Sunday, December 27, 2009

தமிழுக்கு ஏற்றம் தரும் விழா - 3

Visit BlogAdda.com to discover Indian blogs
சென்ற வருட வைகுண்ட ஏகாதசி சேவைகள்

வருடத்தில் மொத்தம் 24 ஏகாதசிகள் வரும் அதிசயமாக சில வருடம் 25 ஏகாதசிகளும் வருவதுண்டு. ஒவ்வோரு ஏகாதசிகளுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு, விரதத்திற்கு ஒரு பலன் உண்டு. எல்லா ஏகாதசிகளுக்கும் சிறந்தது மார்கழி மாத சுக்லபக்ஷ ஏகாதசியாகும். இந்நாள் வைகுண்ட ஏகாதசியென்றும், முக்கோடி ஏகாதசி, மோக்ஷ ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றது. இன்று பெருமாள் பரமபத வாசல் வழியாக நம்மை அழைத்து சென்று பிறவா நெறி என்னும் வைகுண்டப்பதவி வழங்குகின்றார். கீழே உள்ள சேவைகள் எல்லாம் சென்னையின் பல்வேறு ஆலயங்களில் பெருமாள் சென்ற வருடம் அளித்த சிறப்பு சேவைகள்.

மேற்கு மாம்பலம் சத்ய நாராயணப் பெருமாள்
முத்தங்கி சேவை

பிரளய காலத்தின் முடிவில் பெருமாள் யோக நித்திரையில் இருந்தபோது அவர் காதில் இருந்து தோன்றிய மது கைடபர்கள் பிரம்மாவை கொல்ல முயல , அவர் பெருமாளை சரணடைய, பெருமாள் அரக்கர்களை வதம் செய்த பின் அவர்கள் வேண்டிக்கொண்டதற்கிணங்க அவர்களை வைகுந்தத்தின் வடக்கு வாசல் வழியாக அழைத்து சென்றது போல் இன்றும் வைகுண்ட ஏகாதாசியன்று நம்மை பரமபத வாசல் வழியாக அழைத்து சென்று வைகுண்டம் வழங்குகின்றார் .

மேற்கு மாம்பலம் கோதண்டராமர்
பரமபத நாதன் கோலம்


திருமயிலை ஆதிகேசவர்
வெள்ளி கருட சேவை


இராவணனுடைய கொடுமையிலிருந்து தப்பிக்க பெருமாளிடம் முப்பத்து முக்கோடிதேவர்களும் சரணடைந்ததால், இந்த ஏகாதசி. முக்கோடி ஏகாதசி என்றழைக்கப்படுகின்றது.

வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்
ஸ்ரீநிவாசப் பெருமாள் கருடசேவை


சென்னை மேட்டுப்பாளையம், மேற்கு மாம்பலம்
பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்

ரங்க மன்னார் திருக்கோலம்

Labels: ,

4 Comments:

Blogger பெசொவி said...

நல்ல பதிவுகளாக எழுதுகிறீர்கள். வாழ்த்துகள்!

//இன்று பெருமாள் சொர்க்க வாசல் வழியாக நம்மை அழைத்து சென்று பிறவா நெறி என்னும் வைகுண்டப்பதவி வழங்குகின்றார்//

அது பரமபத வாசல். இது குறித்து என்னுடைய பதிவை இங்கே காண்க.
http://ulagamahauthamar.blogspot.com/2009/12/blog-post_3832.html

January 3, 2010 at 3:45 PM  
Blogger S.Muruganandam said...

பெயர் சொல்ல விருப்பமில்லாத அன்பரே.மிக்க நன்றி . அருமையான விளக்கம், மாற்றி விட்டேன் பதிவில் பரமபத வாசல் என்று.

ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய

January 3, 2010 at 9:39 PM  
Blogger இராஜராஜேஸ்வரி said...

முக்கோடி ஏகாதசி பற்றி அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!


வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

January 10, 2014 at 8:42 PM  
Blogger S.Muruganandam said...

மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி

January 16, 2014 at 8:48 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home