கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
அன்பர்கள் அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள். கண்ணன் கேசவன் பிறந்த இந்நாளில் அவனது பால லீலைகளை திருக்கோவில்களில் அனுபவித்த திருக்கோலங்களை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உடன் பெரியாழ்வார் மற்றும் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பாடல்கள்.
தொட்டமளுர் ஸ்ரீ கிருஷ்ணர்
வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர்தூவிட
கண்ணன்முற்றம் கலந்தளறாயிற்றே.
கண்ணன் யசோதையின் திருமகனாய் ஆயர்ப்பாடியில் பிறந்தவுடன் ஆயர்கள் எண்ணெயையும் சுண்ணத்தையும் மகிழ்ச்சி மிகுதியால் தூவிக் கொண்டாடியதை அற்புதமாகப் பாடுகின்றார் பெரியாழ்வார்.

சென்னை மயிலை ஆதிகேசவப் பெருமாள்
காளிங்க நர்த்தனக் கோலம்
சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி
கோதைக்குழலாள் அசோதைக்கிப்போதந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர் வந்து காணீரே.
பால கிருஷ்ணனின் அடி முதல் முடிவரை அழகை அனுபவிக்க கோபியரை அழைக்கும் யசோதையின் பாடலாக பெரியாழ்வார் பாடிய பாடல்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள்
கோவர்த்தன கிரி தாங்கிய கோலம்

மாணிக்கங்கட்டி வயிரமிடைகட்டி
ஆணிப்பொன்னாற்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
பேணியுனக்கு பிரமன்விடுதந்தான்
மாணிக்குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ
யசோதை பாடிய தாலாட்டுப்பாடல் மாணிக்கம், வயிரம் பதித்து ஆணிப்பொன்னாற் செய்த அற்புதத் தொட்டிலை பிரம்மன் உனக்கு அளித்தான் அதில் கண்ணுறங்கு என் கண்ணே என்று யசோதைநங்கை பாடுகின்றாள்.
இராஜமன்னார்குடி இராஜமன்னாரின்
கொஞ்சும் அழகு

