Pages

Tuesday, April 22, 2008

சித்திரை பிரம்மோற்சவ கருட சேவைகள்

சித்திரை திருவோண நாளை தீர்த்த நாளாகக் கொண்டு பல்வேறு பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை பெருமாள் கருட சேவை சாதிக்கும் இரண்டு தலங்களில் இன்று கருட சேவையை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது அந்த அற்புத சேவையை தாங்களும் கண்டு களியுங்கள்.

ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் தங்க கருட சேவை
திருவல்லிக்கேணி திவ்ய தேசம்



கருட சேவை பின்னழகு

பார்த்த சாரதி சுவாமி ஏகாந்த சேவை











பின்னழகு


கோடைக்காலம் என்பதால் சுவாமிக்கு வெப்பம் அதிகமாகக் கூதாது என்று சிரத்தையுடன் சந்தனம் சார்த்தியிருக்கின்ற நேர்த்தியைப் பாருங்கள்.




சைதாப்பேட்டை ஸ்ரீ பிரசன்ன வேங்கட நரசிம்மப் பெருமாள்
அந்த இரண்டு தலங்களில் முதலாவது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் தங்க கருட சேவை. இரண்டாவது சென்னை சைதாபேட்டை பிரசன்ன வேங்கட நரசிம்மப் பெருமாள் ஆலயத்தின் கருட சேவை. ஆம் இத்தலத்தில் பெருமாள் வேங்கடவராகவும் நரசிம்மராகவும், உபய நாச்சியார்களுடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.


பிரம்மோற்சவம் ஒன்றாக நடைபெறும் இந்த இரண்டு திருகோவில்களுக்கும் இனி ஒரு சம்பந்தமும் உண்டு. தை மாதத்தில் திருவூரல் உற்சவத்திற்க்காக ஈக்காட்டுத்தாங்கல் எழுந்தருளும் ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் இத்தலத்திற்கு விஜயம் செய்கின்றார். பின்னர் இரு பெருமாள்களும் ஒன்றாக மாட வீதி வலம் வருகின்றனர்.

கருடனின் கண்களில் ஒரு ஒளி வட்டம் தெரிகின்றதா? ஆம் கூர்ந்து கவனியுங்கள் நிச்சயம் தெரியும் ஏனென்றால் அவை கண்ணாடி குண்டுகள். வாகனங்கள் செய்த காலத்தில் சிறப்பாக இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்த சிறப்பு குண்டுகள் அனைத்து வாகனங்களிலும் பதிக்கப் பட்டனவாம்.

வேங்கட நரசிம்மர் அனுமந்த வாகன சேவை


மூன்றாம் நாள் இரவு பெருமாள் அனுமந்த் வாகனத்தில் பெருமாள் சேவை சாதிக்கும் போது சிறிய திருவடிக்கு வடை மாலை சார்த்துவது இத்தலத்தின் சிறப்பு.

2 comments:

  1. வெகு அருமையான சேவை.வெகு நேர்த்தியான படங்கள். எனக்கு சைதாப்பேட்டையில் இப்படி ஒரு கோவில் இருப்பதே தெரியாது.:(

    வீட்டை விட்டு கிளம்பவே யோசிக்கும் இந்தக் கோடையில் பெருமாள் இப்படி உற்சவம் கண்டு நமக்கு மகிழ்வைத் தருகிறாரா.

    என்ன ஒரு புண்ணியம் செய்தேனோ. இன்று இந்த சேவை கிடைக்க.
    மிக மிக நன்றி.

    ReplyDelete
  2. வாருங்கள் வல்லி சிம்ஹன் அவர்களே. நான் உங்கள் விசிறி, தங்களுடைய பல பதிவுக்ளை படித்து இரசித்துள்ளேன். ஆனால் அதிகமாக பின்னூட்டம் இட்டதில்லை. சமயம் கிடைக்கும் போது இன்னும் பல கருட சேவை அனுபத்தை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். வந்து சேவியுங்கள்

    ReplyDelete