Thursday, December 24, 2009

தமிழுக்கு ஏற்றம் தரும் விழா - 1

Visit BlogAdda.com to discover Indian blogs
பகல் பத்து உற்சவ சேவைகள் பகல் பத்து உற்சவத்தின் போது சக்ரவர்த்தி திருமகன் கோலத்தில் திருமயிலை ஆதிகேசவபெருமாள்

ஆழ்வார்கள் திருமாலாகிய பேர் எழிற் பொய்கையுள் ஆழ மூழ்கிக் கவி பாடியவர்கள். திவ்ய பிரபந்தங்கள் உபயவேதாதங்கள் ஆயின. எனவே இவர்கள் திவ்ய சூரிகள் என்றழைக்கப்படுகின்றனர். திவ்ய தேசங்கள், திவ்ய சூரிகள், திவ்ய பிரபந்தங்கள் மூன்றும் திவ்யத்ரயங்கள் ஆயின.

ஆதிகேசவனை வணங்கி

விண்ணப்பம் செய்யும் பேயாழ்வார்

பிரமாணம் – உண்மை அறிவிற்கு கருவியாயிருப்பது. – திவ்ய பிரபந்தங்கள்.

பிரமேயம் – பிரமாணத்தால் அறியப்படும் பொருள். - திவ்ய தேசங்கள்

பிரமாதா – உண்மை அறிவுடையோன். – திவ்ய சூரிகளாகிய ஆழ்வார்கள்.

ஆகவேதான் மணவாள மாமுனிகளும் "ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி" என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.

எனவே வேதமே திவ்யபிரபந்தகளாகின. நம்மாழ்வாரின் நான்கு அருளிச்செயல்கள் நான்கு வேதங்கள் ஆகின. அதற்கான அங்கங்களாகின திருமங்கையாழ்வாரின் ஆறு அருளிச் செயல்கள். ஆண்டாள் மற்றும் மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற நூல்கள் உபாகமங்கள் ஆயின. வேதமே எம்பெருமானின் நிலைக்கு ஏற்ப மாறி வரும் முறையில் தமிழாகி திவ்ய பிரபந்தங்களாக அவதரித்தன என்பது சம்பிரதாயம்.

ஓம் நம: என்பது முதலாயிரம்.

நாராயணாய என்பது திருமொழி

கீதா சரமசுலோகம் : இயற்பாக்கள்

த்வ்யம் : திருவாய்மொழி

திருப்பல்லாண்டு ஓம் என்ற பிரணவத்தின் விரிவு,

கண்ணி நுண் சிறுதாம்பு நம:

பெரிய திருமொழி நாராயண என்கிற பரம்பொருளின் விளக்கம்.

சரம (இறுதியான) ஸ்லோகம் சரணாகதி என்னுன் பிரபத்தியாகும். அதாவது இறைவனையே உபாயமாகக் கொள்வதாகும்.

இவ்வாறு முதலாயிரமும் இரண்டாமாயிரமுமே திருமந்திரம்.

அத்யயன உற்சவத்தின் போது அனைத்து ஆழ்வார்களும் ஆச்சாரியர்களுக்கும் அருளப்பாடு ஆகின்றது. இவ்வாறு திருமயிலையில் அருளப்பாடு கண்டருளிய ஆழ்வார்கள் மேலே, ஆச்சாரியர்கள் கீழே.

நம்மாழ்வாரின் திருவாய் மொழியின்

முதல் பத்து : ஸ்ரீமந்

இரண்டாம் பத்து : நாராயண

மூன்றாம் பத்து : சரணௌ

நான்காம் பத்து : சரணம்

ஐந்தாம் பத்து : ப்ரபத்யே

ஆறாம் பத்து : ஸ்ரீமந்

ஏழாம் பத்து : நாராயண

எட்டாம் பத்து : நாராயண

ஒன்பதாம் பத்து : ஆய

பத்தாம் பத்து : நம:

அதாவது திருமகளோடு கூடிய நாராயணனின் திருவடிகளை புகலிடமாகப் பற்றுகின்றேன். திருமகளோடு கூடிய நாராயணனுக்கு எல்லா அடிமைகளையும் செய்யப்பெறுவேன் என்னும் நான்காமாயிரமாகிய த்வயமே திருவாய் மொழி.

