Pages

Monday, September 15, 2008

ஆடி கருடன் - கஜேந்திர மோக்ஷம்

குட்டத்து கோல் முதலை துஞ்சக் குறித்தெறிந்த
சக்கரத்தார் ஸ்ரீநிவாசர் (closeup)



முன் பதிவில் பார்த்தோம் ஆனியில் சுவாதியன்று பெரியாழ்வார் எம்பருமானுக்கு பல்லாண்டு பாடியதை குறிக்கும் வகையில் கருட சேவை நடைபெறுவதை, அது போல பூரண சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் கஜேந்திர மோக்ஷத்தை உணர்த்தும் வகையில் ஆடி பௌர்ணமியன்று விஷ்ணுவாலயங்களில் கருட சேவை நடைபெறுகின்றது. திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் கஜேந்திர மோக்ஷ கருட சேவையின் சில படங்கள் இப்பதிவில் கண்டு களியுங்கள்.



ஆனைக்காக பொலிந்த கருடன் மேல் வரும் கரியான்

எழிற்கோலம் காணக் கண் கோடி வேண்டும்

பூர்வாச்சாரியார்கள் கஜேந்திர மோக்ஷத்தைப் பற்றி கூறும் போது பெருமாளே தாங்கள் யாணையை முதலையிடமிருந்து காத்தது பெரிதல்ல ஆனால் வந்த வேகம்தான் அருமை என்று பூரண சரணாகதி செய்த க்ஷணமே நாம் அவனுடைய சொத்து என்று உணர்த்துகின்றனர்.



ஆடும் பறவையில் எம்பெருமான் பின் கோலம்

ஓடும் புள்ளேறி

சூடும் தண் துழாய்

நீடு நின்று அவை

ஆடும் அம்மானே

பைங்கண் மால் யானை படுதுயரம் காத்தளித்த செங்கண் மால் திருவடிகளே சரணம்

படங்களுக்கு நன்றி - http://www.svdd.com/

கஜேந்திர மோட்சம் பதிவைப் படிக்க கிளிக்குக இங்கே

கஜேந்திர மோட்சம்

4 comments:

  1. அருமையான படங்கள் கைலாஷி ஐயா, எம்பெருமானின் தொப்பாரமும், பின்னழகும், முன்னழகும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்திற்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என நினைக்கிறேன் முடியவில்லை. அடுத்த முறை சென்னை செல்கையில் மறக்காமல் செல்ல திருவேங்கடமுடையானை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  2. வாருங்கள் ராகவ்

    //வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்திற்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என நினைக்கிறேன் முடியவில்லை. அடுத்த முறை சென்னை செல்கையில் மறக்காமல் செல்ல திருவேங்கடமுடையானை பிரார்த்திக்கிறேன்.//

    அவசியம் சென்று தரிசியுங்கள் ராகவ்.

    ஸ்ரீநிவாசர், அலர்மேல் மங்கைத்தாயார், ஹயக்ரீவர், நரசிம்மர் தரிசனம் மற்றும்
    சுதர்சனரின் அழகும், வெள்ளி இராமரின் அழகும் காணக் கண் கோடி வேண்டும்.

    அவசியம் வந்து தரிசியுங்கள்.

    ReplyDelete
  3. திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் என்பது ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் திருவீதியில் இருப்பது தானே கைலாஷி ஐயா. ஒரே ஒரு முறை சென்று தரிசிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. இன்று பெருமாளின் கருடசேவையைச் சேவிக்கும் பாக்கியம் கிடைத்தது. நன்றி.

    ReplyDelete
  4. ஆம் குமரன் ஐயா, திருமயிலை ஆதி கேசவபபெருமாள் திருக்கோவிலின் அருகில் அமைந்துள்ளது வேதாந்த தேசிகர் தேவஸ்தானம். இத்திருக்கோவிலின் சுத்ர்சனர், வெள்ளி இராமர் எல்லாம் மிகவும் சிறப்பு.

    ReplyDelete