Friday, June 16, 2017

காஞ்சி வரதர் கருட சேவை

Visit BlogAdda.com to discover Indian blogs
                            தொட்டாச்சாரியார் சேவை

இவ்வருட கருடசேவை வியாழக்கிழமை வாரநாளில் வந்ததால் இவ்வருடம்  விடுமுறை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும் எனவே கருடசேவை சேவிக்கும் பாக்கியம் இல்லை என்றுதான் எண்ணி இருந்தேன். ஆனால் அவர் எண்ணம் வேறாக இருந்திருக்கின்றது. கருடசேவைக்கு முதல் நாள் ஒரு உறவினர் அடியேன் இல்லம் வந்தார் மறு நாள் எம்பாரை சேவிக்க மதுரமங்கலம் செல்லலாம் என்றார். உடன் இராமானுஜரையும், கூரத்தாழ்வாரையும் சேவிக்கலாம் என்று முடிவு செய்தோம்.  மறு நாள் கிளம்பும் போதும் கருடசேவையை பற்றி  நினைவில்லை ஸ்ரீபெரும்பூதூரில் இராமானுஜரை சேவிக்கும் போதுதான் கருடசேவையைப் பற்றி நினைவு வந்தது. அங்கிருந்த பட்டரிடம் பெருமாள் எப்போது ஆலயம் திரும்புவார் என்று கேட்ட போது  மதியம் ஒரு மணி ஆகும் என்றார்.



அதற்குள் காஞ்சிபுரம் செல்லமுடியுமா? சென்றாலும் பெருமாளை வைகுந்த வாழ்வளிக்கும் கருடசேவையை சேவிக்க இயலுமா? என்ற குழப்பத்தில் காஞ்சிபுரம் நோக்கி சென்றோம். காஞ்சிபுரத்தில் நுழைந்த பிறகும் தெருக்களின் உள்ள கூட்டத்தை வைத்துப் பார்த்த போது பெருமாள் கோவிலுக்குள் எழுந்தருளி விட்டார் என்றே தோன்றியது. இறுதியாக ஆலயத்தையும் அடைந்தோம். ஆனால் ஆலயத்திற்குள் செல்ல முடியவில்லை, இராஜ கோபுர வாயிலில்  வெளியே வருபவர்களை அனுமதித்து உள்ளே செல்பவர்களை தடுத்து  நிறுத்தியிருந்தனர். சுமார் கால் மணி நேரம் கருடசேவையை சேவிக்க இயலுமா? என்று தெரியாமல் காத்துக் கொண்டிருந்தோம். உள்ளே சென்ற போது பெருமாள் கம்பீரமாக கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதித்துக்கொண்டிருந்தார். ஆயிரக்கணக்கான ஸ்ரீவைஷ்ணவர்கள் சுற்றி நின்று வேதம் ஓதிக்கொண்டிருந்தனர். அடியவர்களுடன் அடியவனாக நின்று பெருமாளின் கருடசேவையை திவ்யமாக சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. முத்தாய்ப்பாக கற்பூர ஆரத்தியும் சேவித்தோம் அப்போது எடுத்த புகைப்படங்கள் இப்பதிவில் இடம்பெறுகின்றன. தாங்களும் சேவித்து வரதன் அருள் பெறுங்கள்.

அத்தி வரதன் திருமுக மண்டலம் 


வரதராஜப் பெருமாளாய்தேவாதி தேவனாய்பேரருளாரராய்அத்தி கிரி வரதராய்கஜேந்திர வரதனாய் அத்தியூரனாய்தேவப்பெருமாளாய்பிரணதாரத்திஹரனாய்ஸ்ரீசெல்வராய்ஸ்ரீ மணவாளராய்பெருமாள் எழுந்தருளி அருள் பாலிக்கும் கச்சியம்பதிஇந்த கச்சி வரதனைக் கஜேந்திரன் பல காலம் ஆராதித்தான் என்று ஸ்தல புராணம் கூறுகின்றதுஅதனாலும் அது அஸ்திகிரி (கரிகிரி); பெருமாள் (கஜேந்திரவரதன்திருக்கச்சி நம்பிகள் தேவாதிராஜனிடம் தனக்கொரு பெயர் சூட்டுமாறு பிரார்த்திக்கப் பெருமாள் அவருக்கு கஜேந்திர தாசன் என்று பெயரிட்டாராம்இந்த காஞ்சியின் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றதுஏனென்றால்  தன் அன்பன் ஒருவனுக்காக கச்சி  வரதர் நடத்திய   ஒரு அற்புதம்அது என்ன என்பதைப் பார்ப்போமா?

