Saturday, December 3, 2011

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -13

Visit BlogAdda.com to discover Indian blogs
 
 நவபிருந்தாவனம் 
நாங்கள் செல்லவில்லை என்றாலும் ஆனேகுந்திக்கு அருகில் உள்ள இரண்டு மலைகளை பற்றி சொல்ல விழைகின்றேன் முடிந்தவர்கள் சென்று தரிசிக்கலாம். முதலாவது  அழகு கொஞ்சும் துர்க்கா மலை. அஞ்சனாத்திரி மலை போல் அதிக படிகள் இல்லை, மலைமேலே பெரும்பாலான தூரம் வரை வாகனங்கள் செல்கின்றன எனவே கொஞ்சம் படிகள்தான் அனைவரும் ஏற வேண்டும். இங்கிருந்து நாம் இப்பகுதியின் வனப்பை கண்டு மகிழலாம். மலை மேல் துர்க்கா தேவிக்கு ஒரு கோயில் உள்ளது. அமாவாசை , பௌர்ணமி நாட்கள் மிகவும்  விசேஷம்

இரண்டாவது மலை தாரா பர்வதம். தாரை வாலியின் மனைவி. இவள் சிறந்த பக்தை மற்றும் அருமையான சொல்வன்மை கொண்டவள்மழைக்காலத்திற்காக வானரங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு சமயத்தில் அன்னை சீதா தேவியை  தேட கிளம்பாமல் சுக்ரீவனும் வானரப் படைகளும் களித்துக் கிடந்த  சமயம் இவர்களை நாடி கோபத்துடன் இளைய பெருமாள் இலக்குவன் வந்த போது அவரை சமாதனப்படுத்த சுக்ரீவன் தாரையைத் தான் முன்னிறுத்தினான்வாலிக்கு நல்ல யோசனைகளை தந்தவள் தாரை, வாலி சில சமயம் அவளது யோசனையை கேட்காத் போது  தாரை தியானம் செய்த மலைதான் இந்த தாராபர்வதம்.  இந்த தாரா பர்வதத்திலிருந்து பிரதி அமாவாசை, பௌர்ணமி தோறும்  இரவு நேரங்களில் ஒரு ஜோதி புறப்பட்டு நவ பிருந்தாவனத்தை சுற்றி வருவதாக இங்குள்ளவர்கள் நம்புகின்றன்ர். . தாராபர்வதம் ஆனேகுந்தி படகுத்துறையின் இடப்பக்கம் உள்ளது. நவபிருந்தாவனத்திலிருந்து அருமையாக தரிசிக்கலாம்.  பல்வேறு இடங்களில் வாலி மற்றும் சுக்ரீவனைப்  பேசுகின்றோம் எனவே   அவர்கள் கதையை சிறிது பார்ப்போமா?



ரிக்ஷரஜஸ் என்னும் கபியின் வாலிலிருந்து இந்திர புத்ரனாக வாலியும், கழுத்திலிருந்து சூரிய புத்ரனாக  சுக்ரீவனும் பிறந்தனர், ஒரு சமயம்  மாயாவி என்னும் இராக்ஷஸன் கிஷ்கிந்தை மீது படையெடுத்து வந்தான். அவனை வாலி சுக்ரீவன் இருவரும் துரத்தினர் அப்போது அவனொரு குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டான்,  வாலி அவனுடன் போர் செய்ய உள்ளே சென்றான், சுக்ரீவன் வெளியிலேயே நின்றான், வெகு நேரம்  ஆகியும்  அவன் வெளியே வரவில்லை ஆனால் குருதி மட்டும் வெளியே வந்தது. சுக்ரீவன் வாலிதான் இறந்து  விட்டான் என்று அதை தவறாக  கருதி குகையின் வாசலை ஒரு பெரிய கல்லினால் மூடி வைத்து விட்டு திரும்பினான் இராக்ஷசன் வெளியே வராமல் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தினால். இவ்வாறு சரியாக புரிந்து கொள்ளாமல் சுக்ரீவன் செய்த செயல் வாலிக்கு கோபத்தை மூட்டியது, குகையிலிருந்து வெளியே வந்த அவன் சுக்ரீவன் அரசனாகவும் உள்ளதைக் கண்டு அவனை கொல்ல பாயந்தான் அவனிடமிருந்து தப்பிக்க ஒடினான், வாலியும் துரத்திக் கொண்டு ஒடினான்சுக்ரீவன் ரிஷ்யமுக பர்வதத்தை அடைந்த போது  மாதங்க முனியின் சாபத்தால் வாலி அம்மலையில் கால் வைக்க முடியாமல் திரும்பினான் சுக்ரீவன் அன்று முதல் ஹனுமன் முதலிய தனது நண்பர்களுடன் அங்கு வாழ்ந்து வரலானான். ரிஷ்யமுக பர்வத்ததில் வாலி கால் வைக்க முடியாமல் போனதற்கு காரணம் மதங்க முனி கொடுத்த சாபம்தான். இவர்தான் சபரியின் குருநாதர் என்று முன்னரே பார்த்தோம் அல்லவா?. அந்த கதை என்னவென்றால், துந்துபி என்ற வலிமை மிக்கவன் கிஷ்கிந்தையை தாக்கி துன்புறுத்தி வந்தான். ஒரு சமயம் அவன் எருமை வடிவம் எடுத்து வந்த போது வாலி அவனது காலால் எட்டி உதைக்க அவன் தூக்கி எறியப்பட்டு மதங்கர் தவம் செய்யும் ரிஷ்யமுக பர்வதத்தில் சென்று விழுந்தான். தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களின் தவம் கலைந்ததால்  மதங்க முனிவர் வாலிக்கு சாபம் கொடுத்தார்
துங்கபத்ரா அணை
 
