Tuesday, November 11, 2008

நாச்சியார் கோவில் கல் கருட சேவை - 3

Visit BlogAdda.com to discover Indian blogs
கல் கருட சேவையின் போது ஒரு அற்புதம் நடைபெறுகின்றது. அதாவது கருடனின் கனம் (எடை) அதிகமாகிக்கொண்டே போவதுதான். சன்னதியிலிருந்து வெளியே வரும்போது கருடனை நான்கு பேரால் ஏழப்பண்ண முடியும் அதுவே பிரகாரத்தை சுற்றி வரும்போது எட்டு பேர் வேண்டும், அடுத்து பதினாறு பேர், பின்னர் வெளியே வரும் போது முப்பத்திரெண்டு பேர் வெளியே வந்தவுடன் அறுபத்து நான்கு என்று நான்கின் மடங்கில் அதிகமாகிகொண்டே போகும் அதிசயம் நடைபெறும், அதே பெருமாள் திரும்பி வரும் போது அதே விகிதத்தில் எடை குறைந்து கொண்டே வரும்.




முனையார் சீயமாகி அவுணன் முரண் மார்வம்
புனை வாளுகிரால் போழ்படஈர்ந்த புனிதனூர்
சினையார் தேமாஞ் செந்தளிர் கோதிக்குயில் கூவும்
நனையார் சூழ்ந்த அழகான நறையூரே.

இப்பாசுரம் திருநறையூர் நம்பியையே ஆச்சாரியனாக பெற்ற திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த 110 பாசுரங்களுள் ஒன்று.







இவ்வாறு ஏன் நடைபெறுகின்றது. ஒரு விளக்கம் பெருமாள் மேதாவி முனிவருக்கு கொடுத்த வரம், தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகின்றாள் அன்னமோ நளினமான பறவை, பெருமாளோ கருடனில் எழுந்தருளுகின்றார். கருடன் பலம் மிகுந்த அதே சமயம் வேகமாக செல்லக்கூடிய பறவை. எனவே கருடன் அன்னத்தின் பின்னே செல்ல வேண்டுமல்லாவா? எனவே கல் கருடனின் எடை கூடிக்கொண்டே செல்கின்றது. ஆகவே இப்போதும் தாயாருக்கு முதலிடம் .

இரண்டாவது விளக்கம். நாம் பெருமாளுடன் ஒன்றியிருக்கும் போது நம் விணைகளின் சுமை குறைவாக இருக்கும், அதுவே நாம் பெருமாளை விட்டு விலகி செல்லும் பொது அதுவே மிகப்பெரிய சுமையாகி விடுகின்றது என்பதை இது குறிப்பால் உணர்த்துகின்றது. அதாவது பூரண சரணாகதி ஒன்று தான் நாம் உய்ய ஒரே வழி என்பதைத்தான் இதுவும் உணர்த்துகின்றது.



அது போலவே பெருமாளை தாங்கி உலா வருவதால் கல் கருடன் முகத்தில் வியர்வை வரும் அதிசயத்தையும் காணலாம். ( தகவலுக்கு நன்றி வல்லி சிம்ஹன் அம்மா)



திருநறையூர் நம்பியின் பேரெழிலை திருமங்கை மன்னன் பெரிய திருமடலில் பாடியவாறு

மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல்
பொன்னியலு மாடக் கவாடம் கடந்து புக்கு

என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் - நோக்குதலும்
மன்னன் திருமார்பும் வாயுமடியிணையும்

பன்னுகரதலமும் கண்களும் - பங்கயத்தின்
பொன்னியல் காடு ஓர் மணிவரை மேல் பூத்தது போல்

மின்னொளி படைப்ப வீழ்நானும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும்

துன்னுவெயில் விரித்த சூளாமணியிமைப்ப
மன்று மரகதக்குன்றின் மருங்கே - ஓர்

இன்னிளவஞ்சிக் கொடியொன்று நின்றதுதான்
அன்னமாய் மானாய் அணி மயிலாய்......

பெருமாளின் ஓடும் புள்ளேறி ஊர்ந்து வரும் அழகைக் கண் களிப்ப நோக்கி களியுங்கள் அன்பர்களே.

பொங்கேறுநீள்சோதிப் பொன்னாழிததன்னோடும்
சங்கேறுகோலத் தடக்கைப்பெருமானை
கொங்கேறுசோலைக் குடந்தைகிடந்தானை
நங்கோனைநாடி நறையூரில் கண்டேனே.

என்று நம் கலியன் அனுபவித்த ஸ்ரீநிவாசப்பெருமாளின் கல் கருட சேவை படங்களை அளித்த அன்பர் தனுஷ்கோடிக்கு ஆயிரம் நன்றிகள்.

Labels: , , ,

7 Comments:

Blogger குமரன் (Kumaran) said...

அடியேனின் நன்றிகளும்.

November 14, 2008 at 6:13 AM  
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

அருமையான அண்மைப் பார்வைப் படங்கள்! அன்பர் தனுஷ்கோடிக்கு நன்றிகள்!

அன்னத்தின் பின்னே கருடன் தகவலும் சுவை! நன்றி கைலாஷி ஐயா!

November 24, 2008 at 10:57 AM  
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

அடியேன் பேராசைப் பெருமகன்! :)
முடிந்தால் தாயார் வஞ்சுளவல்லி படங்களும் கேளுங்களேன்!

November 24, 2008 at 10:59 AM  
Blogger Raghav said...

திருக்கண்டேன்.. எம்பெருமான் கல்கருட சேவை கண்டேன், உங்கள் பதிவு மூலமாக. நேரில் தரிசித்திராவிட்டாலும்.. தங்கள் பதிவு அந்த உணர்வை என்னுள் ஏற்படுத்துகிறது. நேரில் தரிசிக்கும் பாக்கியத்தை கருடாரூடன் அருள வேண்டுகிறேன்.

நன்றி கைலாஷி ஐயா..

November 24, 2008 at 11:11 PM  
Blogger S.Muruganandam said...

//அருமையான அண்மைப் பார்வைப் படங்கள்! அன்பர் தனுஷ்கோடிக்கு நன்றிகள்!//

தங்கள் நன்றியை தனுஷ்கோடி அவர்களுக்கு தெரிவித்து விடுகின்றேன் KRS ஐயா.

November 25, 2008 at 7:29 AM  
Blogger S.Muruganandam said...

//அடியேன் பேராசைப் பெருமகன்! :)
முடிந்தால் தாயார் வஞ்சுளவல்லி படங்களும் கேளுங்களேன்!//

தாயாரின் படங்கள் கல் கருட சேவை -1 உள்ளன ஐயா.

November 25, 2008 at 7:30 AM  
Blogger S.Muruganandam said...

//திருக்கண்டேன்.. எம்பெருமான் கல்கருட சேவை கண்டேன், உங்கள் பதிவு மூலமாக. நேரில் தரிசித்திராவிட்டாலும்.. தங்கள் பதிவு அந்த உணர்வை என்னுள் ஏற்படுத்துகிறது. நேரில் தரிசிக்கும் பாக்கியத்தை கருடாரூடன் அருள வேண்டுகிறேன்.//

நம்பிக்கையுடன் வேண்டுபவர்களை பெருமாள் என்றும் கை விடுவதில்லை. மார்கழி மாதம் பகல் பத்து உற்சவத்தின் போதும் பங்குனி பிரம்மோற்சவத்திலும் கல் கருட சேவை நடைபெறுகின்றது.

தங்களூக்கு கருட ஸேவை கிடைக்க அவரை வேண்டுகிறேன்.

November 25, 2008 at 7:33 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home