காஞ்சிபுரத்தின் கிழக்குக் கோடியில் இந்த திவ்ய தேசம் ஐந்து பிரகாரங்களைக் கொண்டதுமத்தியில் அனந்தசரஸ் என்கிற அழகான குளத்தில் ஆதி அத்தி வரதர்” எழுந்தருளியுள்ளார்.  எனவே கச்சி அத்தியூர்” எனவும் வழங்கப்படுகின்றதுபூதத்தாழ்வார் இப்பெருமாளை அத்தியூரான்” என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.  ஆதி அத்திவரதருக்கு அருளாளர்”, “வரதன்”, “ஹஸ்திகிரி நாதன்”, “ஹஸ்திபூஷணம்” என்ற திருநாமங்களுமுண்டு. “கரிகிரீஸா” என்கிறார் கூரத்தாழ்வார்மேலும் தேவாதி தேவராஜன்”, “பிராணதார்த்திஹரண்”, “கரிவரதன்”, “மாணிக்கவரதன்” என்ற திருநாமங்களும் இவருக்குண்டு

திருமங்கை ஆழ்வாருக்குத் தேவைப்பட்ட நிதி கிடைக்க உதவியருளிய  தேவராஜன் உறையும் இடமாக இத்தலம் திகழ்கிறதுராமாநுஜர்கூரத்தாழ்வான்திருக்கச்சி நம்பிகள்வேதாந்த தேசிகர்மணவாள மாமுனிகள் போன்ற சான்றோருக்கு உத்வேகம் அளித்த மூலஸ்தானம் என்பதால்இத்திருகோயில் தியாக மண்டபம்’ என்றும் போற்றப் படுகிறது.

புராணங்களில் திருக்கச்சி, ஹஸ்திகிரி, வேழமலை, அத்திகிரி என்னும் பலவித பெயர்களால் அழைக்கப்படுகின்றது. அத்தியூரானை சேவிக்க 24 படிகள் ஏறி அத்திகிரியை அடைய வேண்டும்.  இத்திவ்யதேசத்தை பூதத்தாழ்வார், பேயாழ்வார்,  திருமங்கையாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். வைணவத்தில் கோவில் என்றால் அது திருவரங்கம், மலை என்றால் திருமலை பெருமாள் கோவில் என்றால் திருக்கச்சி என்பது சிறப்பு.


மூலவருக்கு தென்மேற்கே பெருந்தேவித்தாயார் தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றாள். திருக்குளத்திற்கு எதிரே 16 கரங்களுடன் சக்கரத்தாழ்வார் சன்னதியும், கோவில் வெளிப் பிரகாரத்தில் கண்ணன், இராமர், வராஹப் பெருமாள், ஆண்டாள், ம்மாழ்வார் , கரிய மாணிக்கப்பெருமாள் சன்னதிகளும் அமைந்துள்ளன.



தடம் சுழ்ந்து அழகாய் கச்சி ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி கல்லுயர்ந்த நெடுமதிள் சூழ் கச்சி என்று ஆழ்வார்கள் பாடிப்பரவிய சத்யவ்ரத க்ஷேத்திரத்தில்அன்று காலை வைகாசி திருவோண பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள்அன்றைய தினம் பராங்குசர்சடகோபன்காரி மாறப் பிரான்வகுளாபரணர்வேதம் தமிழ் செய்த மாறன் என்றெல்லாம் போற்றப்படும் நம்மாழ்வாரின் அவதாரத் திருநாளும் பௌர்ணமியும்  இனைந்து வந்ததினால் கூட்டம் தாங்க முடியவில்லை. லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்குக் கூடியிருந்தனர்.