சத்ய நாராயணர் முரளிக் கண்ணன் கோலம்

இவ்வளவு சிறப்புப்பெற்ற ஆழ்வார்களின் அருளிச்செயல்களை பெருமாளின் முன் விண்ணப்பம் செய்யும் உற்சவமே அத்யயன உற்சவம். அத்யயன உற்சவம் என்பதற்கு சிறப்பான உற்சவம் என்ற பொருளும் உண்டு. மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசியை மையமாகக் கொண்டு இருபது நாட்கள் இந்த தமிழுக்கு தகைமை சேர்க்கும் விழா விஷ்ணுவாலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இந்த இருபது நாட்களிலும் நான்காயிரம் திவ்யப்பிரபந்தகளும் தமிழுக்கு பின் செல்லும் மூவருக்கும் முதலவரான, கரும்புயல் வண்ணன், இன்பப்பா, பச்சைத்தேன், பைம்பொன் பெருமாள் முன் சேவிக்கப்படுகின்றன.

சத்யநாராயணர் ஏணி கண்ணன் கோலம்

பகற்பத்து எனப்படும் திருமொழித்திருநாளில் முதல் இரண்டு ஆயிரம் பாசுரங்களும் சேவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பெருமாள் ஒவ்வொரு திவ்ய அலங்காரத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார் இதை சாத்துபடி என்று அழைக்கின்றனர்.

வைகுண்ட ஏகாதசி தொடங்கி நடைபெறும் இராப்பத்து எனப்படும் திருவாய்மொழித்திருநாளில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி சேவிக்கப்படுகின்றது. சில திவ்ய தேசங்களில் 21ம் நாள் மூன்றாம் ஆயிரமான இயற்பா முழுவதையும் சேவிப்பது மரபு. இராப்பத்தை நம் கலியன், திருமங்கை மன்னன் திருவரங்கத்தில் தொடங்கினார். பகல் பத்து பின்னர் நாதமுனிகளால் தொடங்கப்பெற்றது.

சத்ய நாராயணர் ஏணிக்கண்ணன் திருக்கோலம்

அப்படியே வேத ஸாம்யம் அநுக்ரஹித்தோம் அத்யயன உஸ்தவத்திலே வேத பாராயணத்தோடு திருவாய்மொழியையும் பாராயணம் பண்ணுங்கோள் என்று நம்பெருமாள் திருவாய் மலர்ந்தருள மதுர கவியும் திருமங்கை மன்னனும், திருக்குறளப்பன் சன்னதிக்கு நம்மாழ்வாரின் அர்ச்சையுடன் எழுந்தருளி அழகிய மணவாளர் திருமண்டபத்திற்க்கு திருவரங்கன் எழுந்தருள மதுரகவியாக்வார் தேவ கானத்திலே இசையுடன் பாடி அபிநயனத்துடன் திருவாய்மொழி விண்ணப்பம் செய்தார். இது பின்னர் நின்று போனது.

இசை, நாதகம், அபிநயம் மூன்றும் ஒருங்கிணைந்து முத்தமிழ் கலையாக திவ்ய பிரபந்தங்களை விண்ணப்பிக்கும் முறையே அரையர் சேவை. அரையர் என்றால் அரசன் என்று பொருள். திருவாய் மொழொயினை நிகரற்ற தேர்ச்சி பெற்று விளங்கிய தலைமையை போற்றவே அரையர்கள் என்று திருவரங்கனால் பாராட்டப்பெற்றனர். இத்தலைமை தோற்றவே தலையில் மகுடமாக பட்டுக்குல்லாய் அணிந்து கொள்ளும் உரிமை பெற்றனர். கையில் தாளங்கள் ஏந்தி ஒலித்தனர் இவர்கள் இசைக்காரர் எனவும் அழைக்கப்படுகின்றனர். முத்திரைகளை நன்கு அறிந்திருக்கின்றனர்.

