கோகுலாஷ்டமி நாளான இன்று சென்னை மேற்கு மாம்பலம் சத்ய நாராயணப் பெருமாளின் கண்ணன் திருக்கோலம் சிலவற்றைக் கண்டு களியுங்கள் அன்பர்களே.
(வெண்ணெய்த்தாழி கிருஷ்ணன் கோலம்)
வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர்தூவிட
கண்ணன்முற்றம் கலந்தளறாயிற்றே. -பெரியாழ்வார்
பெருமாளின் பின்னழகு
ஆணிப்பொன்னாற்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
பேணியுனக்கு பிரமன்விடுதந்தான்
மாணிக்குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ
பெருமாள் கீதாச்சாரியன் கோலம்
சத்ய நாராயணப் பெருமாள் பார்த்தசாரதி பெருமாள் அலங்காரம்
பெருமாள் வலக்கையில் சங்கம், இடக்கை " என்னை சரணடைவாய் நான் உன்னை கடைத்தேற்றுவேன்" ( மாம் ஏகம் சரணம் வ்ரஜ) என்னும் வரத முத்திரை. திருமுகத்தில் சாரதிக்கே உரிய மீசை.
அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்
தரிசித்தேன்.
ReplyDeleteமிக்க நன்றி கோவி ஐயா.
ReplyDelete