பார்த்தசாரதிப்பெருமாள் ஏசல்
சித்திரை பிரம்மோற்சவ கருட சேவை
கடல் அலை போல் பக்தர் வெள்ளம்
அதில் நீந்தி வரும் பார்த்தசாரதிப் பெருமாள்
இன்று ஏசல் சேவையை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. அதிகாலை 5:30 மணிக்கு கோபுர வாசல் சேவையுடன் கருட சேவை துவங்கியது. மேற்கு மாட வீதியில் பெருமாள் வழங்கும் அற்புத தரிசனம் காணும் வாய்ப்பு அடியேனுக்கு கிட்டியது, முதலில் கங்கை கொண்டான் மண்டபம் வரை பக்தர்களின் தேங்காய் பழம் மற்றும் பட்டு துண்டுகளை ஏற்றுக்கொண்டு சேவை சாதித்த பெருமாள் மண்டபம் வந்தவுடன் அப்படியே பின் நோக்கி மாட விதியின் இறுதி வரை சென்று பின்னர் கருடனில் பறந்து வருவது போலவே அற்புதமாக மேள சத்ததிற்கு ஏற்றவாறு ஆடி வரும் அந்த அழகை எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை. நேரில் வந்து தரிசித்தால் மட்டுமே அதை உணர முடியும்.
சிறு பார்த்தசாரதிகள்
கங்கை கொண்டான் மண்டப சேவை
Labels: ஏசல், கருடசேவை, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதிப் பெருமாள்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home