Sunday, June 12, 2016

கோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -1

Visit BlogAdda.com to discover Indian blogs
திருக்குடமுழுக்கு பத்திரிக்கை 



தருமமிகு சென்னையின் ஒரு பகுதிதான் முற்காலத்தில் மாபில ஷேத்திரம் என்று அழைக்கப்பட்ட இன்றைய மாம்பலம். முற்காலத்தில் இப்பகுதி அடர்ந்த காடாக இருந்தது இந்த பகுதியில் ஒரு பெரிய குகை இருந்தது எனவே அது மாபிலம் என்றே அழைக்கபட்டது ( பிலம் என்றால் குகை), அதுவே பின்னர் மருவி மாம்பலம் ஆயிற்று.

 புதுப்பொலிவுடன்  முன் மண்டபம் 

இப்பகுதியில் பல்வேறு புராதானக் கோவில்கள் அமைந்துள்ளன, அவற்றுள் ஒன்று தான் நாம் இக்கட்டுரையில் காண உள்ள ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி திருக்கோவில். மேற்கு மாம்பலத்தில் மேட்லி பாலத்திற்கு தெற்கே அமைந்துள்ளது இக்கோவில். தக்ஷிண பத்ராசலம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகின்றது, சுமார் 150 ஆண்டுகளுக்கு முற்பட்டது இக்கோவில்.


கொடி மரத்துடன் தீபஸ்தம்பம்



தன் அன்பர் ஒருவரை அவரது உறவினர்கள் வைத்த நஞ்சிலிருந்து காப்பாற்றியதால் இவர் "நஞ்சை அமுதாக்கிய பெருமாள்"  என்று அன்புடன் அழைக்கப்படுகின்றார். இத்திருக்கோவிலின் திருக்குடமுழுக்கு மிக சிறப்பாக நடைபெற்றது . வாருங்கள் தாங்களும் அந்த வைபவத்தை கண்டு மகிழுங்கள். 



 தாயார் விமானம் 


ஸ்ரீநிவாசர் திருக்கல்யாண சுதை சிற்பம் 


அரங்கநாதர் விமானம்  

கோதண்டராமர் விமானம் ( பின்புறம்)


விமானத்தில் தசாவதாரங்களையும் காணலாம். 

இராமர் விமானத்தில் கருடாழ்வார்


நரசிம்மர் விமானம் 


மூன்று விமானச்சேவை 

நடுநாயகமாக இராமர் சன்னதி விளங்க, வலப்பக்கத்தில் அரங்கநாதர் சன்னதியும், இடப்பக்கம் நரசிம்மர் சன்னதியும் அமைந்துள்ளது. மூன்று சன்னதிகளுக்குமாக சேர்த்து ஒரே மஹா மண்டபம். மூன்று விமானங்களையும் சேவிக்கின்றீர்கள் அன்பர்களே.  மேலும் தாயார் மற்றும் ஆண்டாள் சன்னதிகள் மற்றும் சஞ்சீவி ஆஞ்சநேயர் சன்னதிகளும், ஹனுமத் தீர்த்தம் என்னும் தடாகமும், லக்ஷ்மி தீர்த்தம் என்னும் மடப்பள்ளிக்கிணறும்  இவ்வாலய வளாகத்தின் உள்ளே அமைந்துள்ளன. 



 ஆண்டாள் சன்னதி விமானம்  



ஆண்டாள் விமான சுதை சிற்பங்கள்  




சஞ்சீவி ஹனுமன் சன்னதி

இத்தொடரின் மற்ற பதிவுகளைக் காண இங்கு செல்லவும் 



திருக்குடமுழுக்கு காட்சிகள் தொடரும் . . . . . . . . 

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home