ஒவ்வொரு பெருமாளுக்கும் ஒரு சிறப்பு உண்டுதிருமலையிலே ரதோற்சவம்திருவரங்கத்தில் குதிரை வாகன ஒய்யாளிதிருமாலிருஞ்சோலையிலே குதிரை வாகனம் சிறப்புதிருக்கச்சியில் வரதருக்கு கருட சேவை சிறப்பு.  


தனது யாகத்தில் தோன்றிய ஸ்ரீமந்நாராயண மூர்த்திக்கு பிரம்மனே உற்சவம் டத்தியதாகவும், அதன் வழியாக வருடாவருடம் இவ்வுற்சவம் டத்தப்படுகின்றது என்பது பக்தர்களின் ம்பிக்கை. இவ்வளவு சிறப்பான கருட சேவைக்கு  முதல் நாளே மக்கள் கூட்டம் காஞ்சியில் குவியத் தொடங்கியதுஅத்தி வரதா உன் தங்கக் கருட சேவை காணும் பாக்கியம் பெறப்போகிறோம் உனது கருணையே கருணை என்று ஆனந்த பரவசத்துடன் பக்தர் குழாம் கோவிந்த நாமம்விட்டலாவிட்டலாபாண்டுரங்காபண்டரிநாதாகண்ணா கார் மேக வண்ணா என்று பல வகையிலும் பஜனைப் பாடல்கள் பாடிக்கொண்டு காத்திருந்தனர்இரவும் மெள்ள மெள்ள வளர்ந்து அருணோதய காலம் வந்ததும் கோபுர வாசலின் முன் பக்தர்கள் கூடத் தொடங்கினர்அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர் எப்போது கோபுர வாசல் கதவு திறக்கும் கச்சி வரதரின் மோட்சமளிக்கும் கருட சேவையைக் காணலாம் என்று சூரியனை எதிர்பார்த்து மலரக் காத்திருக்கும் தாமரை மலர் போல லட்சக்கணக்காண மக்கள் காத்துக்கொண்டிருந்தனர்.

கச்சிபதியெங்கும் ஒரே ஆரவாரம் மற்றும் மகிழ்ச்சி ஆனால் சோழ சிம்மபுரம் என்னும் திருக்கடிகையில்பெருமாள் யோக நரசிம்மராய் மலை மேலும்ஆக்வான முத்திரையுடன் பக்தோசிதராய் மலை அடிவாரத்திலும் எழுந்தருளி அருள் பாலிக்கும் சோளிங்கரில் மட்டும் ஒரு பக்தர் துடித்துக் கொண்டிருந்தார்.  அவர் தொட்டாச்சார்யார்அக்காரக்கனி யோக நரசிம்மருக்கு கைங்கர்யம் செய்து வந்தவர்அவருக்கு வயதாகி விட்டதால் காஞ்சி செல்ல முடியவில்லை தள்ளாமை அவரை சாய்த்து விட்டதுநினைவு தெரிந்த நாளிலிருந்து காஞ்சி வரதரின் கருட சேவையை தவற விட்டதில்லை அவர்சோழ சிம்ம புரத்திலிருந்து வருடம் தவறாமல் நடந்து சென்று கருட சேவையை தரிசித்து வந்தவர்.  ஆனால் இவ்வருடம் அவரால் நடந்து செல்ல முடியவில்லைமதில் சூழ் அழகார் கச்சி செல்ல முடியவில்லை ஆனால் அவர் மனம் முழுவதும் அந்த வரதர் தான் நிறைந்திருந்தார்அவருடைய கருட சேவை கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்தார்  "தொட்டாச்சாரியார் என்னும்  அந்த  பரம பக்தர்.