சத்ய நாராயணர் கோபாலர் திருக்கோலம்

திருவரங்கனாகிய இறைவனின் முன் நின்று அவருடைய குண நலன்களை அடுக்கிய தொடர் மொழிகளால் இசையிலே ஏற்றி மகிழ்விப்பது அரையர்களின் பணியாகும். இதை இவர்கள் கொண்டாட்டம் என்று குறிப்பிடுகின்றனர்.
சத்ய நாராயணர் நாச்சியார் திருக்கோலம்

நாதமுனிகளும் அவருடைய திருப்பேரனாகிய ஆளவந்தாரும், இராமானுஜரும், அவருடைய சீடராகிய எம்பாரும் அரையர் கலையில் திருத்தங்கள் செய்து வளர்த்தனர். ஆனால் இக்கலை இப்போது திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருக்குறுங்குடி என்னும் திவ்ய தேசங்களில் மட்டுமே இன்றும் நடைபெறுகின்றன.
பெருமாள் சேவை இன்னும் வளரும்......

Labels: , , , ,

9 Comments:

Blogger குமரன் (Kumaran) said...

//ஆழ்வார்களுடைய அருட்பாசுரங்கள் தென் தமிழ் நாட்டில் வைணவ சம்பிரதாயத்தில் தென்கலை மரபை தோற்றுவித்தன.//

இது சரியில்லை. தமிழக வைணவத்திலேயே வடகலை தென்கலை என்று இரு பிரிவுகள் உண்டு - அவர்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் மிக நுண்மையானவை; மற்றபடி இரு கலையாருமே ஆழ்வார்களுடைய பாசுரங்கள் வழி நிற்பவர்கள் தான்; இராமானுசர் வழி வந்தவர்கள் தான். வடகலை, தென்கலை என்ற திசை வேறுபாடு குழப்பத்தைத் தருகிறது என்று நினைக்கிறேன். திருவரங்கத்தில் வாழ்ந்திருந்தவர்களின் கருத்து தென்கலை என்றும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்திருந்தவர்களின் கருத்து வடகலை என்றும் சொல்லப்படுகிறது. தெற்கு வடக்கு என்பது தமிழகத்திற்குள்ளேயே தான்; தமிழக எல்லையைத் தாண்டவில்லை.

December 28, 2009 at 1:26 PM  
Blogger குமரன் (Kumaran) said...

திவ்யபிரபந்தங்களின் வேத ஒப்புமையை நன்றாக விளக்கியிருக்கிறீர்கள் கைலாஷி ஐயா.

December 28, 2009 at 1:30 PM  
Blogger S.Muruganandam said...

குமரன் ஐயா, தங்கள் கருத்துக்கு நன்றி.
அடியேன் அறிந்த வகையில் தென் கலை மரபினர் திவ்ய பிரபந்ததிற்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால் வட கலை சம்பிரதாயத்தில் வேதத்திற்கும் ஆழ்வார் பாசுரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் தருகின்றனர்.

குரு பரம்பரையை நோக்கும் போது ஸ்ரீமந் நாராயணன், பெரிய பிராட்டியார், சேனை முதலியார், ஆழ்வார்கள், நாத முனிகள், இராமானுஜர் வரைக்கும் இரு பிரிவினருக்கும் சமமே அதற்கு பின்னர் வந்த ஆச்சாரியர்களில் வடகலையினர் வேதாந்த தேசிகரையும், தென் கலையினர் மணவாள மாமுனிகளையும் தங்கள் ஆச்சாரியராக கொண்டு இரு பிரிவினராக பிரிந்தனர்.

அடியேன் அத்யயன காலத்தில் பிரபந்தம் சேவிக்கும் திருக்கோவிலும் ஒரு வடகலைக் கோவிலே.

ஆயினும் தங்கள் கருத்துக்கு மதிப்புக் கொடுத்து அந்த வரிகளை சிறிது மாற்றியுள்ளேன். சரியா என்று கூறுங்கள்.

December 28, 2009 at 7:38 PM  
Blogger S.Muruganandam said...

//தெற்கு வடக்கு என்பது தமிழகத்திற்குள்ளேயே தான்; தமிழக எல்லையைத் தாண்டவில்லை.//

ஆம் ஐயா பிரபந்தங்கள் தமிழில் உள்ளதால் மற்ற பிரதேசங்களில் அதன் தாக்கம் இல்லை.

December 28, 2009 at 7:39 PM  
Blogger குமரன் (Kumaran) said...

