Saturday, December 26, 2009

தமிழுக்கு ஏற்றம் தரும் விழா - 2

Visit BlogAdda.com to discover Indian blogs
சோழநாட்டு திவ்ய தேச சேவைகள்

1.திருவரங்கம்திருவரங்கம் தெற்கு கோபுரம் பகல் காட்சி மற்றும் இராக்காட்சி

2. உறையூர்
3. குணசீலம்

குணசீலம் திருக்கோவில்


குணசீலம் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்

(குணசீலம் திவ்ய தேசமல்ல)
4.திருஅன்பில்
வடிவழகிய நம்பி பரமபத வாசல் சேவை


கங்கையினும் புனிதமான காவிரி பாயும் சோழநாட்டு வளமையைக் காணலாம் இப்படங்களில். தென்னை மரங்களுக்கிடையில் திருக்கோயில் அமைந்துள்ளது.5.திருப்பேர் நகர்
அப்பக்குடத்தன்


6.திருவெள்ளறை


7. திருக்கரம்பனூர் ( உத்தமர் கோவில்)
உகந்தருளிய நிலங்களாம் திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து ஆழ்வார்கள் பாடிய பாடல்களே திவ்ய பிரபந்த பாசுரங்கள். இந்த தீந்தமிழ் பாசுரங்களை பெருமாள் முன் சேவிக்கும் உற்சவமே அத்யயனோற்சவம். சுரத்தோடு கூடிய பா என்பதால் இவை பாசுரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.


ஒரு பாசுரத்தை பொதுவாக நான்கு இடங்களில் நிறுத்தி சேவிப்பர். ன்ற என்ற பதம் வரும் போது அது ன்ன என்று சேவிக்கப்படுகின்றது ஏனென்றால் ன்ற என்று சேவிக்கும் போது பெருமாளுக்கு அது கடுமையாக இருக்கும் என்பதால் அது ன்ன என்று சேவிப்பது மரபு.

இப்பாசுரங்கள் எம்பெருமான் முன் பாடப்படுவதில்லை ஆனால் சேவிக்கப்படுகின்றன. இவ்வாறு சேவிப்பர்கள் அத்யாபகர்கள் என்றழைக்கப்படுகின்றனர். திருமால் திருக்கோவில்களில் ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் இறைவன் திருவோலகத்தில் இசையுடன் ஒதப்பட்டன. இவ்வாறு தமிழ் பண்ணிசையில் வல்லுநராய் திவ்ய பிரபந்தங்களை இசைத்தவர்கள் விண்ணப்பம் செய்வோர் எனப்பட்டனர் பாசுரங்களை சேவிக்கும் போது முன் பகுதியை ஒரு பிரிவினரும் பின் பகுதியை ஒரு பிரிவினரும் சேவிப்பது கோஷ்ட்டி சேவிப்பது எனப்படும். சேவிப்பர்களை சேவாகால கோஷ்ட்டி என்று அழைப்பார்கள்.

ஒரு காலத்தில் வழக்கொழிந்து போயிருந்த திவ்ய பிரபந்தங்களை நாம் எல்லாரும் உய்ய மீண்டும் அளித்தவர் நாதமுனிகள். திருக்குடந்தையில் ஆராவமுதனை நாம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த ஒரு பாசுரத்தை கேட்டு அவருடைய திருவாய்மொழி ஆயிரம் பாசுரங்களையும் அறிய வேண்டுமென்று பெரியோர்களின் அறிவுரைப்படி திருநகரி சென்று மதுரகவியாழ்வாரின் கண்ணிநுண்துரும்பு பாசுரத்தை இலட்சம் முறை சேவித்து நம்மாழ்வரால் யோக தசையில் ஆயிரம் பாசுரங்கள் மட்டுமல்ல, அனைத்து ஆழ்வார்களின் நாலாயிரம் பாசுரங்களையும் பெற்றவர் நாதமுனிகள். இவரே திவ்யபபிரபந்தகளுக்கும் பண்ணும் தாளமும் வரைமுறை செய்து தன் மருமக்களாகிய கீழையகத்தாழ்வான், மேலையகத்தாழ்வான் இருவருக்கும் ஒதுவித்தார் இவர்களின் சந்ததியினரே அத்யயன பரம்பரையினர்.


இவ்வாறு எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் சிறப்பாக பகல் பத்தின் சாற்றுமுறை நடைபெறும் இந்த பத்தாம் நாளில் , பெருமாள் நாச்சியார் திருக்கோலம் என்னும் மோகனாவதாரம் என்றழைக்கப்படும் மோகினியாக அருள் பாலிக்கும் இந்நாளில், திரு. தனுஷ்கோடி அவர்கள் சென்ற வருட வைகுண்ட ஏகாதசி அன்று சேவித்த சோழ தேசத்து திவ்ய தேசங்களின் ஒரு புகைப்படத்தொகுப்பே இப்பதிவு.

Labels: , , , , ,

4 Comments:

Blogger குமரன் (Kumaran) said...

காவிரிக் கரையில் வீற்றிருக்கும் எம்பெருமான் திருக்கோலங்களைக் கண்டு சேவிக்கும் படி தந்ததற்கு மிக்க நன்றி கைலாஷி ஐயா.

December 29, 2009 at 11:57 AM  
Blogger Kailashi said...

எல்லாம் அவர் செயல் குமரன் ஐயா.

ஓம் நமோ நாராயணா.

December 29, 2009 at 6:53 PM  
Blogger ADHI VENKAT said...

அன்புடையீர்,

உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.

http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_11.html

தங்கள் தகவலுக்காக!

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கம்

January 10, 2014 at 4:33 PM  
Blogger Muruganandam Subramanian said...

வைகுண்ட ஏகாதசியன்று வலைச்சரத்தில் இந்த வலைப்பூவை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி ஆதிவெங்கட்.

January 16, 2014 at 8:46 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home