ஆற்றாமையால் அந்த அன்பர் கதறிக்கொண்டிருந்தார்., பிரம்மா அன்று நடத்திய வேள்வியில் தோன்றிய பிரபுவே இன்று ஏன் இந்த நாயேனை இவ்வாறு செய்து விட்டீர்? கோபம் கொண்டு நதியாக ஓடி வந்த சரஸ்வதியின் குறுக்கே சேதுவாக படுத்த அவளது கோபத்தை அடக்கிய திருவெஃகா சொன்ன வண்ணம் செய்த பெருமாளே ஏன் இந்தச் சோதனை உன் அன்பனுக்கு திருமங்கை மன்னன், மன்னனுக்கு கட்ட பணம் இல்லாமல் தவித்த போது பொருள் காட்டி அவர் துயர் தீர்த்த பேரருளாளரேஇன்று மட்டும் ஏன் ஐயா தங்கள் மனம் உருகவில்லை? இராமனுஜரைக் காக்க காட்டுக்குள்ளே பெருந்தேவித் தாயாருடன் வேடுவ உருவில் சென்று காத்து இரட்சித்த கருணைக் கடலே என் தேவாதி தேவாஎன் கூக்குரல் உன் காதில் விழவில்லையா ஐயனே உன் சித்தம் இரங்காதா? திருகச்சி நம்பிகளுடன் பேசி இராமானுஜர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்த அத்திகிரி வரதாஎனக்கு மட்டும் பதில் தர மனம் வரவில்லையா? கேட்டவர்க்கு கேட்ட வரம் அருளும் திருவரதாகளிற்றுக்கு அன்று அருள் புரிய கடுகிக் கருடனில் வந்த பிரபோஎன்னை உன் தரிசனம் காண அந்த கருடனை அனுப்பி தூக்கிச்செல்ல சொல்லக் கூடாதா? என்றெல்லாம்அழுது துவள்ந்து கிடந்தார் சோளிங்கரில் தொட்டாச்சாரியார்.

காலை நான்கு மணி வெளியே நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு பகவான் கருட வாகனத்தில் புறப்பட்டதற்கு அறிகுறியாக மேள சத்தமும்திவ்ய பிரபந்த ஒலியும்வேத ஒலியும் காதில் இன்ப நாதமாக வந்து விழுந்தனதூங்கிக் கிடந்தவர்களை எல்லாம் எழுப்பினார்கள்எங்கும் வரதாகோவிந்தாகண்ணாபெருமாளே என்ற சத்தம் அலை கடல் சத்தம் போல ஒலித்தது. வாண வேடிக்கைகள் இரவை பகலாக்கின அந்த வெளிச்சத்திலேயே வாகன மண்டபத்தில் இருந்து கருட வாகனத்தில் ஆரோகணித்து  புறப்படும் பெருமாள், ம்மாழ்வார் சன்னதி, தேசிகன் சன்னதி, இராமானுஜர் சன்னதிக்கு எழுந்தருளுகிறார். இச்சன்னதிகளில் பெருமாளுக்கு மரியாதை செய்யப்படுகின்றது. பின்னர் வரதர் கோபுர வாசலுக்கு வந்தார்மெதுவாக கோபுர வாசல் கதவுகள் திறந்தன எங்கும் அல்லோலகல்லம் சென்னியில் அஞ்சலி கூப்பி கச்சி வரதாஅத்தி வரதாசத்ய வரதா! என்று மெய் புளகாங்கிதம் அடைந்து கண்ணில் நீர் சோரப் பக்தர் குழாம் நின்றிருந்த போது தான் அந்த அதிசயம் நடந்தது.


“திடீரென்று வரதர் மாயமாய் மறைந்து விட்டார்”!

