Tuesday, December 18, 2007

பகல் பத்து ஏழாம் நாள்

Visit BlogAdda.com to discover Indian blogs
சத்ய நாராயணப் பெருமாள் கீதோபதேச திருக்கோலம்



அஷ்டாக்ஷர மந்திர உபதேசம் பெற்ற பரகாலர் நாச்சியார்ருடன்



திருமொழித் திருநாளின் ஏழாம் நாள் அன்றும் திருமங்கை மன்னனின் மூன்றாம் பத்து மற்றும் நான்காம் பத்து சேவிக்கப்படுகின்றது.

பரகாலர் வட மொழி வேதங்கள் நான்குக்கொப்பாக நம்மாழ்வாரின் அருளிச் செயல்களுக்கு ஆறு அங்கங்கள் போன்று பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை,சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் ஆறு திவ்விய நூல்களையருளித் திருமங்கையாழ்வார் என்று திருநாமம் பெற்றார். இவற்றுள் பெரிய திருமொழிப் பாடல்களியற்றும் போது எம்பெருமான் சேவை சாதிக்கும் திருப்பதிக்ளுக்கு தானே சென்று வணங்கி திருப்பிருதி முதல் திருக்கோட்டியூர் நிறைவாக பாசுரம் பாடியுள்ளார்.

இன்று திருவயிந்திபுரம், திருசித்ரகூடம் சோழ நாட்டுத் திருப்பதிகளான திருக்காழிžராம விண்ணகரம், திருவாலி,திருநாங்கூர் திருப்பதிகள் பதினொன்று (1. திருமணி மாடக் கோவில்: 2.திருவைகுந்த விண்ணகரம் : 3.திரு அரிமேய விண்ணகரம் 4.திருத் தேவனார் தொகை 5.திருவண் புருடோத்தமம் 6.திருச்செம்பொன்செய்கோவில் 7.திருத்தெற்றியம்பலம் 8.திருமணிக்கூடம் 9.திருக்காவளம்பாடி. 10.திருவெள்ளக்குளம்(அண்ணன் கோவில்): 11. திருப்பார்த்தன் பள்ளி ), மற்றும், திருவிந்தளுர், திருவெள்ளியங்குடி ஆகிய திவ்ய தேசங்களின் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன.
இன்று திருவல்லிக்கேணியிலும் திருமயிலையிலும் பெருமாள் பகாசுரவதத் திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.

என்னுடைய நண்பர் திரு S.A. நரசிம்மன் அவர்களின் பல படங்களை இந்த இடுகைகளில் சேர்த்திருக்கின்றேன் அவருக்கு நன்றி.

4 Comments:

Blogger வடுவூர் குமார் said...

படம் தெரியவில்லை.

December 18, 2007 at 7:43 PM  
Blogger துளசி கோபால் said...

எனக்குப் படங்கள் தெரிகின்றன.

//எதிர்பாராத காரணத்தினால் தொடர்ச்ச்சியாக எழுத முடியவில்லை அத்ற்காக மன்னிக்கவும். //

இதுக்கென்னங்க பெரிய வார்த்தையெல்லாம்?

எப்ப முடியுமோ அப்ப எழுதுங்க. யாருக்குப் படிக்கணுமுன்னு 'விதிச்சிருக்கோ' அவுங்க காத்திருந்து படிப்பாங்க.

அருமையா இருக்குங்க.

December 18, 2007 at 8:06 PM  
Blogger S.Muruganandam said...

அனைத்தும் அவன் செயல். நன்றி

December 18, 2007 at 8:17 PM  
Blogger S.Muruganandam said...

வாருங்கள் வடுவூரரே, அழ்கிய ஸ்ரீராமனின் சேவை கண்டு மகிழ்பவரே.
உங்கள் இணைப்பு மெதுவாக இருந்தால் சிறிது நேரமாகலாம். காத்திருந்து சேவியுங்கள்.

December 18, 2007 at 8:21 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home