சித்திரை கருட சேவை
மேற்கு சைதாபேட்டை
பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள்
சித்திரை பிரமோற்சவ மூன்றாம் நாள் காலை
கருட சேவை
கருடனுடைய கண்களை கவனித்தீர்களா? வாகனங்கள் ஆங்கிலேயர்களின் காலத்தில் செய்த போது தனியாக இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடியில் செய்யப்பட்ட கண்கள் இவை.ஒளி இக்கண்களில் நேரடியாக விழும் போது இவை ஒளிரும்

கருட சேவை பின்னழகு

**************************
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள்
கருடசேவை

திருவல்லிக்கேணியிலும் பார்த்தசாரதிப் பெருமாள் மூன்றாம் நாள் காலை தங்க கருட வாகனத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் கோபுர வாசல் தரிசனம் தந்து பின் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து. பின்னர் ஒற்றை ரோஜா மாலையுடன் ஏகாந்த சேவை சாதித்து அருளுகின்றார் .

பெருமாளின் பின்னழகு

இந்த வருடம் மேற்கு மாட வீதியில் பெருமாள் வழங்கும் அற்புத தரிசனம் காணும் வாய்ப்பு கிட்டியது, முதலில் மண்டபம் வரை பக்தர்களின் தேங்காய் பழம் மற்றும் பட்டு துண்டுகளை ஏற்றுக்கொண்டு சேவை சாதித்த பெருமாள் மண்டபம் வந்தவுடன் அப்படியே பின் நோக்கி மாட விதியின் இறுதி வரை சென்று பின்னர் கருடனில் பறந்து வருவது போலவே அற்புதமாக மேள சத்ததிற்கு ஏற்றவாறு ஆடி வரும் அந்த அழகை எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை. நேரில் வந்து தரிசித்தால் மட்டுமே அதை உணர முடியும்.

மண்டபத்தில் பெருமாள்


பார்த்தசாரதி பெருமாளின் ஏகாந்த சேவை

பின்னர் மண்டபத்தில் மண்டகப்படி கண்டு அருளுகிறார் பெருமாள். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தெற்கு மற்றும் கிழக்கு மாடவீதிகள் வழியாக அலங்கார மண்டபம் அடைந்து பின்னர் அங்கிருந்து ஏகாந்த சேவை சாதித்து ஆலயத்திற்குள் வருகின்றார் பெருமாள்.


சித்திரை மாதம் என்பதால் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் பெருமாள் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று திருமேனி முழுவதும் சந்தனம் சார்த்தியிருக்கும் அந்த பக்தியை என்னவென்று சொல்ல.

திருவல்லிக்கேணியில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் சேவை சாதிக்கும் போது அவரைப் போலவே சிறிய பெருமாள்களை அதே போலவே அலங்காரம் செய்து பின்னே பக்தர்கள் வலம் வருவார்கள். அது போல வந்த ஒரு கருட சேவையை தாங்கள் காண்கின்றீர்கள்.

Labels: பார்த்தசாரதி பெருமாள், பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள். சித்திரை கருடன்
2 Comments:
அற்புத தரிசனம். உங்களுக்குத்தான் எத்தனை கருணை செய்திருக்கிறான் இந்தக் கண்ணன்.
எல்லாம் அவர் எண்ணம் வல்லியம்மா. அவனை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைக்கும் பொது அவர் நம்மை நோக்கி பத்து அடி எடுத்து வைத்து ஓடி வருகின்றார் அல்லவா வல்லியம்மா.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home