எங்கே வரதர்எங்கே வரதர் என்ற கூக்குரல்கள் கிளம்பினஅன்பர்கள் அனைவரும் திகைத்து நின்றனர்யார் என்ன அபசாரம் செய்தோமோஇவ்வாறு நடந்தது என்று அவர்கள் மயங்கி நின்ற வேளையில்... அங்கே சோளிங்கரில் இது வரை நடக்க முடியாமல் படுக்கையில் கிடந்த தொட்டாச்சாரியார் எழுந்து ஓட ஆரம்பித்தார் தக்கான் குளத்தை நோக்கிஅங்கே அவருக்காக வரதராஜப் பெருமாள் காத்திருந்தார் கருட வாகனத்தில்என் அன்பனேநீ வர முடியாவிட்டால் என்னநானே வந்து விட்டேன் உனக்காக என்று பறவை ஏறும் பரம்புருடன் சேவை சாதித்தான்தொட்டாச்சாரியார் தண்டனிட்டு பெருமாளை வணங்கிகண்களில் ஆனந்த கண்ணீர் வழிய பெருமாளேஎமக்காக நீர் இவ்விடம் வந்தீரே உமது கருணையே கருணை நீர் உண்மையில் க் வத்சலன் தான்பக்தோஷிதன் தான்பேரருளாளர் தான் என்றும் பலவாறு துதி செய்து போற்றினார்அடுத்த கணம் ....

பேரருளாளன் கருட சேவை 

காஞ்சியில் முன் போல் வரதர் ஒய்யாரமாக நின்றார்தனது அன்பரின் தூய பக்திக்காகத் தாம் சோளிங்கர் சென்று சேவை சாதித்ததை உணர்த்தினார் பெருமாள்பக்தர்கள் அனைவரும் பக்திப் பரவசத்தில் தெண்டனிட்டு வீழ்ந்து வணங்கினார் தேவராஜரின் கருணையை எண்ணிஎனவே இன்றும் கருட சேவையன்று கோபுர வாசல் சேவை முடிந்தவுடன் பெருமாளை வஸ்திரம் கொண்டு மறைக்கின்றனர்இச்சேவை  "தொட்டாச்சாரியார் சேவை என்று அழைக்கப்படுகின்றது.   இவ்வாறு பெருமாள் தொட்டாசாரியாருக்குச் சேவை சாதித்தது சுமார் 400  வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றதுஇன்றும் அது  இடைவிடாமல்  தொடர்கின்றது. இந்த தொட்டாச்சாரியார் சேவையின் போது கருடன் வந்து வானில்  வட்டமிட்டுச் செல்கின்றான்.

பெருமாள் யோக நரசிம்மராயும்அனுமன் யோக அனுமனாகவும் இரு மலைகளில் அருள் பாலிக்கும் சோளசிம்மபுரம் என்றழைக்கப்படும் சோளிங்கரில் தக்கான் குளக்கரையில் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நித்ய கருட சேவையில் பெருமாளைச் சேவிக்கலாம்.

பின்னர்  கோபுர வாசல் தரிசனம்,  தொட்டாச்சாரியார் சேவை முடித்து ஓடி புள்ளேறி சேவை சாதிக்கும் பேரருளாளர் நகர் வலம் வருகின்றார் முன் புறம் அத்யாபக கோஷ்டி திவ்ய பிரபந்தம் சேவித்து செல்கின்றது அந்தத் தமிழின் பின்னர்க் கருட வாகனத்தில் பெருமாள் ஒய்யாரமாக வருகின்றார்.   வரதர் மட்டுமல்ல கருடனும் நகைகளில் மின்னுகின்றார். நாகத்திடன் இருந்து பறித்த மணிகளையெல்லாம் தன் மேனியெங்கும் கருடன் அணிந்திருப்பது போலத் தோன்றியது.  பெருமாளின் பின்னே வேத பாராயண கோஷ்டி வேதம் ஓதிக் கொண்டு வருகின்றது. சூரிய மேளம், பேரி மேளம், கேரளாவின் செண்டை மேளம் முழங்க யானை, குதிரை புடை சூழ  லட்சக் கணக்கான மக்கள் வெள்ளத்தின் நடுவே விளக்கொளிப் பெருமாள் ஆலயத்திற்கு எழுந்தருளி அங்கு எழுந்தருளியுள்ள வேதாந்த தேசிகருக்கு அருளுகின்றார். பிறகு பிள்ளையார் பாளையம், கச்சபேஸ்வரர் ஆலயம், மற்றும் கங்கணா மண்டபம் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றார். நிறைவாக அழகாக நடை போட்டு 6 கி.மீ தொலைவில் பெரிய காஞ்சிபுரத்தில், பாண்டவ தூதர் திருக்கோவிலுக்கு அருகில் உள்ள கங்கை கொண்ட சோழன் மண்டபம் சென்று மண்டகப்படி கண்டருளி மெள்ள நடையிட்டு திருக்கோவிலுக்குத் திரும்பி வருகின்றார்.
வழியெங்கும் லட்சக்கணக்கான மக்கள் கருடனில் ஆரோகணித்து வரும் வரதரைச் சேவிக்கக் காத்து நிற்கின்றனர்இத்தனை பேருக்கும் அருள் பாலித்து  கோவிலுக்குள் பெருமாள் நுழையும் அந்த நடையழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. கீழறங்கி ஒய்யாரமாக கண்ணாடி அறைக்கு எழுந்தருளுகின்றார் கச்சி வரதன்அத்தி வரதன்கரி வரதன்முடிந்தால் காஞ்சி சென்று தேவாதி தேவரின் கருட சேவையை கண்டு களியுங்கள்,