 துங்கபத்ரா அணை சூரியன் மறையும் தருணத்தில் 
சுக்ரீவன் தன்னிடமிருந்து தப்பித்து விட்டதால்  கோபத்துடன் திரும்பி சென்ற வாலி, சுக்ரீவனின் மனைவி ருமையை தனது மனைவி ஆக்கிக்கொண்டான். ஸ்ரீஇராமன் மறைந்திருந்து  அம்பெய்து அவனைக் கொல்வதற்கு இதுவும் ஒரு காரணம் . வாலி மிக சிறந்த வீரன். அவன் இராவணனை தனது  வாலில் கட்டி சுமந்து சென்று கடலில் குளித்து விட்டு வருவானாம். மேலும் அவனுக்கு இருந்த ஒரு வரத்தின்படி  அவனுக்கு நேரெதிர் சென்று போர் செய்பவரின் பாதி வீரம் இவனுடையதாகிவிடும், ஆகவே அவனை எதிர்த்து யாரும் வெல்ல முடியாத வலிமை பெற்றிருந்தான். நீதிக்கு புறம்பானதை செய்ததால் அவன் இராமனின் பாணத்திற்கு இரையாக நேர்ந்தது. இந்த தாரா மலையிலிருந்து  அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் இரவு நேரங்களில்  ஒரு ஜோதி புறப்பட்டு நவபிருந்தாவனத்தை  வலம் வந்து செல்வதாக இங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.   


சுமார் 4 மணியளவில் அஞ்சனாத்ரி மலையிலிருந்து கீழே இறங்கி வந்தோம். புகை வண்டி இரவில்தான் என்பதால் ஹம்பி சென்று பார்த்து வருவோம் என்று புறப்பட்டோம். ஆனேகுந்தியிலிருந்து ஹம்பிக்கு செல்ல ஒரு குறுக்கு வழி உள்ளது அதில் ஆனேகுந்தி பக்கமே நமது வண்டியை நிறுத்திவிட்டு படகு மூலம் துங்கபத்ராவை கடந்து அந்தப் பக்கம் சென்று  வேறு ஆட்டோ அமர்த்திக்கொண்டு ஹம்பியில் பார்க்க வேண்டிய இடங்களையெல்லாம் பார்த்து விட்டு  படகு மூலம் இப்பக்கம் வந்து பின்னர் ஹோஸ்பெட் அடையலாம். எங்களுக்கு அதிக நேரம் இல்லாததால் முடிந்தால் விருபாக்ஷீஸ்வரர்  ஆலயத்தை மட்டும் தரிசித்து உடனே தங்கும் விடுதிக்கு சென்று விடலாம் என்று நாங்கள் ஹோஸ்பெட் வழியாக ஹம்பிக்கு புறப்பட்டோம்.  சுமார் ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம் என்று புறப்பட்டோம். ஆனால் ஹோஸ்பெட்டை நெருங்க நெருங்க  வாகனங்கள் அதிகமாகி விட்டதால் வண்டி ஊர்ந்து செல்ல வேண்டியதாக ஆகிவிட்டதுசென்னையில் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது போக்குவரத்து.

 துங்கபத்ரா கால்வாய்

 போக்குவரத்து  நெரிசல் ஏற்படுத்திய லாரி
இரண்டு பக்கமும் செழிப்பான வயல்களை பார்த்தோம். வாழை மரங்களில் வாழைத்தார்கள்  தொங்கின. தென்றல் காற்றில் நெல் கதிர்கள் ஊசலாடிக்கொண்டிருந்தன. வரும் வழியில் துங்கபத்ரா அணையின் முன்னே வண்டி சரியாக நின்றது  ஏனென்றால் சரியாக அந்த பாலத்த்தின் மேல் வாழைத்தார்களை ஏற்றிச் சென்ற ஒரு லாரி கோளாறு காரணமாக சிக்கிக்கொண்டது. சூரியன் மறையும் அந்த அந்தி வேளையில் வான மகள் ஆரஞ்சுப் போர்வை போர்த்திக்கொண்ட நேரத்தில் அணையின் காட்சி மிகவும் இரம்மியமாக இருந்தது. புகைப்படமும் எடுத்துக்கொண்டோம்.   நல்ல வாய்ப்பு என்று   இறங்கி அணையின்  அழகை இரசித்தோம். துங்கபத்ரா அணையைப்பற்றிய ஒரு சிறிய குறிப்பு. கிருஷ்ணா நதியின் துணை நதி துங்கபத்ரா, துங்கா மற்றும் பத்ரா என்னும் இரு நதிகள் சங்கமமாகி துங்கபத்ரா ஆகின்றது. இந்நதி கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களை வளப்படுத்துகின்றது.
 
 
 துங்கபத்ரா அணை
 ஹோஸ்பெட்டிலிருந்து சுமார் 4.8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அணை. இதன் நீளம் 2.4 கி.மீ, உயரம் 50 மீ. கொள்ளவு 135 டிம்சி, ஆனால் தற்போது அது 30  டிஎம்சி யாக குறைக்கப்பட்டுள்ளது. மூன்று கால்வாய்களின் வழியாக தண்ணீர் பாய்கின்றதுஅனையின் இருபக்கமும் இரு மலைகள் வலப்பக்கம் கயிலாயம் இடப்பக்கம் வைகுண்டம். வைகுண்ட மலையின் மேல் ஒரு ஆஞ்சனேயர் ஆலயம் உள்ளதுமலையின் மேலிருந்து அருமையான  காட்சிகளைக் காணலாம். கயிலாயத்தின் கீழ் அருமையான சிறிய தோட்டம் உள்ளது. நீங்கள் துங்கபத்ரா அணையை ரசித்து கொண்டிருந்த போது மெல்ல மெல்ல ஊர்ந்து ஹோஸ்பெட் வழியாக நாங்களும் ஹம்பி அடைந்து விருபாக்ஷீஸ்வரர் திருக்கோயிலை அடைந்து விட்டோம்.

Labels: , , ,

Sunday, November 27, 2011

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -9

Visit BlogAdda.com to discover Indian blogs
நவ பிருந்தாவனம் பஜே! நவ பிருந்தாவனம் பஜே!



நவபிருந்தாவனத்தில் கடைபிடிக்க வேண்டிய முறைகள்

இனி நவபிருந்தாவத்தை தரிசனம் செய்யும் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகளைக் காணலாமா?

1. நவ பிருந்தாவனம் தீவு பகுதிக்குள் உணவு, தின்பண்டப் பொருள்களை கொண்டு சென்று உண்ணக் கூடாது.

2. இந்த தீவைச்சுற்றியுள்ள நீரில் வாய் கொப்பளிப்பது, முகம் கழுவுவது கூடாது.

3 எக்காரணம் கொண்டும் குளிக்காமல் நவபிருந்தாவனம் வளாகத்திற்குள் நுழையக்கூடாது.

4. லுங்கி, பேண்ட அணிந்து கொண்டு உள்ளே செல்வது கூடாது. வேஷ்டி, துண்டு அணிந்து செல்வது சிறந்தது.

5. பெண்கள், குளித்தபின், தலையை விரித்த நிலையில் உள்ளே செல்லக் கூடாது.

6. நவபிருந்தாவனத்தைச் சுற்றி போடப்பட்டிருக்கும் மஞ்சள் கோட்டைத் தாண்டி உள்ளே செல்லக் கூடாது.

7. நவபிருந்தாவனங்களை எந்தக் காரணம் கொண்டும் தொட்டு வணங்கக் கூடாது.

8. 11 விளக்குகளை அரங்கநாதர் சன்னதியில் ஏற்றி வழிபட்டு 11 முறை நவபிருந்தாவனங்களை வலம் வரலாம்.

9. அங்கப்ரதக்ஷணம் செய்யக்கூடாது.

