Saturday, August 25, 2007

Narasimhar -2

Visit BlogAdda.com to discover Indian blogs
ந்ருஸிம்ஹ அவதாரத்தைப் பற்றி ஆழ்வார்களின் அருளிச் செயல்கள்




நரசிம்ம அவதாரத்தை பெரியாழ்வார் தமது திருப்பல்லாண்டிலே
இவ்வாறு அனுபவிக்கின்றார்.

......திருவோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை
பந்தனை தீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே!

பிரதோஷ காலத்தில் ( அதாவது மாலை நேரத்தில் - இரவும் அல்லாது பகலும் அல்லாத நேரத்தில்) சிங்க உருவில் தோன்றி இரணியணை அழித்த பெருமாளின் நடுக்கம் தீர பல்லாண்டு பாடுவோம்.

நரசிம்ம அவதாரம் மற்ற அவதாரங்களைப் போல இல்லாமல் பிரகலாதன் என்னுடைய நாராயணன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்( ஸர்வ வியாபன்) என்றவுடன், பரம பக்தனான அவனுடைய வார்த்தையை மெய்ப்பிப்பதற்காக உடனே எடுத்த அவதாரம் அதுவும் புத்திசாலித்தனமாக இரண்யகசிபு பெற்ற வரத்தை முறியடிப்பதற்காக எடுத்த அவதாரம். பெருமாள் அவசரமாக பெரிய பிராட்டியார், கருடன் மற்றும் மற்ற நித்ய சூரிகள் உடன் வராமல் தான் மட்டும் அதி வேகமாக வந்து பிரகலாதனைக் காப்பாற்றியதால் பெருமாளுக்கு ஏற்பட்ட நடுக்கம் தீர நாம் பல்லாண்டு பாடுவோம் என்று அனுபவிக்கின்றார் பட்டர் பிரான் தம் பாசுரத்தில்.



முன் நரசிங்கமதாகி அவுணன்

முக்கியத்தை முடிப்பான் மூவுலகில்

மன்னரஞ்சும் மதுசூதனன்......
முன் ஒரு காலத்தில் நரசிங்கமாகி இரணியனின் ஆணவத்தை அழித்தவர் பெருமாள் என்று பாடுகிறார் பெரியாழ்வார்.


அதிருங்கழற் பொருதோள் இரணியணாகம் பிளந்து அரியாய்

உதிரமளைந்தகையோடிருந்தானை உள்ளவாகண்டாருளர்.

ஸர்வேஸ்வரனை கண்டவர்கள் உள்ளனர் என்று கூற வரும் போது இரணியனின் மார்பை வஜ்ர நகங்களால் பிளந்து உதிரக் கரங்களுடன் பெருமாளை கண்டவர் உளர் என்று பாடுகின்றார்.

வல்லெயிற்றுக்கேழலுமாய் வாளெயிற்றுச்சீயமுமாய்

எல்லையிலாத் தரணியையும் அவுணனையுமிடந்தானூர்

..........மதிளரங்கமென்பதுவே.

வராக அவதாரம் எடுத்து பூமி பிராட்டியாரை மீட்க இரண்யாக்ஷ்னையும், நரசிங்க அவதாரம் எடுத்து இரணியணையும் அழித்தவர் பெருமாள் உறையும் இடம் திருவரங்கம்.

குடங்களெடுத்தேறவிட்டு கூத்தாடவல்ல வெங்கோவே!
மடங்கொள் மதிமுகத்தாரை மால் செய்யவல்லவென் மைந்தா!
இடந்திட் டிரணியன் நெஞ்சை இருபிளவாக முன் கீண்டாய்!
குடந்தை கிடந்த வெங்கோவே! குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்.

குரவைக் கூத்து ஆடும் எம் மைந்தனே! மதி போன்ற முகம் படைத்த ஆய்க்குல மங்கையரை மயக்கும் அழகனே! இரணியன் மார்பை இரு கூறாக பிளந்த குடந்தை கிடந்த ஆராவமுதே குருக்கத்திப் பூ சூட வா என்று யசோதையாய் மாறி அழைக்கின்றார் பெரியாழ்வார்.

உரம்பற்றியிரணியனை உகிர்நுதியா லொள்ளியமார்புறைக்கவூன்றி
சிரம்பற்றிமுடியிடியக்கண்பிதுங்க வாய்லரத்தெழித்தான் கோயில் ......



என்பதெல்லாம் பெரியாழ்வாரின் நரசிம்ம அவதாரத்தைப்
பற்றிய அருளிச் செயல்கள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home