பிரம்மா நடத்திய வேள்வித் தீயில் இருந்து தோன்றிய அந்த அழகிய திருமுகத்தை மிக அருகில் இருந்து அற்புதமாகச் சேவிக்கலாம்.   நிச்சயம் அது ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமையும்.

உற்சவ தினங்களில் ஏழு கிலோமீட்டருக்குக் குறைவின்றி (கருட சேவையன்று சில கிராமங்கள் கூடவேபுறப்பாடு கண்டருளும் வழக்கம் கிருஷ்ண தேவராயர் காலம் தொட்டே முறைப்படுத்தப்பட்டுத் தொடரும் ஒன்றாகும்பெரிய குடைகள்பரிவாரங்கள் சகிதம் தோள்களிலேயே வாகனம் ஆரோகணித்து எழுந்தருள்வது வேறு எந்த ஊரிலும் காணமுடியாதது.

வாகன மண்டபத்தில் கற்பூர ஆரத்தி 

வைகாசி விசாகம்ஆழ்வார்களுள் தலையாய நம்மாழ்வார் அவதரித்த தினம்அவர் இயற்றியதிருவாய்மொழியின் தொடக்கப் பாசுரமே உயர்வற உயர்நலம் உடையவன் எனத் தொடங்கிஅயர்வறு அமரர்கள் அதிபதி யவனவன் துயரறு சுடரடி தொழுதெழன் மனனே’ என முடிவதால்இப்பாடல் ஸ்ரீதேவராஜனையே குறிக்குமெனப் பெரியோர் கூறுவர்.

இப்பாசுரத்துக்கு ஏற்றாற் போல்வேறு எத்தலத்திலும் இல்லாதபடிஇங்கு எழுந்தருளியிருக்கும் நம்மாழ்வாரின் வலக்கை விரல்கள் ஞான முத்திரையாய் இதயம் நோக்கிக் கவிந்திருப்பது சிறப்பாகும்.

யானைகுதிரைவாண வெடிகள்பாண்டுநாதஸ்வர இசையோடு நாலாயிர திவ்யப் பிரபந்தத்தையும்வடமொழி வேதத்தையும் சந்தம் சேரும் பொலிவுடன் இசைத்து வருவது வேறு எந்தத் தலத்திலும் நிகழாத அநுபவமாகும்இப்பெருமாளுக்கு அருளிச் செயல் பித்தன்’ என்றே ஒரு பரிவுப் பெயருண்டு.

