கோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -3
சித்திர சுந்தர காண்டம்
வங்காயல குப்பைய செட்டியார் என்பவர் இப் பெருமாளின் பக்தர். இவருக்கு நேர் வாரிசு கிடையாது . எனவே இவரது பங்காளிகள் இவரது சொத்தை அபகரிக்க திட்டமிட்டு மெல்ல கொல்லும் விஷத்தை இவரது உணவில் கலந்து விட்டனர். இந்த உலகம் யாவையும் தாமுளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலுமாகிய அலகிலா விளையாட்டுடை அண்ணலிடம், அந்த ஸ்ரீ ராமரிடம் இவர்கள் கபடம் எவ்வாறு செல்லும், குறிப்பினால் எம்பெருமான் இந்த உண்மையை செட்டியாருக்கு உணர்த்தி விஷத்தையும் முறித்து விட்டார். பின் கோவிலை பெரிதாக கட்டித்தர ஆணையிட்டார். அதே சமயம் கோவில் நிர்வாகி ப்ரா.வே. தேனு குப்தா வெங்கட ரங்கையா அவர்கள் கோவிலை பெரிதுபடுத்த நினைத்தார். செட்டியாரும் பெருமாள் ஆனையை கூறி ரூபாய் 4000/- கொடுத்தார். கோயிலின் பழைய சாமான்களை விற்ற பணம் ரூபாய் 1000/-த்தையும் சேர்த்து 1926 ஜூன் 23 தேதி தொடங்கி, 26ம் தேதி அஸ்திவாரம் தோண்டப்பட்டது. ஆகமவிதிப்படி விரிவாக்கப்பட்டு, 1927ம் வருடம் ஏப்ரல் 30 நாள், நின்ற கோல கோதண்டராமர் , சீதா பிராட்டி, இலக்குவன் சிலைகள் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, வைகாஸன ஆகமவிதிப்படி, கோவிலின் சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. திருநீர் மலை ரங்கனாதப் பெருமாள் சம்ரோக்ஷணத்தன்று இத்தலத்திற்கு எழுந்தருளி மங்களாசாசனம் செய்துள்ளார். பெருமாள் செய்த லீலையின் நினைவாக குப்பைய செட்டியார் தனது மற்றும் தனது மனைவி ஆண்டாளம்மாள் இருவரும் எம்பெருமானை கீழே விழுந்து வணங்கும் நிலையில் சிலைகளை தரையில் செதுக்கச் செய்தார். இன்றும் முன் மண்டபத்தில் இந்த சிலைகளை நாம் காணலாம்.
தற்போது மஹா மண்டபத்தில் ஒரு தூணில் வங்காயல குப்பைய செட்டியார் சிலை அமைத்துள்ளனர்.
அனுமன் சூரியனை பழம் என்று எண்ணி பிடிக்க செல்லுதல்
( அஞ்சனை அன்னை)
பிரம்மாவிடம் வரம் பெறுதல்
சுக்ரீவனின் அமைச்சராதல்
இராம இலக்குவனை வரவேற்றல்
சுக்ரீவனுடன் தோழமை
சீதையை தேடப்புறப்பட்ட போது
அனுமனிடம் கணையாழி அளித்தல்
ஆழ் கடலைக் கடத்தல்
அசோக வனத்தில் சீதையைக்கண்டு
கனையாழி அளித்து சூடாமணி பெறுதல்
சீதையிடம் விடைபெறுதல்
தசக்ரீவனுடன் சரியாசனம்
லங்கா தகனம்
கண்டேன் சீதையை
இராம -இராவண யுத்தம்
இராம பட்டாபிஷேகம்
தாயார் முத்துமாலை பரிசாக அளித்தல்
சஞ்சீவி பர்வத ஆஞ்சநேயர்
யோக ஆஞ்சநேயர்
இவ்வாலயத்தின் சஞ்சீவி பர்வத ஆஞ்சநேயரின் முன் மண்டபத்தில் வரைந்துள்ள இந்த அருமையான ஓவியங்கள் அனுமனின் சரிதத்தை கூறுகின்றன. அதை அன்பர்களாகிய தங்களுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.
இத்தொடரின் மற்ற பதிவுகளைக் காண இங்கு செல்லவும்
திருக்குடமுழுக்கு காட்சிகள் தொடரும் . . . . . . . .
Labels: சித்திர சுந்தர காண்டம்., தக்ஷிண பத்ராசலம், நஞ்சை அமுதாக்கிய பெருமாள்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home