ஹனுமனின் மனைவி பெயர் என்ன?
கல்யாண ஆஞ்சனேயர்
என்ன பெயர்ப் பலகையிலும் கல்யாண ஆஞ்சனேயர் என்று உள்ளதே. ஆஞ்சநேயர் இங்கு தேவியுடன் உள்ளாரே???
ஆனால் அனுமன் நைஷ்டிக பிரம்மசாரி ஆயிற்றே என்ற குழப்பம் தானே?
இப்படங்கள் மார்கழி மூல அனுமத் ஜெயந்தியன்று சென்னை அசோக் நகர் கருமாரி திரிபுரசுந்தரி ஆலயத்தில் (2010) அனுமனுக்கு ஒரு லட்சத்து எட்டு(100008) வடை மாலை உற்சவத்தின் போது எடுக்கப்பட்டவை. எண் கோணத் தேர் போன்ற அமைப்பில் பஞ்ச முக ஆஞ்சனேயர் அலங்காரமும் மற்றும் ஒவ்வொரு பக்கமும் வெவ்வேறு அனுமன் கோலங்களும் அற்புதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்த கோலங்கள் என்ன என்று சேவியுங்கள் பின்னர் விடையைப் பற்றி காணலாம்.
அனுமனின் ஸ்வயமான முகத்துடன் நரசிம்மம், வராகம், ஹயக்ரீவர், கருடன் முகமும் சேர்ந்த கோலமே பஞ்சமுக ஆஞ்சநேயர் கோலமாகும். மஹிராவணனை வதம் செய்ய அவனது உயிர்நிலை உள்ள ஐந்து தேனீக்களை ஒரே சமயத்தில் கொன்றால்தான் முடியும் என்பதால் இராமச்சந்திர மூர்த்தியின் அருளினால்ஐந்து முகங்களைக் கொண்டு பஞ்சமுக ஆஞ்சனேயராக கொண்ட கோலம்.
பஞ்ச முக ஆஞ்சனேயரின் ஐந்து முகங்களையும் தாங்கள் தெளிவாக இப்படத்தில் காணலாம். இன்னும் பஞ்ச முக ஆஞ்சனேயரைப் பற்றி அறிந்து கொள்ள இக்கட்டுரையை படியுங்கள் <பஞ்ச முக ஆஞ்சனேயர்>
அடுத்த கோலம்
அஞ்சனாமாதா
பால ஆஞ்சனேயர்
அஞ்சனாமாதா
பால ஆஞ்சனேயர்
வீர ஆஞ்சனேயர்
யோக ஆஞ்சனேயர்
சிவ பிரதிஷ்டா ஆஞ்சனேயர்
மேற்கு மாம்பலம் சத்ய நாரயணர்
திருக்கோவில் சஞ்சீவி ஆஞ்சனேயர்
திருக்கோவில் சஞ்சீவி ஆஞ்சனேயர்
அஸாத்ய ஸாதக ஸ்வாமிந்
அஸாத்யம் தவ கிம் வதா
ராம து‘த கிருபாஸிந்தோ
மத் கார்யம் ஸாதய ப்ரபோ
அஸாத்யம் தவ கிம் வதா
ராம து‘த கிருபாஸிந்தோ
மத் கார்யம் ஸாதய ப்ரபோ
சரிங்க நம்ம கேள்விக்கு வருவோம். ஹனுமனின் மனைவி பெயர்சுசீலை அதுவுமல்ல அவருக்கு ஒரு மகனும் உண்டு அவர் பெயர் மகரத்வஜன்.
உங்களைப் போல எனக்கும் சந்தேகம் வந்து குருக்களிடம் கேட்டேன். அவர் கூறியதாவது நாரதர் ஒரு தடவை அனுமனிடன் என்னைப் போல நீ பிரம்மச்சாரி இல்லை என்று கூறினாராம். ஆகவே அனுமன் இராமச்சந்திரமூர்த்தியிடம் கேட்க அவரும் அது உண்மைதான். நீ கடலை கடந்து போது உருவான மகன்தான் அவன்.
ஆகவே சுசீலை உனது மனைவி ஆகிறாள். ஒரு மனிதன் முழுமை பெருவது க்ருஹஸ்தன் ஆகும் போது தான் என்று விளக்கம் அளித்தாராம். இதன் அடிப்படையில்தான் கல்யாண ஆஞ்சனேயர் திருக்கோலம் அலங்காரம் செய்தேன் என்று கூறினார். விழுப்புரத்திற்கு அருகில் ஒரு ஆஞ்சனேயர் கோவிலில் ஆடி மாதம் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது என்று ஒரு உதிரி தகவலையும் அளித்தார்.
