Saturday, August 15, 2009

அட்ரா சக்கை நமக்கும் கூட விருது ! ! !

Visit BlogAdda.com to discover Indian blogs

நம்பமுடியவில்லைதான் ஆயினும் உண்மை. கவிதாயினி கவிநயா அவர்கள் மிக்க அன்பு கூர்ந்து அடியேனின் வலைப்பூவும் சுவாராசியமான வலைப்பூ என்று விருது கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்சமயம் அலுவலக வேலைப் பளு அதிகமாகி விட்டதால் அதிக நேரம் வலைப் பக்கம் செலவிட முடியாததால் எதோ இத்தனை நாளும் ஏதோ கிறுக்கிக் கொண்டு இருந்ததையும் நிறுத்திக் கொள்ளலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்த போது இந்த விருதைக் கொடுத்து இன்னும் சிறிது காலம் உங்கள் முடிவை தள்ளிப் போடுங்கள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கின்றார்கள்.

இவ்விருதை வாங்கியவர்களுக்கும் ஒரு பொறுப்பு உண்டு அதாவது அதை மேலும் ஆறு பேருக்கு பகிர்ந்து தர வேண்டும் என்பதுதான். எனவே அடியேன் தேர்ந்தெடுத்த ஆறு பேர்.

குமரன் அவர்கள். கவிநயா அவர்கள் தனக்கு கிடைத்த இரு விருதுகளில் இவருக்கு நல்ல நண்பர் என்னும் விருதை அளித்தார். என்னுடைய பதிவுகள் சுவாரசியமானது இல்லையா? என்று சிறு ஆதங்கப்பட்டிருந்தார் எனவே இவருக்கு அடியேன் இவ்விருதை வழங்குகின்றேன்.

என்ன அவருக்கு தகுதியில்லையா? என்று யாரோ பல்லைக் கடிக்கும் சத்தம் கேட்கின்றது, கோபப்படாதீர்கள் ஐயா, குன்றின் மேல் இட்ட விளக்காகத்தான் குமரன் ஐயா ஒளி விடுகின்றாரே. ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றேன். தமிழ் மணத்தின் நட்சத்திரமாக இரண்டு தடவை இருந்தவர்கள் மிகச் சிலரே அவர்களுள் இவர் ஒருவர். குமரன் ஐயா ஆன்மீகம் மற்றும் தமிழ் இலக்கியம் குறித்து இன்னும் பல ஆயிரம் பதிவுகள் இட வேண்டுகிறேன்.

சிவமுருகன் அவர்கள். மதுரை மீனாக்ஷி அம்மனைப் பற்றியும் அம்மன் திருக்கோவிலைப் பற்றியும் இவர் எழுதிய வலைப்பூ ஒரு Phd பட்டத்தை இவருக்கு பெற்று தந்திருக்கும் அனைத்து படங்களையும் வலையில் தேடி தேனி போல சேகரித்து தந்த அவருக்கு வாழ்த்துக்கள். ஐயா தங்களுடைய சேவை இன்னும் தொடரவேண்டுமென்று அந்த அங்கயற்கண்ணி அம்மையிடம் வேண்டிக்கொள்கிறேன்.

மதுரையம்பதி என்னும் சந்திரமௌலி ஐயா அவர்கள். மிகவும் சுவையாக சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கு இவர் தரும் விளக்கங்களுக்காகவே இவர் வலைப்பூ பக்கம் அடிக்கடி செல்லுவேன். இவரின் சௌந்தர்ய லஹரி வலைப்பூ அடியேனுக்கு மிகவும் பிடித்தது நீங்களும் சென்று பாருங்களேன். மௌலி ஐயா அன்னை நீங்கள் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் எழுத அருள் புரியட்டும்.

தி.ர.ச என்றழைக்ப்படும் சந்திரசேகரன் ஐயா அவர்கள். முருகன் அருள் முன்னிற்கும் என்று முருகன் பாட்டுகளை அளிப்பவர். திருப்புகழின் விளக்கங்களுக்காவே இவரது பதிவுகளுக்கு அவசியம் அனைவரும் செல்ல வேண்டும். நமசிவாய வாழ்க என்னும் சிவன் பாட்டு, கண்ணன் பாட்டு. முருகனருள் என்னும் முருகன் பாட்டு மற்றும் இசை இன்பம் என்னும் பாடல் வலைப்பூ அனைத்திலும் இவர் பங்களிப்பு உண்டு. ஐயா அந்த ஆறுபடையப்பன் தங்களுக்கு நல்லருள் வழங்க பிரார்த்திக்கின்றேன்.

ச்சின்னப்பையன் . வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். ஆகவே நீங்கள் சிரிக்க வேண்டும் என்றால் இவர் வலைப்பூவிற்க்கு செல்லுங்கள். நிச்சயம் ஏமாற மாட்டீர்கள்.

பழமைபேசி. எல்லாரும் புதுமையாக மாற வேண்டும் என்று அலையும் இந்த நாகரீக காலத்தில் பழமையிலும் அர்த்தம் உண்டு என்று அருமையாக எழுதி வருபவர். கொங்கு நாட்டுக்காரர் , பல தமிழ் சொற்களுக்கு அருமையான விளக்கங்கள் தருபவர். கவி காளமேகத்துடன் இவர் உரையாடும் உரையாடல் அத்தனையும் சுவையானவை. தமிழ் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் தவறாமல் செல்லவேண்டிய பதிவுகள்.

