Friday, July 6, 2012

திருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -3

Visit BlogAdda.com to discover Indian blogs
கருட சேவை 



 
கருட வாகனத்தில் எழிலாக மலையப்பசுவாமி 

இரத சப்தமியன்று காலை மூன்றாவதாக தங்க கருட வாகனத்தில் சேவை சாதித்தருளுகின்றார் மலையப்ப சுவாமி. பெருமாளின் வாகனமும் கொடியும் ஆனவன் கருடன். இந்த முக்தி அருளும் கருட சேவையை காண்பவர்கள் பேறு பெற்றவர்கள் என்பவர்கள் ஐயமில்லை. 

 



 திருமலையில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் மாலை மூலவருக்குரிய லக்ஷ்மி ஹாரம், மகர கண்டி அணிந்து மூலவராகவே உற்சவர் மலையப்ப சுவாமி கருட சேவை தந்து அருளுகின்றார்.  பகலில் பெருமாள் கருட சேவைஅ ருளுவது இரத சப்தமியன்றுதான்.



பௌர்ணமி தோறும் இரவில் கருட சேவை  தந்தருளுகின்றார் மலையப்பசுவாமி.






 

 காய்சின பறவையேறி பறந்து வரும்  மலையப்பசுவாமி 

கருட வாகன சேவையைக் காண வந்த கருடன்  (படத்தை பெரிதாக்கிக் கருடனை சேவியுங்கள்)



அதிசயம் தான் பெருமாள் கருட சேவை தரும் போது மேலே இந்த கருடன் மேலே வட்டமிட்டு பெருமாளை சேவித்து விட்டு சென்றது.

 ஆனந்த நிலைய விமானம் 



ஸ்ரீவேங்கடேச  மங்களாசாசனம் 

நித்யாய நிரவத்யாய ஸத்யாநந்த சிதாத்மநே
ஸர்வாந்தராத்மநே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம் (5)


ஸத்யத்வம் (சத்ய ரூபமானவன்), ஜ்ஞாநத்வம் (ஞானமே உருவானவன்), அநந்தத்வம் (நிலையானவன்), அமலத்வம் (குற்றமில்லாதவன்), ஆநந்தவம் (ஆனந்த உருவானவன்) என்ற ஐந்து குணங்களுடன்  கூடியதாக  உபநிஷத்துக்களில் கூறப்படும்  பரப்ரஹ்மமே  திருவேங்கடமுடையான், பாலில் நெய் போல எல்லோருள்ளத்துள்ளும்  உறைந்து நிற்கும் கடவுளான திருவேங்கடமுடையானுக்கு  எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.



ஸ்வதஸ்ஸர்வவிதே ஸர்வ சக்தயே ஸர்வசேஷிணே
ஸுலபாய ஸுசீலாய வேங்கடேசாய மங்களம் (6) 

எம்பெருமான் இயற்கையில் எல்லாம் அறிந்தவன், எல்லாம் வல்லவன், எல்லோருக்கும் இறைவன், ஆயினும் தன் பெருமையை மறந்து எளியவரிடத்துன் இசைந்து பழகுபவன், நற்குணங்கள் உள்ளவன் அந்த  திருவேங்கடமுடையானுக்கு  எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home