வேதங்களுக்கும் பாசுரங்களுக்கும் இரு கலையினரும் சமமான அந்தஸ்தே கொடுத்திருப்பதாக அடியேன் எண்ணுகிறேன். அதனால் தான் இருகலையினரும் உபய வேதாந்திகள். நான் படித்து அறிந்த வரையிலும் நடைமுறையில் பார்த்தவரையிலும் இரு கலையினருக்கும் இருக்கும் வேறுபாடுகளில் பிரபந்தத்தின் ஏற்றத்தைப் பற்றிய பேச்சே வருவதில்லை. இரு கலையினரின் ஆசாரியர்களும் வேதங்கள், நாலாயிரம் இரண்டுமே இரு கண்கள் என்று தான் சொல்லியிருக்கிறார்கள். தற்காலத்தில் சிலர் (தென் கலையினரில் சிலர், வடகலையினரில் சிலர்) நாலாயிரம் மட்டுமே போதும் என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். அது அவர்களின் ஆசார்யர்களின் கருத்துக்கு ஏற்புடையது இல்லை.

ஒரு ஆழ்வாரைப் பற்றி பேசும் போது மற்ற ஆழ்வார்களை விட் இந்த ஆழ்வார் ஏற்றமுடையவர் என்று பேசுவதுண்டு. அதே போல் பிரபந்தத்தைப் பற்றி பேசும் போது வேதங்கள் தன் முயற்சியால் கண்டடைய முயன்ற இருடிகள் கண்டவை; பிரபந்தங்கள் இறையாலேயே மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களால் பாடப்பட்டவை என்று பிரபந்தத்தின் ஏற்றம் பேசப்படும். அதனால் மற்ற ஆழ்வார்களோ வேதங்களோ அப்படி பேசுபவர்களால் குறைவாக மதிப்பிடப்படுகிறது என்று பொருள் கொள்ள முடியுமா? அப்படியே கொண்டாலும் 'தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே' என்று பாடியவர் வடகலை ஆசாரியர் தானே; அதனால் வடகலையினர் தான் வேதங்களை விட பாசுரங்களை அதிக முக்கியத்துவத்துடன் பார்க்கிறார்கள் என்றல்லவோ சொல்ல வேண்டும்?! :-)

என்னைப் பொறுத்த வரையில் அந்த வரியே இந்த இடுகையில் தேவையில்லாத ஒன்று. :-)

December 29, 2009 at 6:04 AM  
Blogger S.Muruganandam said...

தாங்கள் கூறிய கருத்தை என் நண்பன் ஒருவர் ஸ்ரீவைஷ்ணவர் அவரும் ஆமோதித்தார். ஆகவே அந்த வரிகளை நீக்கி விட்டேன். மிக்க நன்றி குமரன் ஐயா.

December 29, 2009 at 8:59 AM  
Blogger கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட.இதோமுகவரி-http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_11.html?showComment=1389400067941#c4442535171104740770

--------------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு- வலைத்தள உறவுகள் கேட்டதற்கு அமைவாக
தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம் வாருங்கள் வாருங்கள் (காலம் நீடிக்கப்பட்டுள்ளது.) பதிவர்கள் தங்கள் கட்டுரைகளை எழுதி அனுப்பலாம் மேலும் விபரங்களுக்கு..இங்கே-https://2008rupan.wordpress.com
http://tamilkkavitaikalcom.blogspot.com/ இந்த இரண்டு வலைப்பூக்களில் விபரம் உள்ளது.
பதக்கங்கள்+சான்றிதழ் அள்ளிச்செல்லுங்கள்.......
--------------------------------------------------------------------------------------------------------------------------------

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

January 10, 2014 at 4:35 PM  
Blogger கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட.இதோமுகவரி-http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_11.html?showComment=1389400067941#c4442535171104740770

--------------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு- வலைத்தள உறவுகள் கேட்டதற்கு அமைவாக
தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம் வாருங்கள் வாருங்கள் (காலம் நீடிக்கப்பட்டுள்ளது.) பதிவர்கள் தங்கள் கட்டுரைகளை எழுதி அனுப்பலாம் மேலும் விபரங்களுக்கு..இங்கே-https://2008rupan.wordpress.com
http://tamilkkavitaikalcom.blogspot.com/ இந்த இரண்டு வலைப்பூக்களில் விபரம் உள்ளது.
பதக்கங்கள்+சான்றிதழ் அள்ளிச்செல்லுங்கள்.......
--------------------------------------------------------------------------------------------------------------------------------

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

January 10, 2014 at 4:35 PM  
Blogger S.Muruganandam said...

மிக்க நன்றி ரூபன்

January 16, 2014 at 8:44 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home