Friday, July 13, 2012

திருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -4

Visit BlogAdda.com to discover Indian blogs
அனுமந்த வாகன சேவை 


அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி





இரத சப்தமியன்று காலை நான்காவதாக சிறிய திருவடியாம் அனுமந்த வாகனத்தில் சேவை சாதிக்கின்றார் மலையப்பசுவாமி









முதன்முறையாக அடியேனுக்கு சுவாமி காண்பித்த வாகன சேவை இந்த அனுமந்த வாகனம்தான். அன்றுதான் இரதசப்தமிபற்றி தெரிந்து கொண்டேன், பின்னர் முடிந்த போது  ரதசப்தமியன்று திருமலைக்கு சென்று, இந்த வருடம் அனைத்து சேவைகளையும் காணும் பாக்கியம் கிட்டியது. 















அனுமந்த வாகன பின்னழகு



பெருமாளுக்கு முன்பாக கோலாட்டம் ஆடும் தாச கூட்டம் 


பெருமாள் வருவதற்கு முன் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள்

மிகவும் ஆச்சரியதக்க வகையில் எல்லாம் நேரப்பிரகாரம் நடந்தது. மாடவீதி வலம் துவங்குவதற்கு முன்னர் தண்ணீர் வண்டி வந்து முதலில் மாட வீதிகளை எல்லாம் கழுவி விட்டு செல்லும், அதன் பின்னர் துப்புரவு தொழிலாளார்கள் வந்து குப்பைகளையெல்லாம் அகற்றி குப்பைக்கூடையில் சேர்த்து விட்டு செல்வர். பெருமாளுக்கு முன் செல்லும் யாணை, குதிரை, காளை மாடு முதலியவை அசிங்கம் செய்து விட்டால் அதயும் உடனே சுத்தம் செய்து மருந்து அடிக்க ஒரு குழுவினர் வருகின்றனர் அவர்களைத்தான் இப்படத்தில் தாங்கள் காணுகின்றீர்கள். திருமலையை சுத்தமாக வைத்துக்கொள்வதில் நிர்வாகத்தினர் மிகவும் முனைப்பாக உள்ளனர். 

அதேபோல பெருமாளை சேவிக்க வந்திருக்கும் பக்தர்களுக்காக உணவு வசதியும் தேவஸ்தானத்தின் மூலமும் மற்றும் பல அன்பர்கள் மூலமாகவும்  வழங்கப்பட்டது. மோர், காபி,  காலை சிற்றுண்டி, மதிய உணவு என்று எல்லாம் மாட வீதிகளில் விநியோகம் செய்யப்பட்டது.

ஸ்ரீவேங்கடேச  மங்களாசாசனம்

பரஸ்மை ப்ரஹ்மணே பூர்ணகாமாய பரமாத்மநே
ப்ரயுஞ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம்    (7)

அவன் விரும்பி உலகில் அடைய முடியாது இல்லை, உலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் அவனது திருவாணைப்படிதான் தமது காரியங்களை செய்ய முடியும். அவனன்றி ஒரு அணுவும் அசையாது. அத்தகைய திருவேங்கடமுடையானுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.

ஆகால தத்வ மச்ராந்த மாத்மநா மநுபச்யதாம்
அத்ருப்த்யம்ருத  ரூபாய வேங்கடேசாய மங்களம்  (8)

திருவேங்கடமுடையானுடைய திவமங்கள விக்ரஹ சௌந்தர்யத்திலும், த்வ்யாத்ம  ஸ்வரூபத்திலும்  திவ்ய  குணங்களிலும் ஈடுபட்டு அனுபவிப்பவர்கள் போதுமென்று இதுவரை திருப்தி அடைந்தவ்ர்கள் இது வரை இல்லை, இப்பொழுதும் இல்லை, இனி மெலும் இருக்க முடியாது. தெவிட்டாத் ஆராவமுது எம்பெருமான். அத்தகைய திருவேங்கடமுடையானுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.


 

                                                                              மலையப்ப சுவாமியின் சேவை தொடரும்.........

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home