திருமொழித் திருநாள் எட்டாம் நாள்
சத்யநாராயணப் பெருமாள் யோக நரசிம்மர் திருக்கோலம்
திருமொழித் திருநாள் எட்டாம் நாள் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியின் ஐந்து மற்றும் ஆறாம் பத்துகள் சேவிக்கப்படுகின்றன.
பரகாலர் ஆலிநாடன், அருள் மாரி, அரட்டமுக்கி, அடையார்žயம், கொங்குமலர் குழலியர் வேள், மங்கை வேந்தன், கொற்றவேல் பரகாலன், கலியன் என்ற விருதுகள் கொண்ட பாயிரம் பாடிகொண்டார்.
திருவரங்கன் ஆணைப்படி அப்பெருமானுக்கு மண்டபம், கோபுரம், விமானம், பிரகாரம் முதலிய பணிகளை செய்தருளினார். திருமதில் கட்டும்போது தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலை கட்டிவந்தவிடம் நேர்பட அதனையொதுக்கி கட்டிவித்தார்.
பகல் பத்தின் எட்டாம் நாள் திருபுள்ளபூதங்குடி, திருக்கூடலூர், திருவெள்ளறை, திருவரங்கம், திருப்பேர்நகர், திருநந்திபுர விண்ணகரம், திருவிண்ணகர், திருநறையூர் ஆகிய திருப்பதிகளின் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன.
இன்று பெருமாள் திருவல்லிக்கேணியிலும் திருமயிலையிலும் ஸ்ரீராமர் பட்டாபிஷேக கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home