உங்களைப் போல எனக்கும் சந்தேகம் வந்து குருக்களிடம் கேட்டேன். அவர் கூறியதாவது நாரதர் ஒரு தடவை அனுமனிடன் என்னைப் போல நீ பிரம்மச்சாரி இல்லை என்று கூறினாராம். ஆகவே அனுமன் இராமச்சந்திரமூர்த்தியிடம் கேட்க அவரும் அது உண்மைதான். நீ கடலை கடந்து போது உருவான மகன்தான் அவன்.
ஆகவே சுசீலை உனது மனைவி ஆகிறாள். ஒரு மனிதன் முழுமை பெருவது க்ருஹஸ்தன் ஆகும் போது தான் என்று விளக்கம் அளித்தாராம். இதன் அடிப்படையில்தான் கல்யாண ஆஞ்சனேயர் திருக்கோலம் அலங்காரம் செய்தேன் என்று கூறினார். விழுப்புரத்திற்கு அருகில் ஒரு ஆஞ்சனேயர் கோவிலில் ஆடி மாதம் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது என்று ஒரு உதிரி தகவலையும் அளித்தார்.
Labels: கல்யாண ஆஞ்சனேயர், ஹனுமத் ஜயந்தி
13 Comments:
பகிர்விற்கு நன்றிகள்
தகவல்கள் படங்கள் அருமை
கண்கொள்ளாக் காட்சி
மிக்க நன்றி ராம்ஜி யாஹூ
வாருங்கள் ரவீந்திரன் வாசு மிக்க நன்றி வருகைக்கும் பதிவிற்கும்.
தெரியாத தகவல்கள்.. நன்றி
அட்ரா சக்கை , வாருங்கள் செந்தில் குமார். வரும் காலங்களிலும் வந்து தரிசனம் செய்யுங்கள்.
அற்புதமான தரிசனம். புண்ணியம் உங்களுக்கே!
வாருங்கள் நண்பரே(பந்து)). எளிமையாக எழுதுகின்றிர்கள். வாழ்த்துக்கள்
//புண்ணியம் உங்களுக்கே!//
இல்இல்லை இல்லை எல்லாம் அவன் செயல். ஆட்டுவிப்பவன் அவன். ஆடுபவர்கள் நாம்.
ஆஹா...... திவ்ய தரிசனம். மிகவும் நன்றி கைலாஷி.
ஹரித்வாரில் மலைமேல் அஞ்சனா தேவி கோவிலில் குழந்தை அனுமன் தாய் மடியில் இருக்கும் கோலம் பார்த்து மனசு அப்படியே குழைஞ்சு போச்சு. இப்போ அதே மனநிலை நீங்கள் போட்டுருக்கும் படங்களைப் பார்த்து!!!!!
மீண்டும் என் நன்றிகள்.
வாருங்கள் துளசியம்மா. இன்றுதான் கேதார்நாத், பத்ரிநாத் யாத்திரை முடித்து விட்டு திரும்பினேன். சண்டி தேவியில் அஞ்சனா தேவி பார்த்தேன் தங்களின் பின்னூட்டம் அருமை.
நவபிருந்தாவனம அருகிலும் அஞ்சனாத்திரி மலையில் பால ஆஞ்சனேயர் ஆலயத்தில் இவ்வாறே ஒரு கோவில் உள்ளது சமயம் கிடைக்கும் போது தரிசனம் செய்யுங்கள்.
அழகிய பக்தி மணம் கமழும் தரிசன படங்கள்!
கல்யாண ஆஞ்சநேயர் கதை, கடல் மேல் செல்லும்போது வியர்வைதுளி கடலில் விழுந்து அதனை மீன் வடிவிலிருந்த பெண் பருகி அதனால் கருப்பெற்று குழந்தை பிறப்பதாக வருமே அந்த கதையா?
///கல்யாண ஆஞ்சநேயர் கதை, கடல் மேல் செல்லும்போது வியர்வைதுளி கடலில் விழுந்து அதனை மீன் வடிவிலிருந்த பெண் பருகி அதனால் கருப்பெற்று குழந்தை பிறப்பதாக வருமே அந்த கதையா?///
ஆம் ஐயா அதே கதைதான்.
முதல் முறை வருகின்றீர்கள் வருகைக்கு மிக்க நன்றி இன்னும் வந்த் அழகான தரிசனம் பெறுங்கள்.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home