Pages

Saturday, April 5, 2008

ஸ்ரீ ராம நவமி - 1 (பாசுரப்படி ராமாயணம் - பால காண்டம்)


சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர்

பரித்ராணாய ஸாதுனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்




தர்ம சம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே

என்று ஸ்ரீமத பகவத் கீதையிலே அருளிய படி சாதுக்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் எம்பெருமான் பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார். அவற்றுள்
இராமாதாவதாரம் மானிடருக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து காட்டிய அவதாரம்.




வருகின்ற 14.04.08 அன்று
ஸ்ரீ ராம நவமி
அந்த புண்ணிய நாளையொட்டியும்.

யுகாதி என்று சுந்தர தெலுங்கர்களும், கன்னடர்களும் , குடி பட்வா என்று சிங்க மராட்டியர்களும் (07.04.08), புத்தாண்டு என்று மறத்தமிழர்களூம், விஷு என்று கவின் மலையாளத்தின்ரும், நப வருஷ் என்று வங்காளத்தினரும், ரொங்காலி பிஹு என்று அஸாமியர்களும், பைசாகி என்று பஞ்சாபிகளும் (13.04.08), இவ்வாறு பாரத தேசமெங்கும் உள்ளோர்களின் புது வருடப்பிறப்பும்,




தேவி உபாசகர்களின் வசந்த நவராத்திரி காலமும் , ஆன அடுத்த பத்து நாட்களாகிய புண்ணிய காலத்தில்,




பாசுரப்படி இராமாயணம், "எந்த ருசி ரா ராமா, ஏது ருசி ரா ராமா" என்று தியாக பிரம்மம் உருகிய இராம நாம மகிமை, சென்னை மேற்கு மாம்பலத்தில் நஞ்சை அமுதாக்கிய பெருமாளாய், தக்ஷிண பத்ராசல ராமாராய் எழுந்தருளி சேவை சாதிக்கும் அழகு,மற்றும் இராமராய் பெருமாள் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலங்கள், சித்திர ராமாயணம், ஸ்ரீ ராமரின் பல்வேறு அருட்கோலங்களின் அருமையான படங்கள் என்று ஒரு அறு சுவை விருந்து படைக்க எம்பெருமான் ஆணை, ஸ்ரீ ராம நவமி வரை தினமும் வந்து சேவிக்குமாறு கை கூப்பி வேண்டிக் கொள்கிறேன்.




ஸ்ரீ:
பெரிய வாச்சான் பிள்ளை தொகுத்தருளிய
திவ்ய பிரபந்த பாசுர ராமாயணம்


பெரியவாச்சான் பிள்ளை என்னும் தாஸ்ய நாமம் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணபாதர் என்ற வைணவப் பெரியார் பன்னிரு ஆழ்வார்களின் பாசுரங்கள் அனைத்திற்க்கும் மணிப்பிரவாள உரை இயற்றி வியாக்கியான சக்கரவர்த்தி என்று புகழ் பெற்றவர்.

மயர்வற மதிநலம் பெற்ற ஆழ்வார்களின் அருளிச்செயல்களின் சொற்றொடர்களைத்தொகுத்து அமைத்த நறுமண மாலையே பாசுரப்படி ராமாயணம். ராம நாமமும் ராமனின் கதையும் எத்தனை முறை சொன்னாலும் சுவையே.

இராமாயணம் பாராயணம் செய்த நிறைவும், திவ்ய பிரபந்தத்தை சேவித்த அமைதியும் ஒருங்கே தரவல்ல பாசுரப்படி ராமாயணத்தை இராம நவமி சமயத்தில் பதிகின்றேன் அன்பர்கள் சேவித்து ஸ்ரீ சீதா ராமனின் அருள் பெற வேண்டுகின்றேன்.








பால காண்டம்




திருமடந்தை, மண் மடந்தை இருபாலும் திகழ,

நலம் அந்தம் அல்லது ஓர் நாட்டில்

அந்தம் இல் பேரின்பத்து அடியோரொடு

ஏழ் உலகம் தனிக் கோல் செல்ல, வீற்றிருக்கும்

அயர்வறும் அமரர்கள் அதிபதியான

அணி ஆர் பொழில் சூழ் அரங்க நகர் அப்பன்

அலை நீர் கடலுள் அழுத்தும் நாவாய்போல்

ஆவார் ஆர் துணை என்று துளங்கும்

நல் அமரர் துயர் தீர

வல் அரக்கர் வாழ் இலங்கை பாழ்படுக்க எண்ணி

மண் உலகத்தோர் உய்ய

அயோத்தி என்னும் அணி நகரத்து

வெங்கதிரோன் குலத்துக்கு ஒர் விளக்கு ஆய்

கௌசலைதன் குல மதலை ஆய்

தயதரன்தன் மகன் ஆய்த் தோன்றி

குணம் திகழ் கொண்டல் ஆய்

மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து வந்து

தனை எதிர்த்த தாடகை தன் உரம் கீண்டு

வல் அரக்கர் உயிர் உண்டுகல்லைப் பெண் ஆக்கி

கார் ஆர் திண் சிலை இறுத்து

மைதிலியை மணம் புணர்ந்து

இரு பத்து ஒரு கால் அரசு களை கட்ட

மழு்வாளி வெவ் வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு

அவன் தவத்தை முற்றும் செற்று

அம் பொன் நெடுமணி மாட அயோத்தி எய்தி

அரி அணை மேல் மன்னன் ஆவான் நிற்க,


பாசுரப்படி ராமாயணம் தொடரும்........

3 comments: