மாதவப் பெருமாள் கருட சேவை
மாதவன் என்று ஓதவல்லீரேல்
தீதொன்றும் அடையா ஏதம் சாராவே - நம்மாழ்வார்
மயூரபுரி என்னும் திருமயிலையில் திருமகளும், மண்மகளும் உடன் அமர ஆனந்த நிலைய விமானத்தில் அமர்ந்த கோலத்தில் கல்யாண மாதவ்னாக சேவை சாதிக்கின்றார் பெருமாள். தாயார் அமிர்தவல்லியாகவும், பெருமாள் ஸ்ரீ ராமராகவும், மஹா லக்ஷ்மி தாயாருக்கு சமர ஸ்லோகத்தை உபதேசிக்கும் பூவராஹராகவும் கூட சேவை சாதிக்க்கின்றனர் இத்தலத்தில் , ஆண்டாள் நாச்சியாருக்கும் தனி சன்னதி உள்ளது.
இத்தலத்தில் அமைந்துள்ள சந்தான புஷ்கரணி முன்பு பிருகு முனிவரின் ஆசிரமாக இருந்தது. மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று சகல தீர்த்தங்களும் இப்புஷ்கரணியில் கலப்பதாக ஐதீகம். அன்று இக்குளத்தில் நீராடினால் புத்திபப்பேறு கிட்டும், சகல செலவமும் கிட்டும் என்று பிரம்மண்ட புராணத்தில் மயூரபுரி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.
"மாதவன் பேர் சொல்வதே ஒத்தின் சுருக்கு", அதாவது வேதத்தின் சாரம் மாதவன் என்னும் நாமாவை கூறுதலே என்று பாடுகின்றார் பூதத்தாழ்வார்.
மருந்து உண்ணும் போது விஷ்ணு என்றும்
உணவு உட்கொள்ளும் போது ஜனார்த்தனா என்றும்
படுக்கச் செல்லும் போது பத்மநாபா என்றும்
திருமண காலத்தில் பிரஜாபதி என்றும்
யுத்த களத்தில் சக்ரதாரி என்றும்
இறுதி காலத்தில் நாராயணா என்றும்
நண்பர்களிடம் ஸ்ரீதரா என்றும்
கெட்ட சொப்பனம் கண்ட பின் கோவிந்தா என்றும்
சங்கட காலங்களில் மதுசூதனா என்றும்
தனி வழி செல்லும் போது நரசிம்மா என்றும்
நெருப்பினால் துன்பம் உண்டாகும் போது ஜலசாயினே என்றும்
தண்ணீரில் துன்பம் உண்டாகும் போது வராஹா என்றும்
மலை ஏறும் போது ரகு நந்தனா என்றும்
வீதியில் நடக்கும் போது வாமனா என்றும்
எங்கும் எப்போதும் மாதவா என்றும்
பெருமாளின் பதினாறு நாமாக்களை கூற நன்மை என்று இத்திருக்கோவிலில் ஒரு கல் வெட்டில் கண்டதை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சோர்வினால் பொறுள் வைத்ததுண்டாகில்
சொல்சொல்லென்று சுற்றமிருந்து
ஆர்வினாலும் வாய் திறவாதே
அந்தக்காலம் அடைவதன் முன்னம்
மார்வமென்பதோர் கோயிலமைத்து
மாதவன் என்பதோர் தெய்வத்தை நாட்டி
ஆர்வமென்பதோர் பூவிட வல்லார்க்கு
அரவதண்டத்திலுய்யலுமாமே. _ பெரியாழ்வார்
வானுடைய மாதவா! கோவிந்தா! என்றழைத்தக்கால்
நலமுடை நாரணன் தன் அன்னை நரகம்புகாள்.
ப்ருந்தாரண்ய ஸமீபிஸ்த மயூரபுரி வாஸினே
அம்ருதவல்லி நாதாய மாதவாயாஸ்து மங்களம்
மஹதஹ்வய மஹத: ப்ரதயக்ஷ பலதாயினே
ஸ்ரீமதே மாதவாயாஸ்து நித்யஸ்ரீர்: நித்ய மங்களம்
Labels: Garuda Sevai, madhavar, Thirumylai. mylapore
4 Comments:
கருட சேவை மிக நன்றாக அமைந்தது. நன்றிகள் கைலாஷி.
பதிவும், தலப்பெருமையும், படவிளக்கங்களும், இறைவன் நாமாக்களைப் பற்றிய குறிப்புகளும்
சிறப்பாக இருந்தன்.
குறிப்பாக மனத்தில் பதிகிற மாதிரி
நீங்கள் பதிவிட்டிருக்கிற அழகு அருமை.
மிக்க நன்றி. தொடரட்டும் தங்கள் திருத்தொண்டு.
மிகவும் ந்ன்றி குமரன் அவ்ர்களே.
பல்லாண்டு பல்லாண்டு பாடி பரமனை வாழ்த்துவோம்.
தங்களைப் போன்ற அன்பர்கள் தரும் ஊக்கமே மேலும் பதிவுகள் இட ஊக்கமளிக்கின்றது. மிகவும் நன்றி ஜீவி அவர்களே.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home