10. உப்பு, மிளகு முதலியவற்றை பிருந்தாவனங்களின் முன்பு சமர்பிக்கக்கூடாது. கற்பூரமும் ஏற்றக்கூடாது.

ஏனென்றால் இம்மகான்கள் எல்லாம் பரம வைராக்கிய புருஷர்கள், ஆச்சார அனுஷ்டானங்களில் கண்டிப்பானவர்கள், எனவே அங்குள்ள தெய்வீக நிலை பாதிக்கப்படாமல் அமைதியுடன் வழிபட்டு வருவது பக்தர்களாகிய நமது கடமையாகும் என்று திரு. .ஏம். இராஜகோபால் அவர்கள் பக்தர்களின் நன்மையை உத்தேசித்து இவ்விதிமுறைகளை தொகுத்துள்ளார். நாம் நவபிருந்தாவனம் செல்வது நமது துன்பங்களை தொலைத்து நன்மை பெற செய்யக் கூடாத செயல்களை செய்து மேலும் பாவங்களை நாம் அதிகப்படுத்திக்கொள்ளகூதாது என்பதற்காகவே இந்த விதிமுறைகள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். எந்த விதத்ததிலும் ஆழ்ந்த தியானத்தில் உள்ள மகான்களின் தியானத்திற்கு எந்த விதமான பங்கமும் வராதவாறு தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

நான்கு தூண்களுடன் வியாஸராஜர் பிருந்தாவனம்


இனி நவபிருந்தாவனங்களின் அமைப்பைப் பார்ப்போமா, அவதாரத்ரய அனுமனின் ஆலயத்திற்கு நேர் எதிரே நடுநாயகமாக ஸ்ரீ வியாஸராஜரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. ஏனென்றால் இந்த இடத்தில்தான் ஸ்ரீபிரஹலாதன் தவம் செய்திருக்கின்றார். இவருக்கு வலப்புறம் இவரது சீடர்கள் மற்றும் இவருக்குப்பின் பிருந்தாவனஸ்தரானவர்கள் பிருந்தாவனங்கள் உள்ளன. இவருக்கு இடப்புறம் இவருக்கு முன் பிருந்தாவனஸ்தர் ஆனவர்களின் பிருந்தாவனங்கள் அமைந்துள்ளன. இந்த பிருந்தாவனங்களில் வியாஸராஜரின் பிருந்தாவனத்தின் முன் நான்கு தூண்கள் உள்ளன. அவரது பிருந்தாவனத்தின் நான்கு பக்கங்களிலும், சீதாராமர், லக்ஷ்மணன், அனுமன் வியாஸராஜர் சிற்பங்கள் உள்ளன. பீடத்தில் யாணை சிற்பங்கள் உள்ளன.

இரண்டாவது பிருந்தாவனத்தில் ஒரு போர் வீரனும் சந்நியாசியும் சிற்பமாக உள்ளனர். ஸ்ரீஜய தீர்த்தர் தோண்டுபந்த் என்று வீரனாகவும், சந்நியாசியாகவும் உள்ளதை இது குறிக்கின்றது என்பார் ஒரு சாரார். இல்லை ஸ்ரீரகுவீர்யரை ஒரு சமயம் ஒரு மிலேச்சன் துரத்தி வந்ததை இது குறிக்கின்றது என்பது இன்னொரு சாரார் வாதம். ஒன்பதாவது பிருந்தாவனமான கோவிந்த ஒடையரின் பிருந்தாவனம் பத்மநாப தீர்த்தரின் பிருந்தாவனத்திற்கு பக்கத்தில் உருவில் மிக சிறிய பிருந்தாவனமாக விளங்குகின்றது. இவரது பிருந்தாவனத்தில் சன்னியாசி, அனுமன், வீரன் சிற்பங்கள் உள்ளன. நவ பிருந்தாவனத்திற்கு செல்லும் அன்பர்கள் பூஜைக்கு வேண்டிய விளக்கு நெய், திரி முதலியவற்றை தாங்களே எடுத்து செல்லவேண்டும் அங்கு கிடைக்காது.

எல்லோரும் தங்கள் பிரார்த்தனைகளை செலுத்திவிட்டு வரும் வரை அங்கே அமர்ந்து மகான்களில் அருள் மழையில் நனைந்து மிகவும் நிறைவான மனதுடன் இன்னும் பலமுறை தங்கள் அனைவரையும் சேவிக்கும் பாக்கியம் அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டே வெளியில் வந்து படகில் ஏறி துங்கபத்ரையை கடந்து ஆனேகுந்தி வந்து சேர்ந்தோம்.

