இராப் பத்து நான்காம் நாள்
சத்ய நாராயணப் பெருமாள் வேணுகோபாலர் திருக்கோலம்
நண்ணி நன்குறைகின்றானை ஞாலமுண்டுமிழ்நத மாலை
பாடிய நம்மாழ்வார்.
திருவாய்மொழித் திருநாளின் நான்காம் இரவு பெருமாள் திருமுன் "கேடில் விழுப்புகழ் கேசவனைப் குருகூர் சடகோபன் சொன்ன ஆயிரத்துள்" நான்காம் பத்து சேவிக்கப்படுகின்றது. இந்த நான்காம் பத்தில் எம்பெருமானது செய்வித்தல் (நியந்த்ருத்வம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.
பூவின் மேல் மாது வாழ் மார்பினாய்
மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே
தாள் பரப்பி மண் தாவிய ஈசனே
எந்நாள் யானுன்னை வந்து கூடுவனே
நின் மலர்த் தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ? என்று சொர்க்க வாசலின் முன் நின்றிருக்கும் நம்மாழ்வார்
பிறந்தவுடன் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் பெற்றோர் இவருக்கு மாறன் பெயரிட்டு அழைத்தனர்.
திருக்குருகூரில் கோயில் கொண்டுள்ள பொலிந்து நின்ற பிரான் மாறனார்க்கு
பரிசாக மகிழ மலர் மாலையணிவித்தது குறித்து ஆழ்வாருக்கு ’வகுளாபரணர்’ என்னும் திருநாமம் ஏற்பட்டது.
பிற மதங்களாகிய யாணைகளுக்கு சடகோபரின் நூலில் காணும் கொள்கைகள் மாவெட்டி போன்றுள்ளதால் ஆழ்வார் ’பராங்குசர்’ என்றழைக்கப்பட்டார்.
ஏழ்மை பிறப்புக்கும் சேமம் இந்நோய்க்கும் ஈதே மருந்து
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமினுன்னித்தே. என்று நம்முடைய எல்லா விணைகளுக்கும் மருந்து அந்த கண்ணன் நாமமே என்று அறுதியிட்டு கூறுகின்றார் நம்மாழ்வார்.
இன்று திருமயிலையில் ஆதி கேசவர் ஊஞ்சல் கிருஷ்ணர் திருக்கோலத்தில் திருவாய் மொழி பாசுரம் கேட்டருளுகின்றார்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home