திருமங்கை நின்றருளுந் தெய்வம்……..
கொடிமேல் புள் கொண்டான்…….
அத்தியூரான் புள்ளையூர்வான் அணிமணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான்…… ( .தி 96)

பெரிய திருவடியான கருடன் மேல் வருபவன் அழகிய மாணிக்கங்களையும்இனிய படப்பொறிகளையும் உடையவனான திருவனந்தாழ்வான் மேல் அறி துயில் கொண்டிருக்கும் மாயன்திருக்கச்சியில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத பிரம்மோற்சவத்தில் நடைபெறும்  வரதராஜப்பெருமாளின் சிறப்பான கருட சேவையை இத்தொடர் குறிப்பிடுகின்றது.

வேதாந்த தேசிகரை பெருமாள் வைகுந்தத்திற்கு அழைத்தபோது, இங்கு காஞ்சியில் மிகவும் கோலாகலமாக கருட சேவை நடைபெறுவது போல வைகுந்தத்தில் நடைபெறாதே என்று காஞ்சியிலேயே இருக்கின்றேன் என்று பதிலிறுத்தாராம். 

தூணில் உள்ள ஒரு கருட சேவை சிற்பம் 

15ம் நூற்றாண்டில் வாழ்ந்த  கவி காளமேகம் அவர்கள் இந்த அத்தி வரதனின் வைகாசி பிரம்மோற்சவ கருட சேவையின் போது ஓளி மிக்க கருடன் மீது பொன் வண்ணத் திருமேனியுடன் அத்திவரதன் திருவீதி வலம்  வரும் அழகைக் கண்டு  இகழ்வது போல் புகழும் நிந்தாஸ்துதி வகையில் இவ்வாறு பாடியுள்ளார்.

பெருமாளும்  நல்ல  பெருமாள்அவர் தம்
திருநாளும் நல்ல திருநாள்! – பெருமாள்
இருந்திடத்தில்  சும்மா  இராமையினால்ஐயோ!
பருந்து எடுத்துப் போகிறதே  பார்!
.

சித்ரா பௌர்ணமியன்று இன்றும் பிரம்மன் வந்து வரதராஜப் பெருமாளை ஆராதிப்பதாக ஐதீகம். இராமானுஜருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வான் பார்வை பெற்ற தலம் என்பதால் கண் தொடர்பான வியாதிகள் இத்தலத்தில் வழிபட சரியாகும். இத்தலத்தின் தலவிருட்சம்  அரசமரம் ஆகும், புத்திர தோஷம் உள்ளவர்கள் இம்மரத்தை சுற்றி வந்து வழிபடுகின்றனர். தோஷ வர்த்திக்காக தக பல்லி தரிசனம் இக்கோவிலின் சிறப்பு. வைகாசி பிரம்மோற்சவம் தவிர புரட்டாசி மாத திருவிழா, வைகுண்ட ஏகாதசி போன்ற திருவிழாக்கள் சிறப்பாக டைபெறுகின்றன. 
திருக்கச்சியில் வைகாசித் திருவோண நாளை தீர்த்த நாளாகக் கொண்ட இந்த  பிரம்மோற்சவ கருட சேவையின் போது வரதராஜப்பெருமாள் இராஜ வீதிகளில் உலா வந்து அருளுகின்றார்.   ஒரு   வருடத்தில் மற்ற இரண்டு தடவை கருட சேவை நடைபெறுகின்றதுஆனி மாத சுவாதியன்று  பரதத்வ நிர்ணயத்தை குறிக்கும் ஆனி கருட சேவையின் போது மாட வீதிகளில் மற்றும் உலா வருகின்றார்ஆடியில் கஜேந்திர மோட்சத்தைக் குறிக்கும் கருட சேவை ஆகும். அன்று கோவில் குளத்திற்கு பெருமாள் எழுந்தருளி கஜேந்திர மோட்ச லீலையை காண்பத்தருளி பின்னர் மாடவீதி வலம் வந்து அருளுகின்றார்.  பொங்கலுக்கு மறு நாள்  பரந்தாமன் பாரிவேட்டைக்காகப் பழைய சீவரம் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருளி மாலை பழைய சீவரம் நரசிம்மப்பெருமாள் மற்றும் முக்கூடல் அப்பன் வெங்கடேசப் பெருமாள்  ஆகியோருடன் சேவை தந்தருளுகிறார்.

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home