Monday, December 10, 2007

பகல் பத்து இரண்டாம் நாள்

Visit BlogAdda.com to discover Indian blogs

பகல் பத்து இரண்டாம் நாள்

மேற்கு மாம்பலம் சத்ய நாராயணப் பெருமாள் சத்ய வரதர் திருக்கோலம்


பகல் பத்தின் இரண்டாம் நாள் பெரியாழ்வாரின் மற்ற பத்துக்கள் (3,4,5) சேவிக்கப்படுகின்றன. பெரியாழ்வாரின் அருளிச் செயல்கள் ’திருப்பல்லாண்டும்’, பாகவதஸாரமாகிய ’பெரியாழ்வார் திருமொழி’யும் ஆகும். கிருஷ்ணாவதாரத்தில் மிகவும் ஈடுபாடு கொண்ட பெரியாழ்வார் பாசுரங்கள் பிள்ளைத் தமிழுக்கு ஒரு முன்னோடி.

இன்றைக்கு சேவிக்கப்ப்டூம் பாசுரங்கள் கண்ணனுக்கு முலை கொடுக்க அஞ்சுதல், கன்றின் பின் போக்கியதைக் குறித்து வருந்துதல், கண்ணன் காலிகள் பின் வருவதைக் க்ண்டு மகிழ்தல், கோவர்த்தன மலையை குடையாக எடுத்து ஆயர்கள், ஆநிரை காத்ததை சிறப்பித்தல், கண்ணின் வேய்ங்குழல் ஒசை சிறப்பை பாடுதல், கிருஷ்ணாவதார இராமாவதார சிறப்புகள், சிறிய திருவடி மாருதி அசோக வனத்தில் சீதாப் பிராட்டியாரிடம் கணையாழி அளித்தல் முதலியவற்றைப் பாடி, திருமாலிருஞ்சோலை, திருக்கோட்டியூர், தேவப்ப்ரயாகை, திருவரங்கம்,திருவேங்கடம் ஆகிய திவ்ய தேசங்களின் சிறப்பையும் பாடுகின்றார்.

வடதிசை மதுரை சாளக்கிராமம்
வைகுந்தம் துவரையயோத்தி
இடமுதைவதரியிடவகையுடைய
எம்புருடோத்தமனிருக்கை என்று வட நாட்டு திவ்ய தேசங்களையும் மங்களாசாசனம் செய்திருக்கின்றார் பெரியாழ்வார்.

மானிட சாதியில் தோன்றிற்று ஓர்மானிட சாதியை
மானிடசாதியின் பேரிட்டால் மறுமைக்கில்லை
வானுடை மாதவா! கோவிந்தா! என்றழைத்தக்கால்
நலமுடைநாரணன் தம்மன்னை நரகம்புகாள். என்று மானிடர்களுக்கு அறிவுரை வழங்கிய பெரியாழ்வாரின் திருமொழிகளை இந்த பகல் பத்தின் இரண்டாம் நாள் சேவித்து நன்மையடைவோமாக.

திருவரங்கத்தில் நம் பெருமாள் ஆண்டாள் முத்துக் கொண்டை, பவள முத்து ஹஸ்தங்களுடனும், புலி நகத்துடன் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார்.

திருவல்லிக்கேணியில் இன்று பார்த்தசாரதிப் பெருமாள் வேணு கோபாலன் திருக்கோலம். 2.30 மணிக்கு அருளப் பாடு 6 மணிக்கு உட்புறப்பாடு .

திருமயிலை கேசவப் பெருமாளும் அதே திருக்கோலம்.

4 Comments:

Blogger துளசி கோபால் said...

அருமை.
படத்துடன் விளக்கமும் அருமை.

நன்றி..

காணக் கண் கோடி வேண்டும்

December 10, 2007 at 8:25 PM  
Blogger குமரன் (Kumaran) said...

நாரணன் தம் அன்னை நரகம் புகாள் என்ற பெரியாழ்வார் திருவாக்கிற்கு ஏற்பத் தானே இறைவன் திருப்பெயர்களைக் குழந்தைகளுக்கு வைத்து வாயார அவன் திருநாமங்களைக் கூவி அழைத்துக் கொண்டாடுகிறோம்.

பகல்பத்து இரண்டாம் நாள் தரிசனம் பெற வைத்தமைக்கு மிக்க நன்றி. கைலாஷி.

December 10, 2007 at 8:49 PM  
Blogger S.Muruganandam said...

ஒரு கொடியவன் கூட இறக்கும் சமயத்தில் தன் மகனை நாராயணா என்று அழைத்ததனால் வைகுந்தம் அடைந்தான் எனவேதான் ஆழ்வார் பிள்ளைகளுக்கு கோவிந்தா! மாதவா! கேசவா! நாராயணா! என்று பெயரிட்டு அழையுங்கள் என்று அனைவருக்கும் நல்ல வழி காட்டுகின்றார்.

December 11, 2007 at 7:20 AM  
Blogger S.Muruganandam said...

வாருங்கள் துளசி கோபால் அவர்களே, வருகைக்கு நன்றி, அவனருளால் சென்ற ஆண்டுகளில் பல்வேறு தலங்களின் பெருமாளின் பல அருட்திருக் கோலங்களை வரும் நாட்களில் வந்து சேவியுங்கள்.

December 11, 2007 at 7:22 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home