Sunday, November 13, 2011

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -1

Visit BlogAdda.com to discover Indian blogs
நவ பிருந்தாவனம் - ஆனேகுந்தி

காலம் காலமாக சம்சார பந்தத்தில் கட்டுண்டு உழலும் நம்மை நல்வழிபடுத்தி நாம் உய்ய வழி காட்டும் பல் வேறு மகான்கள் இப்பாரத தேசத்தில் பல்வேறு காலங்களில் தோன்றிக் கொண்டு இருக்கின்றனர் அவர்களின் அவதார நோக்கம் முடிந்து தம் உடலை நீத்தாலும் பல் வேறு இடங்களில் ஜீவசமாதியில் இருந்து பின்னும் நமக்கு அபரிமிதமான கருணையினால் அவர்கள் நமக்கு நல்வழி காட்டிக்கொண்டு இருக்கின்றனர். இவ்வாறு ஒன்பது மத்வ மகான்கள் ஜீவ பிருந்தாவனம் கொண்ட இடம் தான் துங்கபத்ரா நதியில் நடுவே அமைந்த நவ பிருந்தாவனம் என்னும் புண்ணிய ஷேத்திரம் ஆகும். திருவரங்கம் போல ஹம்பி, ஆனேகுந்தி அருகே துங்கபத்ரை நதியின் நடுவே அமைந்த ஒரு மணல் திட்டில் அமைந்துள்ளது நவபிருந்தாவனம். அது போல ஹரிவாயு குரு என்றும், ராயரு என்றும் போற்றப்படும் ஸ்ரீஸ்ரீ இராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ள இடம் மந்திராலயம் ஆகும் இந்த பிருந்தாவனமும் துங்கபத்ரை நதிக்கரையில்தான் அமைந்துள்ளது. இந்த இரு தலங்களுக்கும் மற்றும் இவற்றின் அருகில் அமைந்துள்ள சில தலங்களுக்கும் சென்று வந்த யாத்திரை அனுபவமே இனி வரும் பதிவுகள்.


ஸ்ரீஸ்ரீ இராகவேந்திர சுவாமிகள்

நவ பிருந்தாவனத்தின் பெருமைகளை முதலில் தமிழ் கூறும் நல் உலகத்தினருக்கு காட்டியவர் திரு. A.M.இராஜகோபால், குமுதம் ஜோதிடம் ஆசிரியர் அவர்கள். அவரின் எழுத்துக்களை படித்து விட்டு எனது மைத்துனன் ஒரு சமயம் நவபிருந்தாவனம், ஹம்பி, மந்திராலயம் சுற்றுலா சென்று விட்டு வந்து அந்த புகைப்படங்களை எனக்கு அனுப்பி வைத்தான். பின்னர் அம்மன் சத்தியநாதன் எழுதிய நவநிதி நல்கும் நவபிருந்தாவனம் என்னும் நூலையும் கொடுத்தார், அதைப் படித்த பிறகு ஒரு தடவை எப்படியாவது நவபிருந்தாவனம் சென்று வரவேண்டும் என்ற அவா மனதில் தோன்றியது.

பின்னர் ஒரு சமயம் ஒரு இக்கட்டான சமயத்தில் மந்திராலயத்திற்கும் நவபிருந்தாவனத்திற்கும் வந்து தரிசனம் செய்கின்றேன் என்று வேண்டிக்கொண்டேன், இந்த மகான்களின் பேரருளினால் அந்த இக்கட்டு விலகியது வேண்டிக்கொண்டதை நிறைவேற்ற ஒரு அருமையான சந்தர்ப்பம் கூடியது நண்பர் தனுஷ்கோடியின் உதவியினால். அவருடைய நண்பர் திரு.மோகன் அவர்கள் . இந்த யாத்திரையில் வழிகாட்டியாக இருந்து நவபிருந்தாவனம், ஆனேகுந்தி, சிந்தாமணி, அஞ்சானாத்ரி, பம்பா சரோவர், ஹம்பி, மந்திராலயம், பிக்ஷாலயா, பஞ்சமுகி ஆகிய அனைத்து தலங்களுக்கும் அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைத்தார்.

இவர் முதலிலேயே அவர் இரண்டு தலங்களுக்கும் சென்று வந்திருந்ததினால் புகைவண்டிக்கு டிக்கெட் பதிவு செய்வது, தங்க இடம் முன் பதிவு செய்வது, வண்டி என்று எல்லா பணிகளையும் அவரே கவனித்துக் கொண்டார். 2011ம் ஆண்டு துவங்கும் ஜனவரி முதல் நாளில் இந்த மகான்களை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது வாருங்கள் தாங்களும் புகைப்படங்களின் வாயிலாக இந்த பாக்கியத்தைப் பெற அடியேனுடன்.

Labels: , ,

2 Comments:

Blogger T Jagan athan said...

நவ பிருந்தாவனத்தின் பெருமைகளை முதலில் தமிழ் கூறும் நல் உலகத்தினருக்கு காட்டியவர் திரு. A.M.இராஜகோபால், குமுதம் ஜோதிடம் ஆசிரியர் அவர்கள். அவரின் எழுத்துக்களை படித்து விட்டு ஒரு தடவை எப்படியாவது நவபிருந்தாவனம் சென்று வரவேண்டும் என்ற அவா மனதில் தோன்றியது.
Nrusimhar
This blog is guide to me go navabrindavanam.
U & Your family have lot of punniam.
Thanking you.
My email: powerjegan@gmail.com
Cell : 9976292929

June 30, 2012 at 11:21 AM  
Blogger T Jagan athan said...

நவ பிருந்தாவனத்தின் பெருமைகளை முதலில் தமிழ் கூறும் நல் உலகத்தினருக்கு காட்டியவர் திரு. A.M.இராஜகோபால், குமுதம் ஜோதிடம் ஆசிரியர் அவர்கள். அவரின் எழுத்துக்களை படித்து விட்டு ஒரு தடவை எப்படியாவது நவபிருந்தாவனம் சென்று வரவேண்டும் என்ற அவா மனதில் தோன்றியது.
Nrusimhar
This blog is guide to me go navabrindavanam.
U & Your family have lot of punniam.
Thanking you.
My email: powerjegan@gmail.com
Cell : 9976292929

June 30, 2012 at 11:22 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home