ஆதி கேசவப் பெருமாள் கருட சேவை
ம்யிலை. மயூராபுரி, மயிலாப்பூர் என்று அழைக்கப்படும் தலத்தில் பெருமாள், ஆண்டாள் நாச்சியார் வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை என்று அனுபவித்தபடி கேசவனாயும் மாதவனாயும் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். அந்த ஆதி கேசவரின் பங்குனி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் காலை கருட சேவையை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் வந்து சேவித்து விட்டு செல்லவும்.
கைரவணி புஷ்கரணி தீரத்தில் பிருகு முனிவர் செய்த சயன யாகத்தில் பெரிய பிராட்டியுடன் தோன்றியவர் சயன கேசவர். இவருடைய சுருள் சுருளான கருமையான கேசத்தைக் கண்டு ரிஷிகள் கேசவன் என்று அழைத்தனர்.
சுமங்கனன் என்ற அரசனக்கு மயூர கொடியை அளித்ததால் மயூர கேசவன் எனப்பட்டார். தற்போது சர்வ சக்தி படைத்த மயூரவல்லித்தாயாருடன் ஆதி கேசவர் என்ற நாமத்துடன் சேவை சாதிக்கின்றார் பெருமாள்.

ஆதி கேசவர் பிரம்மோற்சவ வெள்ளி கருட சேவை
லக்ஷ்மி ஹாரத்துடன் பெருமாள் சேவை சாதிக்கும் அழகே அழகு
பெருமாள் கருட சேவை பின்னழகு
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று பாடிய
பேயாழ்வார்
ஆதி கேசவர் இரத சப்தமி வெள்ளி கருட சேவை

ஆதிகேசவப் பெருமாள் வைர அங்கி
வெள்ளி கருட வாகன சேவை வைகுந்த ஏகாதசியன்று
சின்ன கருடனில் ஆதி கேசவப்பெருமாள் சேவை
சென்னை மேற்கு மாம்பலம் பாஷ்யக்கார சென்ன ஆதி கேசவப்பெருமாள் ஆலயத்தின் கருட சேவை காட்சிகள். ஒரு காலத்தில் இவ்விடம் அடர்ந்த காடு தற்போதைய மாம்பலம் மாபிலம்( பெரிய குகை) ஆக இருந்த்து. ஆகையால் முஸ்லிம்களின் படையெடுப்பின் போது மற்ற பெருமாள்கள் இக்கோவிலில் பாதுகாப்பாக இருந்ததால் இவர் அடைக்கலம் த்ந்த கேசவன் என்றும் அறியபப்டுகின்றார்.
சென்ன ஆதி கேசவர் வைகுண்ட ஏகாதசி கருட சேவை

சென்ன ஆதி கேசவர் பிரம்மோற்சவ கருட சேவை

சென்ன ஆதி கேசவர் வைகுண்ட ஏகாதசி கருட சேவை

சென்ன ஆதி கேசவர் பிரம்மோற்சவ கருட சேவை
4 Comments:
கருட சேவைகளை மனம் குளிரச் சேவித்துக் கொண்டேன். மிக்க நன்றி கைலாஷி.
இன்று மாலை மயிலை பேயாழ்வார் ஆலயம் செல்கிறேன் கைலாஷி ஐயா!
அதற்கு முன்பாகவே உங்கள் பதிவில் சேவையிலும் அருமையான கருட சேவை கண்டேன்! முன்னிலும் பின்னழகிய பெருமாள்! :-)
மயூர வல்லித்தாயாரின் ஆசியும் ஆதிகேசவ பெருமாளின் ஆசியும் பெற வாழ்த்துக்கள் கண்ணபிரான்.
வரும் காலங்களிலும் வந்து சேவியுங்கள் குமதன் அவர்க்ளே. நன்றி
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home