திருப்பாவை # 11
ஸ்ரீ:

கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழிய சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம்பொற்கொடியே!
புற்றவல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்து தோழிமா ரெல்லாம் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்!...........(11)
பொருள்:
கோபாலர்கள், கன்றுகளையுடைய கறவைப் பசுகூட்டங்களைப் பராமரித்து பால் கறப்பர்;பகைவர்களின் வலிமை அழியும்படி போர் புரிவர்; அவர்கள் குற்றமற்றவர்கள். அவர்களது பொற் கொடி போன்ற பாவையே! புற்றில் இருக்கும் பாம்பு போன்ற அல்குலையுடையவளே! காட்டில் திரியும் மயில் போன்ற பெண்ணே! எழுந்து வாடி கண்ணே!
நம் உறவினராகிய பெண்கள் எல்லாரும் வந்து உன் வீட்டு வாசலிலே கூடி நின்று கொண்டல் வண்ணன் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் அண்டர் கோன் அணியரங்கள் கண்ணனின் திருநாமத்தைப் பாடுகின்றோம், செல்வப் பெண்ணே! கொஞ்சம் கூட அசையாமல், வாய் பேசாமல் எதற்காக இப்படி உறங்குகின்றாய், இந்த தூக்கத்திற்கு பொருள் தான் என்ன?
Labels: ஆண்டாள் நாச்சியார், திருப்பாவை, முகில் வண்ணன்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home