பார்த்தசாரதிப் பெருமாள் கருட சேவை
மேற்கு மாட வீதியில் பார்த்தசாரதிப்பெருமாள்
அதிகாலையில் கோபுரவாசல் சாதித்தபின் தெற்கு சந்நிதி தெருவில் முதலில் சேவை சாதித்த பெருமாள் பின் மேற்கு மாட வீதியில் வலம் வந்தார். தாங்கள் பார்க்கும் இப்படங்கள் அப்போது எடுக்கப்பட்டவை. இந்த வீதியில் இறுதியில் உள்ள கங்கை கொண்டான் மண்டபம் வரை பக்தர்களின் தேங்காய், பழம், மலர் மாலைகள் மற்றும் பட்டு துண்டுகளை ஏற்றுக்கொண்டு சேவை சாதித்த பெருமாள் மண்டபம் வந்தவுடன் அப்படியே பின் நோக்கி மாட விதியின் இறுதி வரை சென்று பின்னர் கருடனில் பறந்து வருவது போலவே அற்புதமாக மேள சத்ததிற்கு ஏற்றவாறு ஆடி வரும் அந்த அழகை எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை.
அலை கடல் ஓரத்தில் மக்கள் கடலின் நடுவே கருடசேவை தந்தருளும் பெருமாள்
பெருமாள் பின்னழகு
கங்கை கொண்டான் மண்டப வாயிலின் முன்பு
கங்கை கொண்டான் மண்டபத்தில் பெருமாள்
மண்டபத்தில் சிறிது நேரம் மண்டகப்படி கண்டருளி பின்னர் வடக்கு கிழக்கு மாட வீதிகள் வழியாக வாகன மண்டபத்தை அடைந்து பின்னர் ஒற்றை ரோஜா மாலையுடன் ஏகாந்த சேவை சாதித்த வண்ணம் அலங்கார மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றார்.
சிறுவர்களின் பெருமாள்
திருவல்லிக்கேணியில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் சேவை சாதிக்கும் போது அவரைப் போலவே சிறிய பெருமாள்களை அதே போலவே அலங்காரம் செய்து பின்னே சிறுவர்கள் வலம் வருவார்கள். அது போல வந்த ஒரு கருட சேவையை தாங்கள் காண்கின்றீர்கள்.
பின் புறம் கூட தாமரை மலர்களுடன் தத்ரூபமாக அலங்காரம் செய்துள்ளனர்.
இன்னொரு கருட சேவை
Labels: கங்கை கொண்டான் மண்டபம், சித்திரை பிரம்மோற்சவம், திருவல்லிக்கேணி
2 Comments:
அற்புதமா சொல்லியிருக்கீங்க, என் வந்தனங்கள் உங்கள் இறைச்சேவைக்கு :) உங்கள் வலைத்தளத்தில் வாசிக்க இன்னும் ஏராளமானவை இருக்கின்றன.
சமயம் கிடைக்கையில், ”எனது தினம் ஒரு பாசுரம்” இடுகைகளை வாசிக்கவும்,
https://medium.com/tag/vaishnavam
நன்றி.
எ.அ.பாலா
http://balaji_ammu.blogspot.com
வாருங்கள் பாலா. நன்றாக இன்னும் படியுங்கள். வலைப்பூ அதற்காகத்தானே உள்ளது.
தங்கள் தினம் ஒரு பாசுரம் வலைத்தளத்தை அடியேனும் அடிக்கடி சென்று பார்க்கிரேன். விளக்கவுரையுடன் அருமையாக உள்ளது.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home