Wednesday, August 24, 2016

ஹேப்பி பர்த் டே கிருஷ்ணா! (Happy Birth Day Krishna)

Visit BlogAdda.com to discover Indian blogs
கண்ணன்  கேசவன்  நம்பி  பிறந்தனன்



தவழும் கோலக் கிருஷ்ணன் 

 Crawling Toddler Krishna 



வண்ண மாடங்கள்சூழ் திருகோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தமை
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்தளறாயிற்றே   
                                                                  
                                                              -  பெரியாழ்வார்


பார்த்தசாரதிப்பெருமாள்   கோவர்த்தன கிரிதாரி

Parthasarathy Perumaal as Govardhanagiridhari

அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும்  தயிர்வவியும் நெய்யளறு மடங்கப்  
பொட்டத்துற்றி மாரிப்புகைபுணர்த்த பொருமாகடல்வண்ணன் பொறுத்த மலை
வட்டதடங்கண்  மடமான் கன்றினை வலைவாய் பற்றிக்கொண்டு
கொட்டைத்தலைப்பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடையே


Govardhana giridhari 



புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டு வந்து 
அட்டியமுக்கி அகம்புக்கறியாமே 
சட்டித்தயிரும் தாடாவில் வெண்ணையுமுண்
பட்டிக்கன்றே!  கொட்டாய் சப்பாணி பற்பநாபா! கொட்டாய் சப்பாணி



Krishna stealing Butter 


காசையாடை  மூடியோடி காதல் செய்தவனூர்
நாசமாகநம்பவல்ல நம்பிநம்பெருமான்
வேயினன்னதோள் மடவார் வெண்ணெயுண்டான் இவனென்று 
ஏச நின்ற எம்பெருமான் எவ்வுள்கிடந்தானே




ஏணிக் கிருஷ்ணன்


ஊஞ்சல் கிருஷ்ணன்

Krishna on swing 


வேணு கோபாலன் 

Venu Gopalan 

சிறுவிரல்கள்தடவிப்பரிமாறச் செங்கண்கோடச்செய்யவாய் கொப்பளிப்ப
குறுவெயர்ப்புருவம்கூடலிப்பக் கோவிந்தன்குழல்கொடூதினபோது
பறவையின் கணங்கள் கூடுதுறந்து வந்து சூழ்ந்துபடுகாடு கிடப்ப
கறவையின் கணங்கள்கால் பரப்பிட்டுக் கவிழ்ந்திறங்கிச்செவிவியாட்டகில்லாவே


காளிய மர்த்தனர் 

Krishna dancing on  Snake Kaliya 

காளிய மர்த்தன! கமலா நாயகா! 



காயநீர்புக்கு கடம்பேறி காளியன்
தீயபணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி
வேயின் குழலூதி  வித்தகனாய் நின்ற
ஆயன் வந்தப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே!  அப்பூச்சி காட்டுகின்றான்



தேவகி வசுதேவருக்கு சிறையில் விஸ்வரூபம் காட்டியது 

Granting His true form to Devaki and Vasudeva in Prison 



ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தவன் 

Krishna being transported across Yamuna River



பூதனை வதம் 

Slaying of Demoness Budhana

பிறங்கிய பேய்ச்சி முலைகளைசுவைத்துண்டிட்டு
உறங்குவான்போலேகிடந்தைப்பிள்ளை
மறங்கொளிரணியன் மார்பை முன்கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே குவிமுலையீர் ! வந்து காணீரே!



வெண்ணெய் திருடுதல் முதலிய பிள்ளை விளையாட்டு


வெண்ணெய் விழுங்கிவெறுங்கலத்தைவெறபிடையிட்டு அதனோசை கேட்கும்
கண்ணபிரான்கற்றகல்விதன்னைகாக்ககில்லோம் உன்மகனைக் காவாய்
புண்ணிற்புளிப்பெய்தாபோலொக்குந்தீமை புரைபுரையாலிவைசெய்யவல்ல
அண்ணற்கண்ணானோர்மக்னைப்பெற்ற அசோதைநங்காய்! உன்மகனைக்கூவாய்.

கோபியர் தீம்பூ கூற யசோதை கண்ணனை கண்டித்தல் 

On Gopi's complaint Yasodha admonising Krishna 



கோபியருடன் விளையாட்டு

Krishna with Gopikas


Kaaliyamardhana 

தடம்படு தமரைப்பொய்கை கலக்கி விடம்படு நாகத்தை வால்பற்றியீர்த்து
படந்தலை மேலெழப்பாய்ந்திட்டு
உடம்பசையசைத்தானாலின்றுமுற்றும்
உச்சியில்நின்றாலின்றுமுற்றும்



கோபகுமாரர்களை காத்தல் 
 Saving Gopas.


 கன்னியரின் கூறை கவர்தல்

Stealing of young ladies apparels 

கோழியழைப்பதன் முன்னம்  குடைந்துநீராடுவான் போந்தோம்
ஆழியஞ்செல்வனெழுந்தான் அரவணைமேற்பள்ளிகொண்டாய்
ஏழமையாற்றவும்பட்டோம் இனியென்றும் பொய்கைக்குக்குவாரோம்
தோழியும்நானுந்தொழுதோம் துகிலைப்பணிந்தருளாயே.



ராச லீலை 

Rasa Leela

பழக்காரிக்கு அருளியது

Blessing Fruit Seller


கிருஷ்ணன் பால விளையாட்டு

Sports of Small Krishna


கோவர்த்தன கிரிதாரி

Govardhana Giridhari 

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி 

இராதாகிருஷ்ணன் 

RadhaKrishnan 


ருக்மணி கல்யாணம் 

Rukmani  Marriage 

உருப்பிணிநங்கையை தேரேற்றிக்கொண்டு
விருப்புற்றங்கே விரைந்தெதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச்
 சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற தேவகி சிங்கத்தைப் பாடிப்பற


குசேலர்

Sudhama 



தரிக்கிலனாகி தான் தீங்கு நினைத்த 
கருத்தைப் கஞ்சன் வயிற்றில் 
நெருப்பென நின்ற நெடு மாலே !


விற்பெருவிழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னை, புரமெரிசெய்த சிவனுயறுதுயர்களைதேவை
பற்றலர்வீயக்கோல் கையில் கொண்டுபார்த்தன்தன்தேர்முன்நின்றானை
சிற்றவைபணியால் முடிதுறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே.




கீதோபதேச காட்சி 

Parthasarathy

போரொக்கப்பண்ணி இப்பூமிப்பொறை தீர்ப்பான்
தெரொக்கவூர்ந்தாய் செழுந்தாத் விசயற்காய்
காரொக்குமேனிக் கரும்பெருங்கண்ணனே!
ஆரத்தழுவா வந்து அச்சோவச்சோ ஆயர்கள் போரேறே! அச்சோவச்சோ


இப்படங்கள் எல்லாம் சென்னை ISKON ஆலயத்த்தில் எடுக்கப்பட்டவை.

These photos were taken in ISKCON temple Chennai. 



மலர்களால் ஆன கோபால கிருஷ்ணன் 

(Gopala Krishna made out of Flowers) 


சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச்சேவித்து உன்
 பொற்றாமரையடியே  போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்துண்ணுங் குலத்தில் பிறந்து நீ
குற்றேவலெங்களைக் கொள்ளாமற்போகாது
இற்றைப்பறை கொள்வா னன்று காண்கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமேயாவோம் உனக்கேநாமாட்செய்வோம்
மற்றைநம்காமங்கள் மாற்றேலோரெம்பாவாய். 


அன்பர்கள் அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home