இன்னும் பலருக்கு கொடுக்க ஆசை தான் ஆயினும் நேரமின்மை காரணமாக இத்துடன் நிறைவு செய்து கொள்கிறேன் இவர்கள் அறுவரும் ஆறு ஆறு பேருக்கு அளித்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

12 Comments:

Blogger தி. ரா. ச.(T.R.C.) said...

கைலாசி அவர்களே நன்றி அடியேனைப் பற்றி தங்கள் பதிவில் பதித்தமைக்கு. மற்றபடி பட்டங்களுக்கு நான் தகுதியா என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட சமயங்களில் மறைந்த திருமதி. டி.கே பட்டம்மாள் பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது. "பட்டம் பதவி பெறபாடவில்லை ஐயா எனக்கு தங்கப் பதக்கங்களும் தேவையில்லை. எட்டு எட்டு திக்கிலும் ஓடவில்லை முருகா உன்னை என்றும் மறந்தேனிலை"உங்கள் விருபத்தை பூர்த்தி செய்ய முயல்கிறேன்.

August 16, 2009 at 11:06 PM  
Blogger மெளலி (மதுரையம்பதி) said...

என்னையும் நினைவிலிருத்தி, இந்த விருது அளித்தமைக்கு நன்றிகள் கைலாஷி சார். இதற்குப் பிறகாவது சுவாரஸ்யமாக எழுத முயற்சிக்கிறேன்.

August 17, 2009 at 3:32 AM  
Blogger பழமைபேசி said...

தங்களது மேலான சிறப்புக்கு அடியேன் எமது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

பணிவுடன்,
பழமைபேசி.

August 17, 2009 at 3:34 AM  
Blogger சின்னப் பையன் said...

ஆஹா... மிக்க மகிழ்ச்சி நண்பரே... கருடசேவை செய்திகள்/ படங்களுக்காக உங்களை என்றுமே நினைவில் வைத்திருப்பேன்... தொடரட்டும் உங்கள் சேவை....

August 17, 2009 at 3:43 AM  
Blogger Kavinaya said...

பதிவிற்கு மிக்க நன்றி கைலாஷி ஐயா. நீங்கள் விருதளிப்பதற்கும் மிகச் சிறப்பான நண்பர்களையே தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். அவர்களுக்கும் வாழ்த்துகள்.

August 17, 2009 at 5:45 AM  
Blogger S.Muruganandam said...

//"பட்டம் பதவி பெறபாடவில்லை ஐயா எனக்கு தங்கப் பதக்கங்களும் தேவையில்லை. எட்டு எட்டு திக்கிலும் ஓடவில்லை முருகா உன்னை என்றும் மறந்தேனிலை"//

அடியேன் உள்ளிருந்து நடத்துபவனும் அந்த அழகன் முருகனே. அடியேன் என்னை மறந்தால்தான் முருகனை மறக்கமுடியும் எனென்றால் அடியேனுக்கு அவர் பெயர்தான்.

வாழ்த்துக்கள் சந்திரசேகரர் ஐயா.

August 17, 2009 at 11:47 PM  
Blogger S.Muruganandam said...

//இதற்குப் பிறகாவது சுவாரஸ்யமாக எழுத முயற்சிக்கிறேன்.//

இப்படி ஒரு அர்த்தமும் இருக்கா ????

August 17, 2009 at 11:48 PM  
Blogger S.Muruganandam said...

//தங்களது மேலான சிறப்புக்கு அடியேன் எமது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.//

தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

August 17, 2009 at 11:48 PM  
Blogger S.Muruganandam said...

//கருடசேவை செய்திகள்/ படங்களுக்காக உங்களை என்றுமே நினைவில் வைத்திருப்பேன்...//

திருவல்லிக்கேணி பக்கம் செல்லும் போது எப்போதும் தங்களுக்காகவும் பார்த்தசாரதிப் பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறேன் அன்பரே, வளர்க தங்கள் தொண்டு.

August 17, 2009 at 11:50 PM  
Blogger S.Muruganandam said...

//அவர்களுக்கும் வாழ்த்துகள்.//


நன்றி கவிநயா, தாங்கள் வாழ்த்துக்களை அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

August 17, 2009 at 11:52 PM  
Blogger குமரன் (Kumaran) said...

ஆதங்கம் எல்லாம் படவில்லை கைலாஷி ஐயா. சும்மா விளையாட்டிற்குத் தான் சொன்னேன். பாருங்கள் விளையாட்டு வினையாகியது - நீங்கள் இப்போது என் பதிவெல்லாம் சுவையாரமானது என்று சொல்ல வேண்டி வந்துவிட்டது. :-( :-)

எப்படி கிடைத்தால் என்ன விருது விருது தானே. இல்லையா? :-) அதனால் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா.

நீங்கள் விருது தந்தவர்களில் பாதி பேர் மதுரைக்காரர்கள். எதற்காக மதுரைக்காரர்களுக்கு இவ்வளவு ஐஸ்? :-)

August 24, 2009 at 4:16 PM  
Blogger S.Muruganandam said...

//நீங்கள் விருது தந்தவர்களில் பாதி பேர் மதுரைக்காரர்கள். எதற்காக மதுரைக்காரர்களுக்கு இவ்வளவு ஐஸ்? :-)//

அப்படியா? நல்லா கவனிச்சிருக்கீங்க குமரன் ஐயா, மிக்க நன்றி.

September 3, 2009 at 8:21 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home