Monday, December 5, 2011

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -15

Visit BlogAdda.com to discover Indian blogs

 
 ஸ்ரீ யந்த்ரோத்தாரக ஹனுமன்

அடுத்து நாம் பார்க்க இருப்பது சக்ர தீர்த்தமும் அதன்  கரையில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் ஆலயம் மற்றும் ஸ்ரீ யந்த்ரோத்தாரக ஹனுமான் ஆலயமும் ஆகும்துங்கபத்ரா நதி கிழக்காக ஓடி வந்தவள் உத்தரவாகினியாக ( வடக்காக) திரும்பும் இடம் தான் சக்க்ர தீர்த்தம் இவ்விடத்தில் துங்கபத்ரை கிழக்கில் சிறிது தூரம் நீண்டு சென்று பின் வடக்காக திரும்புவதால் ஒரு சுழற்சி ஏற்படுகின்றது. இவ்வாறு சுழற்சி ஏற்படுவதல் இவ்விடத்திற்கு சக்கர தீர்த்தம் என்று பெயர். இவ்விடத்தில்தான் ஸ்ரீ வியாசராஜருக்கு அனுமன் காட்சியளித்தான் அதன்பலனாக அவர்  ஸ்ரீ யந்த்ரோத்தாரக ஹனுமனை பிரதிஷ்டை செய்தார். ஸ்ரீராமருக்கு சுக்ரீவன் அன்னை சீதாதேவியின் நகைகளை  காட்டிய இடம் இதுதான். சக்கர தீர்த்தத்தில் சிக்கிய  கோவிந்த ஓடயரை ஸ்ரீவியாஸராஜர் காப்பாற்றிய இடமும் இதுதான்

யந்த்ரோத்தாரக ஹனுமன் கோவில் 

ஹம்பியிலே ஸ்ரீவியாஸராஜர் சுமார் 40 ஆண்டு காலம் இருந்தார். அப்போது அவர்  தினமும் சக்ரதீர்த்த கரியில் ஆம்ர்ந்து  தியானம் செய்வது வழக்கம். இவ்வாறு ஒரு நாள் தியானம் செய்து கொண்டிருந்த போது அவரது மனத்திரையில் வாயு புத்ரன் அனுமன் வரத்தொடங்கினார். இவ்வாறு ஏன் நடக்கின்றது என்று புரியாமல் ஸ்ரீவியாஸராஜர் அனுமனை பிரார்த்தனை செய்ய, சொல்லின் செல்வனும் அவரது கனவில் தோன்றி தன்னை சக்கர  தீர்த்தக்கரையில் பிரதிஷ்டை செய்யுமாறு பணித்தார்பின்னர் தானே  வானர ரூபத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டிய இடத்தையும் காட்டி அருளினார். ஸ்ரீவியாஸராஜரும் கரித்துண்டினால் அவ்விடத்தில் ஒரு பாறையில் அனுமன் உருவம் வரைந்து பொட்டு வைத்தார், உடனே ஒரு அற்புதம் நிகழ்ந்தது, பாறையில் வரைந்த ஸ்ரீஆஞ்சநேயர் உருவம் உயிர் பெற்று பறந்தது மற்றும் பாறையில் இருந்த உருவமும் மறைந்தது. இப்படியே பன்னிரண்டு நாட்கள் நடந்தன. பதிமூன்றாம் நாள் உருவம் வரைந்து  முதலில் கயிற்றினால் யந்திரம் அமைத்து திக்பந்தனம் செய்து பின்னர் பொட்டு வைத்தார் அன்றைய தினம் ஸ்ரீவியாஸராஜரின் பக்திக்கு கட்டுப்பட்டு அனுமனும் அப்படியே நின்றார். பின்னர் ஸ்ரீவியாஸராஜர் பறந்து சென்ற பன்னிரண்டு அனுமன்களையும் ஒன்றன் வாலை ஒன்று பிடிக்குமாறு  அமைத்து ஒரு வேலி உருவாக்கினார். இவ்வாறு பக்தர்களுக்கு அருள யந்திரத்தில் எழுந்தருளிய  சஞ்சீவி மலை கொணர்ந்த அஞ்சனை மைந்தனை ஸ்ரீ யந்த்ரோத்தாரக ஹனுமானை ஆனேகுந்தி செல்பவர்கள் அவசியம் தரிசனம் செய்து நன்மையடைகின்றனர்.   இவ்வாலயம் கோதண்டராமர் ஆலயத்தின் அருகில் ஒரு சிறு குன்றின் மேல் உள்ளது. ஆறு அடி உயரத்தில் நின்ற கோலத்தில் இராமர் அன்னை ஜானகியுடனும், இளவல் இலக்குவனுடனும் வித்தியாசமாக  சுக்ரீவனுடனும் (அனுமன் அல்ல)  சேவை சாதிக்கின்றார்.  முதலில் கோதண்டராமர் ஆலயத்தில் இராமனை வணங்கி விட்டு பின் அனுமனை நெய் விளக்கேற்றி வணங்க சகல நன்மைகளும் கிட்டும், பாவங்கள் பறந்தோடும் என்பதில் எந்த ஐயமும் தேவையில்லை. இந்த ஆலயங்களுக்கு நேர் எதிராக அஞ்சனாத்ரி மலை அமைந்துள்ளது மிகவும் சிறப்பு. இக்கோவிலுக்கு வலப்புறம் ஸ்ரீஅச்சுதராயர் ஆலயம் உள்ளதுஇதன் எதிரே அக்காலத்தில் முத்தும் மணியும் விற்பனை செய்யப்பட்ட ஸுலேபஜார் உள்ளது

