வைகுண்ட ஏகாதசி
வைகுண்ட ஏகாதசி
அத்யயனோற்சவத்தின் 11ம் நாள் வைகுண்ட ஏகாதசி, இராப்பத்து ஆரம்பம், இராப்பத்தில் நம்மாழ்வாரின் திருவாய் மொழி சேவிக்கப்படுகின்றது.
பூலோக வைகுண்டத்தின் சொர்க்க வாசல்
(வைகுண்ட வாசல், பரமபத வாசல்)
அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு பெருமாள் பரமபத சேவைதந்தருளுகின்றார்.






மார்கழி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி. அன்று அதிகாலை 4 மணி அளவில் பரம பத வாசல் திறப்பு, அன்று நம் பெருமாள் சிவப்பு நிற ரத்ன அங்கியில் சேவை சாதிக்கின்றார். கஸ்து‘ரி திலகத்துடன், ரத்னங்கியிலே சிவப்பு, வெள்ளை, பச்சை, முத்து , பவளம் என்று எல்லா நிற மணிகளும் மின்ன, மெல்லிய சல்லாத் துணி இடையினில் உடுத்தி, கிளி மாலையுடன் , கோல விளக்கே , கொடியே, விதானமே என்று ஆண்டாள் பாடியபடி அழகாக எம்பெருமான் தங்க தோளுக்கினியாளில் எழுந்தருளி விடியர்காலையில் அரங்கன் பட்டர் வம்சத்தினரின் வேத விண்ணப்பம் கண்டருளி அரையர்கள் திருவாய்மொழி தொடங்க இரத்தின அங்கியில் சிம்ம கதியில் நமக்கு வைகுண்ட பேற்றை வழங்க ரங்கா, ரங்கா என்ற கோஷத்துடனே எழுந்தருளுகின்றார். அலைகடலென பக்தர்களின் பக்தி அலை நடுவே பரமபத வாயிலை அடைந்து பிரஜா நதி மண்டபத்தில் வேத முழக்கம் கேட்டருளி பரமபத வாசல் திறக்க பரமபத நாதனாய் சேவை சாதித்து திருமாமணி மண்டபம் என்னும் ஆயிரங்கால் மண்டபம் சேர்ந்து நாள் முழுதும் சேவை சாதிக்கின்றார். பொது ஜன சேவையும், அரையர் சேவையும் நடைபெறுகின்றது. இரவு மணிக்கு திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் அதிகாலை மூலஸ்தானத்தை அடைகின்றார் நம் பெருமாள்.
மூலவர் அரங்கநாதர் முத்தங்கி சேவை தருகின்றார் இன்று முதல் ஒரு வாரத்திற்கு.
திருப்பதி திருமலையிலே மலையப்ப சுவாமி உபய நாச்சியார்களுடன் தங்கத்தேரில் மாட வீதி வலம் வருகிறார்
பரமபத வாசல் சேவை தந்தருளிய பின்.
திருகண்ணபுரத்தில் சொர்க்கவாசல் கிடையாது ஏனென்றால் அத்திவ்ய தேசமே வைகுண்டம் என்பதாக ஐதீகம்.
நின்றவூர் நித்திலம் இரத்ன அங்கியில்
பக்தவத்சல பெருமாள் - ஆழ்வார்கள்
வைகுண்ட வாசல் சேவை
அனைத்து வைணவ தலங்களிலும் மூலவர் மற்றும் உற்சவர் வைர அங்கி, ரத்ன அங்கி, முத்தங்கி, புஷ்ப அங்கி அல்லது சிறப்பு அலங்காரத்தில் இன்று சேவை சாதிக்கின்றனர். பல் வேறு ஆலயங்களில் எம்பெருமான் அளித்த திவ்ய சேவையை கண்டு களியுங்கள்.
திருமயிலை ஆதிகேசவப் பெருமாள் வைர அங்கி
வெள்ளி கருட வாகன சேவை

புவியாளும் பூமாணை, பூமகள் காந்தனை , ஆயர்பாடிக் கண்ணணை, அனந்தன் மேல் அருந்துயில் கொண்டானை, அரங்கத்தானை, உலகளந்த உத்தமனை, வேங்கட வெற்பனை, சத்ய வரதனை கண்டு அனுபவித்து திவ்ய பரபந்தம் சேவித்த திருத்தலம் சென்னை மேற்கு மாம்பலம் சத்ய நாராயணப் பெருமாள் கோவில். காலை 4 மணியளவில் திருப்பாவை சாற்றுமுறை முடிந்து சொர்க்க வாசல் திறப்பு, மூலவரும், மஹாலக்ஷ்மி தாயாரும் அன்று புஷ்பாங்கியிலே சேவை சாதிக்கின்றனர். உற்சவர் உபய நாச்சியார்களுடன் முத்தங்கியிலே சேவை சாதிக்கின்றார்.

சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர்
வைகுண்டநாதன் சேவை
மூலவர் முத்தங்கி சேவை அருளுகின்றார்சென்னை சைதப்பேட்டை ஸ்ரீநிவாச பெருமாள் கருடவாகன சேவை

பரமபத நாதன் சேவை
ஸ்ரீநிவாசர் பத்மாவதி தாயார் பரமபத வாசல் சேவை
வைகுண்ட ஏகாதசியன்று திருவல்லிக்கேணியிலே பார்த்த சாரதி பெருமாள் வஜ்ர அங்கியில் பரமபத வாசல் சேவை தந்தருளுகின்றார். மூலவர் முத்தங்கி சேவை ஒரு வாரத்திற்க்கு.
அதிகாலை 12.00 மணிக்கு விஸ்வரூபம், பின் 1.00 மணி வரை ஏகாந்த திருமஞ்சனம் பின் தனுர் மாத பூஜை அதிகாலை 4.00 மணிக்கு உட்புறப்பாடு 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு. பின் திருவாய்மொழி மண்டபத்தில் தங்க புண்ணிய கோடி விமானத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றார் வஜ்ர அங்கியில். இரவு 10.00 மணிக்கு மண்டப திருமஞ்சனம் 11.30 மணியளவில் பெரிய வீதிப் புறப்பாடு, இரவு 1.00 மணிக்கு அருளப்பாடு, திருவாய் மொழி சேவை.
சென்னை நுங்கம்பாக்கம் ஸ்ரீநிவாசப் பெருமாள்
கருடவாகனத்தில் வைகுண்ட ஏகாதசி சேவை
2 Comments:
வாவ்! அருமையான சேவை.
மிக்க நன்றி.
கைத்தல சேவை, வேடூபறி உற்சவம், நமமாழ்வார் மோட்சம், இய்ற்பா சாற்றுமுறை ஆகியவ்ற்றையும் வ்ந்து சேவியுங்கள்.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home