Pages

Sunday, March 29, 2009

ஸ்ரீராமரின் அருட்கோலங்கள்

வரும் 3-4-2009 அன்று இராம நவமி அதையொட்டி இன்னும் சில இராம பிரானை தரிசிக்கலாமா அன்பர்களே. இராமர் என்றது நினைவுக்கு வருவது வடுவூர் தான் இதோ சில வடுவூர் இராமர் அருட்கோலங்கள்.

மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறுவாய்த்தவனே!

தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர்

கன்னிநன்மாமதிள்புடைசூழ் கணபுரத்தென்கருமணியே

என்னுடையவின்னமுதே! இராகவனே! தாலேலோ.

ஸ்ரீராம நாம மகிமை

மும்மைசால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்

தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே

இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்

செம்மை சேர் நாமம் தன்னை கண்களில் தெரியக் கண்டான்

இனி வரும் படங்கள் எல்லாம் சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீசத்ய நாராயணர் கோவில் கோதண்ட ராமரின் அருட்கோலங்கள். இத்திருக்கோவிலில் இராம நவமி உற்சவம் பத்து நாள் நிகழ்ச்சியாக சிறப்பாக நடைபெறுகின்றது. காலை தினமும் சிறப்பு திருமஞ்சனம் இப்போது பார்க்கும் இரண்டு படங்களும் காலை திருமஞ்சனத்திற்கு பின் எடுக்கப்பட்ட படங்கள்.

திருமஞ்சனம் கண்டருளிய சீதாராமர் சிறிய திருவடியுடன்

இராஜா ராமர், சதுர்புஜ இராமர், ஹர தனுர் பங்கம், சீதா கல்யாணம், முத்தங்கி சேவை, அனுமன் வாகனம், சுக்ரீவ சகாயர், நாச்சியார் திருக்கோலம், வைகுந்த நாதன், இராம நவமியன்று இராம பட்டாபிஷேகம்- வீதி புறப்பாடு, பின் விடையாற்றி கண்ணாடியறை சேவை என்று பல் வேறு கோலங்களில் மாலை நேரங்களில் சேவை சாதிக்கின்றார் ஸ்ரீராமர் அவற்றுள் சில கோலங்கள் இங்கே.

கோதண்ட ராமர் முத்தங்கி சேவை

என்ன அழகு என் இராமன், காணக் காண் கோடி வேண்டும், பிறவி எடுத்ததன் பலன் இவரை தரிசித்தால் கிடைத்து விட்டதே.

சிறிய திருவடியில் கோதண்டராமர்

மலையதனாலனைகட்டி மதிலிலங்கையழித்தவனே!

அலைகடலைக்கடைந்து அமரர்க்கமுதருளிச்செய்தவனே!

கலைவலவர்தாம்வாழும் கணபுரத்தென்கருமணியே!

சிலைவலவா! கேசவனே! சீராமா! தாலேலோ.

இராம நவமியன்று இராம பட்டாபிஷேகக் கோலம்

வைதேஹி-ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹா-மண்டபே

மத்த்யே புஷ்பக-மாஸனே மணிமயே வீராஸனே ஸுஸ்திகம்

அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜன-ஸுதே தத்வம் முனிப்ப்ய்: பரம்

வ்யாக்க்யாந்தம் ப்ரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம்

கற்பக விருக்ஷத்தின் அடியில் அமைந்த ஸ்வர்ண மண்டபத்தின் நடுவில் மமயமான ஆஸனத்தில் வீராஸனமிட்டு சீதாதேவியுடன் அழகாக வீற்றிருப்பவரும், முன்னிருந்து ஆஞ்சனேயர் கேட்கத் தத்துவத்தை முனிவர்களுக்கு விளக்கிக் கூறுபவரும், பரதன் முதலியவர்களால் சூழப்பெற்றவரும், சியாமளவர்ணரும் ஆன ஸ்ரீராமசந்திர மூர்த்தியை "ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம" என்று போற்றி நன்மை அடைவோமாக.

ஸ்ரீ சத்யநாராயணர் இராம பட்டாபிஷேக கோலம்

************

திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீராமர்.
பெருமாள் ஒய்யாரமாக தலையை சாய்த்துக் கொண்டிருக்கும் அழகை பாருங்கள்

***********

திருவல்லிக்கேணி ஸ்ரீராமர்

தேவரையுமசுரரையும் தி்சைகளையும் படைத்தவனே!

யாவரும்வந்தடிவணங்க அரங்கநகர் துயின்றவனே!

காவிரிநல்நதிபாயும் கணபுரத்தென்கருமணியே

ஏவரிவெஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ.

*************

திருவிண்ணகர் ஸ்ரீராமர்

********

மதுராந்தகம் ஏரி காத்த ராமர்

துவயம் விளைந்த இந்த ஷேத்திரத்தில் இலக்குவனின் பின் புறம் அம்புறாத்தூணி உள்ளதையும் அதே சமயம் கருணா முர்த்தி இராமபிரானின் பின் புறம் அம்புறாத்தூணி இல்லாததை கவனித்தீர்களா? அன்பர்களே.

(படங்களின் மேல் கிளிக்கினால் படத்தை பெரிதாக காணலாம்)

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்

ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்

* * * * * * * * *

4 comments:

  1. காணக் கண்கோடி வேண்டும்...மிக அழகான படங்கள்...

    மிக்க நன்றி கைலாஷி ஐயா.

    படங்களை நான் காபி செய்து கொள்ள உங்கள் அனுமதி தேவை....செய்யலாம் என்றால் சொல்லுங்கள் காபி செய்து கொள்கிறேன்

    ReplyDelete
  2. மிக்க நன்றி கைலாஷி ஐயா.

    ReplyDelete
  3. மிக்க நன்றி மதுரையம்பதி ஐயா, தாங்கள் தாராளமாக படங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    ReplyDelete
  4. வருகைக்கும் சேவித்தத்ற்க்கும் நன்றி குமரன்.

    ReplyDelete