ஆலவட்ட  கைங்கரியம் செய்யும் பாக்கியம் இன்று அனைவருக்கும் கிட்டியது.


காவல் காக்கும் லக்ஷ்மணப் பெருமாள்


வீணை இசையுடன் திவ்விய பிரபந்தம்
 சேவிக்கும் அன்பர்கள் 

இத்தொடரின் மற்ற பதிவுகளைக் காண இங்கு செல்லவும் 




                                        திருக்குடமுழுக்கு காட்சிகள் தொடரும் . . . . . . . . 

No comments:

Post a Comment