Wednesday, December 5, 2007

அஹோபிலம் - 2

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸிம்ஹமுகே ரௌத்ர ரூபிண்யாம்
அபய ஹஸ்தாங்கித கருணா மூர்த்தே
ஸர்வ வியாபிதம் லோக ரக்ஷகாம்
பாப விமோசன துரித நிவாரணம்
லக்ஷ்மி கடாக்ஷ ஸர்வாபீஷ்டம்
அநேகம் தேஹி லக்ஷ்மி ந்ருஸிம்ஹா.


இந்த இடுகையில் நவ நரசிம்மர்களைப்பற்றிப் பார்ப்போம்.

ஜ்வாலாஹோபில மாலோல க்ரோடாகாரச்ச பார்கவ:
யோகாநந்தச் சத்ரவடு பாவனோ நவமூர்த்திய:

என்பது அஹோபில நவநரசிம்ம ஸ்தோத்திரம்.

ஜ்வாலா ந்ருஸிம்ஹர்: எங்கிருக்கிறான் உன் நாராயணன் என்ற ஹிரண்யனின் அறை கூவலுக்கு பதிலாக தூணிலும் இருப்பார்! துரும்பிலும் இருப்பார் என்றவுடன், கோபத்தின் உச்சியில் அவன் தன் கதையினால் தனது ஆயிரம் தூண்கள் கொண்ட அரண்மனையின் ஒரு தூணை தாக்க அதே நொடி சிம்ஹ முகமும், மனித உடலும், வஜ்ர நகங்களும் கொண்டு தோன்றிய கோலமே ஜ்வாலா ந்ருஸிம்ஹர். உக்ர ஸ்தம்பத்தின் கீழே அமைந்துள்ளது ஜ்வாலா ந்ருஸிம்ஹர் சன்னதி. சன்னதியில் மூன்று கோலங்களில் சேவை சாதிக்கின்றார் பெருமாள். முதலாவது தூணில் இருந்து பிரகலாதன் வார்த்தையை மெய்பிக்க நரசிங்கமாக வெளி வரும் கோலம். இரண்டாவதுஹிரண்யன் பெற்ற வரத்தை முறியடிக்க அவனுடன் போரிட்டுக் கொண்டே அவனது தலை முடியைப் பிடித்து அவனை இழுத்துக் கொண்டு உள்ளும் இல்லாமல் வெளியும் இல்லாத தலை வாயிலுக்கு அவனை இழுத்து செல்லும் கோலம். மூன்றாவது கோலம் எட்டு கரங்களுடன் இரணியனை மடியில் கிடத்தி இரு மேற் கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி இரு கரங்களினால் ஹிரண்யன் காலை அழுத்திப் பிடித்துக் கொண்டு இரு கரங்களால் அவனது குடலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொள்ளும் உக்ர கோலம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home