எண்ணெய்க் குடத்தையுருட்டி இளம்பிள்ளைகிள்ளியெழுப்பி
கண்ணைப்புரட்டிவிழித்துக் கழக்கண்டுசெய்யும்பிரானே!
உண்ணக் கனிகள்தருவன் ஒலிகடோதநீர்போலே
வண்ணமழகியநம்பீ! மஞ்சனமாடநீவாராய்
கண்ணனின் பால லீலைகளைக் கூறி இவ்வாறு குறும்புத்தனங்கள் செய்யும் என் கண்ணா நீராட வா என்று யசோதை அழைக்கும் பாடல்.
தேரழுந்தூர் ஆமருவியப்பன் தாயாருடன்
குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லவெங்கோவே
மடங்கொள்மதிமுகத்தாரை மால்செய்யவல்லவென்மைந்தா
இடந்திரட்டிரணியன்நெஞ்சை இருபிளவாகமுன்கீண்டாய்!
குடந்தைகிடந்தவெங்கோவே குருக்கத்திப்பூச்சூட்டவராய்.
கண்ணனை யசோதை பூச்சூட்ட அழைக்கும் பாடல்.
திருப்பதி மலையப்பசுவாமி சந்திரப்பிரபையில்
வெண்ணெய்த் தாழி கி்ருஷ்ணன் கோலம்
பல்லவிஅவதாரம் ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்
அகில புவனமானந்தக்கடலாட அமரருலகம் அது பொமுதுறவாட
நிகில வேத முறைபாட மொழி கூட நேராகக் கஞ்சனின் நெஞ்ச முறவாடும் (அ)
அனுபல்லவி
புவிபாரம் தனைத் தீர்க்க
பூமகள் முறை கொண்டார்க்க
தவமெல்லாம் தேவகி சேர்க்க
தன் தவமனைத்தும் வஸூதேவனெண்ணிப் பார்க்க
தாமரையந்தள மானதுவோ தடமெங்கிலும் கந்த நிறைந்ததுவோ அல
காமனையான சராசரமானது கண்ணனருவையும் எண்ணியதோ என (அ)
சரணம்
வடமதுரை நகர் எங்கும் தூங்க - சிறை
வாசலிருந்த நிசாசரர் தூங்க
திடமுடைய கஞ்ச ராஜனும் தூங்க
தேவகி வஸூதேவன் சிந்தையிலே ஓங்க
திகிரி சங்க செந்தாமரைக் கதையும்
திகழுவனமாலையொடு கௌஸ்துபமணி
மகர குண்டல கேயூர ஹாரமொடு
மந்த நகை போட்டியிட மாதவனுக்குகந்த திரு (அ)
மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனத்தில்
வெண்ணெய்த் தாழி கிருஷ்ணர் கோலம்
பல்லவி
கண்ணன் பிறந்ததைக் கொண்டாடினார்
கறவையோடு கன்றினங்களும் கலந்து மாமே எனக் கூவ
கன்னியயரானவர் மாமலர் சூடி தன்னிலையாகவும் துள்ளி விளையாட (க)
அனுபல்லவி
எண்ணம் கொழித்த்த இயலாலும் நந்தன்
எட்டின வயதோ ஐம்பதானாலும்
வண்ணம் கொழித்தான் இருபது வயதானாற் போலும்
வளைய வளைய வந்தான் அந்தபுரத்தோடும்
ம. காலம்
வந்தவர் போனவர் யாரைக் கண்டாலும் வாயொடு முப்பத்திரண்டு காணும்
வாழைகமுகு தோரணங்களானவை வரிசை தவறாது மனையெங்கும் தோணும்
சொந்தமாக பெருமூச்செரிந்தவிரஜ சுந்தரிகளைக் கண்டால் ஒன்று தோன்றும்
தூயவன பிறந்தது இன்னவருக்கா அல்ல யசோதைக்காஎன
ஸந்தேகம் தோணும் (க)
சரணம்
மாகத சூத வந்திகளானவர் மங்கள வார்த்தைகள் கூற
மத்தள பேரிகை கொட்டு முழக்கங்களும் வாழி வாழி என்று சொல்லி
நல்வரவு கூற
கோகுலம் எங்கணும் கோலங்கள் ஜாலங்கள் கொடிகள்
விதானங்கள் கொண்டாட்டமாக
கொம்பொடு வர்ணங்களும் மாலைகளும் சூடி குதித்து குதித்து
எங்கும் தாளங்கள் போட
ம.காலம்
விலையழிந்த பொன்னங்கி மகுடமொடு வெகுவணிந்த கோபாலர்கள் கூடி
விதவிதமாகின பொருளதைச் சுமந்து விரைவில் நந்தனது மனையினை நாடி
அலைகுழல் வாரி முடித்த சொருக்கியர் அஞ்சன குங்குமமும் இடம் மாறி
அவஸரமாகவும் நகையும் இடம்மாறி அய்யனைக் கண்டதும் மோகம் தகைக்கேறி (க)

மலையப்பசாமி சூரியப்பிரபையில்
வேணு கோபாலர் கோலம்
வேணு கோபாலர் கோலம்
சீலைக்குதம்பையொருகா தொருகாதுசெந்நிறமேல்தோன்றிப்பூ
கோலப்பணைக்கச்சும்கூறையுடையும் குளிர்முத்தின்கோடாலமும்
காலிப்பின்னேவருகின்ற கடல்வண்ணன்வேடத்தைவந்துகாணீர்
ஞாலத்துப்புத்திரனைப் பெற்றார் நங்கைமீர்! நானே மற்றாருமில்லை.
பிருந்தாவனத்திலே சென்று கன்று மேய்த்து வந்த கண்ணபிரானின் திருக்கோலம் கண்டு பெருமிதத்துடன் யசோதை பாடிய பாடல்.

Labels: கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணாஷ்டமி, கோகுலாஷ்டமி, ஸ்ரீ ஜெயந்தி
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home