Tuesday, December 18, 2007

நாச்சியார் திருக்கோலம்

Visit BlogAdda.com to discover Indian blogs




நாச்சியார் திருக்கோலம் ( மோகினி அவதாரம்)



பகற்பத்தின் நிறை நாள் சகல் விஷ்ணுவாலயங்களிலும் நாச்சியார் திருக்கோலம் என்னும் மோகினி அவதாரத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றார். திருமங்கையாழ்வாரின் ஒன்பது, பத்தாம் பத்துக்களும், தாண்டகங்களும் இன்று சேவிக்கப்படுகின்றன.

இன்றைய தினம் பகல் பத்தின் சாற்றுமுறை நாள் ஆகும்.


பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்தில் அழகிய மணவாளப்பெருமாளின்
நாச்சியார் திருக்கோலம் - 1





எம்பெருமான் யோக நித்திரையிலிருந்த போது முரன் என்னும் அசுரன் அவரை அழிக்க வந்தான் அப்போது எம்பெருமான் மேனியிலிருந்து ஒரு சக்தி தோன்றி அசுரனை அழித்தது. அசுரனை அழிக்க எம்பெருமான் எடுத்த அவதாரமே மோஹினி அவதாரம்.




நம்பெருமாளின் மோகனாவதாரம் முன்னழகு சேவை - 1





தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை மத்தாகவும் கடைந்த போது பெருமாள் கூர்மாவதாரம் எடுத்து அந்த மலையை தாங்கி அமுதம் வர உதவினார். அமிர்தத்தை அசுரர்கள் பருகாமல் இருக்க தந்திரம் செய்ய பெருமாள் எடுத்த அவதாரமே மோகினி அவதாரம்.



நம்பெருமாளின் மோகனாவதாரம் பின்னழகு சேவை


மூலஸ்தானத்திலிருந்து எழுந்தருளி இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க அரங்கன் எழுந்தருளும் அந்த அழகை வர்ணிக்க அந்த ஆதி சேஷனானலும் முடியாது. முன்னழகும் பின்னழகும் கண்ணை விட்டு நீங்காத காட்சி. வெண் பட்டு உடுத்தி, கையிலே கிளி ஏந்தி, கால்களை மடித்த நிலையில் மாலையிலே, நம் பெருமாளின் அந்த அலங்காரம் பாருங்களேன் எத்தனை அற்புதம்.


மாயை என்னும் மண், பொன், பெண் ஆசையை விட்டு நாளை நான் தரும் பரமபதம் அடைய என்னை சரணடைந்து மாயையிலிருந்து விடுபட்டு வைகுந்த பதம் அடைவீர் என்று உணர்த்துவதாய் பட்டர் விளக்குகின்றார் இவ்வலங்காரத்தை.





பார்த்த சாரதிப் பெருமாள் நாச்சியார் திருக்கோலம்





மாயையே மோகினி அந்த மாயையிலிருந்து மனிதன் விடுபட்டு எம்பெருமான் திருவடிகளில் பூரண சரணாகதி அடைந்தால்தான் வைகுண்டம் என்பதை நாச்சியார் திருக்கோலமும் அடுத்த நாள் சொர்க்க வாசல் சேவையும் உணர்த்துகின்றன. இனி பெருமாளின் பல் வேறு நாச்சியார் திருக் கோலத்தை சேவியுங்கள்.
சத்ய நாராயணப் பெருமாள் நாச்சியார் திருக்கோலங்கள்

align="center">


















நாச்சியார் திருக்கோலம்


ஆழ்வார்கள்





நாளை எம்பெருமானின் வைகுண்ட ஏகாதசி கோலங்களை சேவிப்போம்.

2 Comments:

Blogger வடுவூர் குமார் said...

அருமையான படங்கள்.மிக்க நன்றி.

December 19, 2007 at 1:41 AM  
Blogger S.Muruganandam said...

படங்களை தாங்கள் பார்க்க முடிந்தது குறித்து மகிழ்ச்சி.

December 19, 2007 at 3:55 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home