நவ பிருந்தாவன மகான்களை தரிசித்து விட்டு

திருப்தியுடன் திரும்புகின்றோம்


துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள மண்டபம்

துங்கபத்ரையில் ஒரு கடற்காக்கை

ஆனேகுந்தி திரும்பி வந்து விட்டோம்

ஆனேகுந்தி திரும்பி வந்த போது வைக்கோற்போராக மாறியிருந்த மண்டபம் நாராயண மண்டபம் என்று அறிந்தோம். HOOVA CAFÉ சென்றோம். மதிய உணவு தயாராக இருந்தது. உணவு வீட்டுச் சாப்பாடுதான், இனிப்பு, பாயசம், அப்பளம் ஊறுகாய் என்று தேவாமிர்தமாக இருந்தது. அப்போது தமிழில் பேசி ஒரு இளைஞர் எல்லா உதவிகளும் செய்தார் அவர் யார் என்று கேட்ட போது தான் ஒரு வழிகாட்டி என்றும் பெயர் மஞ்சுநாத் என்றும் அவரது செல் போன் எண் 09449284490, 09480567616 என்றும் முன்கூட்டியே போன் செய்தால் வேண்டிய ஏற்பாடுகளை செய்து தருவேன் என்று கூறினார்.

ஆனேகுந்தி HOOVA CAFEல் மதிய உணவு

தானத்தில் எல்லாம் சிறந்தது அன்னதானம் அல்லவா? அதனால்தான் ஔவையாரும் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று கூறுகிறார். மதிய உணவிற்கு பிறகு திரு.தனுஷ்கோடி அவர்கள் மடத்திற்கு அன்னதானத்திற்காக அனைவரின் சார்பாக நன்கொடை வழங்கலாம் என்று கூறினார், எனவே இராகவேந்திரர் மிருத்திகா பிருந்தாவன மடத்திற்கு சென்றோம், வெளியே கதவு சார்த்தியிருந்தது ஜன்னல் வழியாக உள்ளே இருந்தவர்களிடம் பேசினோம் எங்கள் எண்ணத்தை அறிந்த அவர்கள் கதவை திறந்து அனைவரையும் உள்ளே அனுமதித்தனர். நன்கொடையை பெற்றுக்கொண்டு இரசீது கொடுத்து, ஹரிவாயு குருவிற்கு ஆரத்தி காட்டி தரிசனம் செய்து வைத்து நிறைய பிரசாதமும், அங்கவஸ்திர மரியாதையும் கொடுத்து ஆச்சிரியத்தில் ஆழ்த்தினர்.

ஆனேகுந்தி இராகவேந்திரர் பிருந்தாவனம்

தாங்கள் மேலே படித்த விதிமுறைகள் எல்லாம் இங்கு அனைவரும் காணும் வண்ணம் வைக்கப்பட்டுள்ளன. இந்த மிருத்திகா பிருந்தாவனம் மந்தராலய மடாதீசர் ஸ்ரீஸ்ரீ ஸுஷமீந்த்ர தீர்த்தரால் 2001 ஆண்டு பிரதிஷ்டைசெய்யப்பட்டதாம். சாயுங்காலமே ஆனேகுந்தி செல்பவர்கள் இங்கு இரவு தங்கிக்கொள்ளலாம், உணவு ஏற்பாடுகளும் முன் கூட்டியே சொன்னால் செய்து தருகிறார்கள் நம்முடைய பொருட்களையும் இங்கே வைத்து விட்டு செல்ல வசதிகள் உள்ளன. காலையில் பட்டர் நவபிருந்தாவனம் செல்லும் போது அவருடன் கூடவே சென்று அபிஷேகம் பார்க்கலாம். இராகவேந்திர மடத்தின் மேலாளர் M.S.Ramesh Jodiar, 09480305874, மடத்தின் தொலைப்பேசி எண்: 08533-267733. இவ்வாறு ஆனேகுந்தியில் ஹரிவாயு குருவின் தரிசனம் பெற்றபின் சிந்தாமணிக்கு வண்டி மூலம் புறப்பட்டு சென்றோம்.

பூவில் உள்ள எறும்பைப் பாருங்கள்


பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு

பல்லுயிர்க்கு குங் கல்லிடைப்

பட்டதேரைக்கும் அன்றுற் பவித்திடு கருப்
பைதுறு சீவனுக்கும்

மல்குஞ் சாரசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும்

மற்றுமொரு மூவர்க்கு மியாவருக்கும் அவரவர்
மனச்சலிப்பிலாமலே

படியளக்கும் அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பன் திருவடிகளே சரணம்.

Labels: , ,