கோதண்டராமரின் ஆலயத்திற்கு எதிரில் உள்ள ஒரு சிறு மலையில் ஸ்ரீநரஹரி  தீர்த்தர் மற்றும் ஸ்ரீரகுநந்தனர் பிருந்தாவனங்கள் உள்ளனமுதலாமவர் மத்வாச்சாரியாரின் பிரதான நான்கு சீடர்களில் ஒருவர்பத்மநாப தீர்த்தருக்குப் பின் பட்டத்திற்கு வந்தவர். கஜபதி வம்ச அரசரிடமிருந்து ஸ்ரீமூலராமர் விஹ்ரகத்தைப் பெற்று மத்வரிடம் தந்தவர். ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் அருகே உள்ள ஸ்ரீகூர்மம் என்ற தலத்தில் கூர்மரை பிரதிஷ்டை செய்தவர். இரகுநந்தனர் தற்போது ஸ்ரீஇராகவேந்திர மடம் என்று அழைக்கப்படும் வித்யா மடத்தின் பீடாதிபதியாக இருந்தவர். இவரது குருநாதர், இன்றும்  விருக்ஷ ரூபமாய் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள ஸ்ரீஜதாமித்ரர் ஆவார்.  

அடுத்து நாம் பார்க்க வேண்டிய இடம் மதங்க மலை. விருபாக்ஷீஸ்வரர் ஆலயத்திலிருந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் இம்மலை உள்ளது. மதங்கமலையின் மேல் வீரபுவனேஸ்வர் ஆலயம் அமைந்துள்ளது. இம்மலையின் உச்சியில் இருந்து விருபாக்ஷீஸ்வரர் ஆலயத்தின் மேற்கு கோபுரம், ஹேமகூட மலை, தேரோ(டிய)டும்  இராஜ பாட்டை, யாணை லாயம், மற்றும் கோட்டை ஆகியவற்றை அருமையாக கண்டு களிக்கலாம்.
கோதண்டராமர் ஆலயத்திற்கு இடப்புறம் ஸ்ரீவராஹ சுவாமி ஆலயம், ஸ்ரீபுரந்தரதாசர் மண்டபம் மற்றும் ஸ்ரீவிட்டல் ஆலயம் அமைந்துள்ளன


 
புரந்தரதாசர் 

  முதலில் மிகுந்த பணக்காரராக   இருந்தார். இளம்பருவத்திலேயே சீனப்பநாயக் என்று அழைக்கப்பட்ட இவர் வைரத்தில் விளையாடியவர் இவர். வளர்ந்தபின் வைரவைடூரிய வியாபாரி ஆகி அளவற்ற செல்வம் சம்பாதித்து நவகோடி நாராயணாய் விளங்கினார். ஆனால் அவர் பரமலோபியாக இருந்தார். எச்சில் கையால் கூட காக்கையை ஓட்டாதவர். தன் மனைவி யாருக்கோ பிச்சை இடுவது போல கனவு கண்டதற்காகவே இரண்டு நாட்கள் மனைவியை பட்டினி போட்டவர். இவரை திருத்தி பணிகொள்ள ஸ்ரீமன் நாராயணன் திருவுளம் கொண்டு ஒரு வயோதிகராக  இவரிதம் வந்து யாசகம் கேட்டார், அவருக்கு சீனப்ப நாயக் எந்த யாசகமும் தரவில்லை. இவ்வாறு ஆறு மாதங்கள் கழிந்தன. ஒரு நாள் முதியவர் சீனப்பநாயக்கின் ,மனிவியிடம் சென்று யாசகம் கேட்டார், அந்த அம்மையாரும் என்னுடைய சொத்து எதுவுமில்லை எல்லாம் அவருடையது என்று மறுக்க, உன் மூக்குத்தி உன் பிறந்த வீட்டில் போட்டது தானே அதைக்கொடு என்று கேட்ல அந்த அம்மையாரும் அதை கழற்றிக்கொடுக்க அதை சீனப்பநாயக்கிடமே சென்று விற்க, தனது மனைவியின் வைர மூக்குத்தி போல அல்லவா உள்ளது என்று சந்தேகப்பட்டு அம்மூக்குத்தியை தனது இரும்புப்பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு வீட்டிற்கு சென்று பார்த்தபோது மனைவியின் மூக்கு மூளியாக இருப்பதைக்கண்டு மூக்குத்தி எங்கே என்று வினவ அந்த அம்மையாரும்  ஸ்நானம் செய்வதற்காக கழற்றி வைத்துள்ளேன் எடுத்து வருகின்றேன் என்று கூறி, உள்ளே சென்று கணவனை ஏமாற்றி ஏழை பிராமணனுக்கு உதவியதற்காக தனது வைர மோதிரத்தை உடைத்து பாலில் கலந்து குடிக்க சென்றபோது அந்த கிண்ணத்திலிருந்து அந்த வைர மூக்குத்தி  வெளியே விழுந்த்து. இறைவனின் கருனையை எண்ணி வியந்த அந்த அம்மையார் அதை தன் கணவரிடம் கொடுத்தார். அதை எடுத்துக்கொண்டு கதைக்கு ஓடிய சீனப்பநாயக் அங்கு இரும்புப்பெட்டியை திறந்து பார்க்க அங்கு வைர மூக்குத்தியை காணாமல் திகைத்தார். அவருக்கு உண்மை புலனாகியது. வயதானவராக தன்னிடம் வந்து யாசகம் கேட்டவர் வேறு யாருமல்ல மஹாலக்ஷ்மியை தனது மார்பில் கொண்ட  மாதவன் ஸ்ரீஹரிதான். தனது லோபித்தனத்தினால் அவரை தரிசனம் செய்யும் பாக்கியத்தை இழந்தேனே! வ்ன்று மனம் வருந்தி தனது செல்வம் அனைத்தையும் துறந்து உடுத்த உடுப்புடன் மனைவி மற்றூம் மகனுடன் ஸ்ரீஹரியை நோக்கி தேடி நடுவீதியில் நடக்கலானார்பின்னர் வியாஸராஜரை கண்டு அவரால் தீக்ஷை பெற்று புரந்தரதாஸராகி, புரந்தரவிட்டல என்ற அங்கிதத்தில் சுமார் 4,75,000 கீர்த்தனைகள் புனைந்தார். வியாஸராஜர் பிருந்தாவனஸ்தரான போது உடனிருந்தவர் இவர்துங்கபத்ரா நதிக்கரையிலேயே சுற்றி வந்த புரந்தரதாசர் தன் காலத்தை கழித்து இறுதியில் சக்ர தீர்த்த கரையிலேயே அந்தர்யாமியானார். அந்த இடத்தில் ஒரு மண்டபம் உள்ளது அதன் ஒரு தூணில் கையில் தும்புராவுடன் புரந்தரதாசர்  சிலை உள்ளது. இம்மண்டபத்திலிருந்தும் அஞ்சனாத்ரியை  தரிசிக்கலாம்இம்மண்டபத்திற்கு இடப்புறம் அழகான கல்லால் ஆன இராஜ துலாபாரம் உள்ளது. இத்துலாபாரத்தில் ஒரு சமயம் கிருஷ்ணதேவராயர் ஸ்ரீவியாசராஜருக்கு எடைக்கு எதை தங்கம் தந்து மகிழ்ந்தாராம்.  அரசர்கள் சில நாட்களில் தங்கள் எடைக்கு நிகரான செல்வத்தை ஏழை மக்களுக்கு இத்துலாபாரத்தில் நிறுத்து  கொடுத்தனர் என்பாரும் உண்டு. இம்மண்டபத்திற்கு அருகில் ஒரு பாழடைந்த  ஆனேகுந்தியையும், ம்பியையும் இனைக்கும்  பாலம் உள்ளது.

Labels: , , ,

1 Comments:

Blogger SV said...

Wonderful. Iam posting amazing temple info in my blog yesveesbi.blogspot.com. i will use the information. Thanks a lot

September 28, 2020 at 4:50 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home