Tuesday, August 14, 2012

திருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -5

Visit BlogAdda.com to discover Indian blogs
கற்பக விருட்ச சேவை 



ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பசுவாமி
கற்பகவிருக்ஷ வாகன சேவை

  
அதிகாலை துவங்கி மதியம் வரை சூரிய பிரபை, சேஷ வாகனம், கருட வாகனம், ஹனுமந்த வாகனம் ஆகியவாகனங்களில் சேவை சாதித்தார்  மலையப்பசுவாமி


.

மதியம் சுவாமி புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெற்றது. சக்ரசுவாமி புஷ்கரணிக்கு எழுந்தருள் பக்தர்களுக்கு தீர்த்தம் கொடுத்தருளினார். உடல் முழுவதும் 7 எருக்கன் இலை வைத்து பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர்.

 

பின்னர் சுமார் 4 மணியளவில் மலையப்ப சுவாமி  உபய நாச்சியார்களுடன் கற்பக விருக்ஷ வாகனத்தில் எழுந்தருளி சேவை  சாதித்தார்.  அந்த அற்புத காட்சிகளை இப்பதிவில் காணுகின்றீர்கள்.



குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா பாடலில் வரும் ஒரு சரணம்

யாரும் மறுக்காத மலையப்பா
யாரும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும்
கருணை கடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு




இவ்வாறு கேட்டவருக்கு இல்லை இல்லை,  நினைத்தவருக்கு நினைத்த வரம் தரும் கற்பகமாம் ஸ்ரீதேவி பூதேவி  நாச்சியார்களுடன் பெருமாள் எழுந்தருளி அருள் பாலிப்பதை சேவித்தால் நமது மனக்குறைகள் எல்லாம் தீயினில் தூசாகும் என்பது திண்ணம். நமது அத்தனை பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.  




பிரம்மோற்சவத்தின் போது
 பெருமாள் கற்பக விருக்ஷ வாகனத்தில் சேவை சாதிக்கும் போது கான்பிக்கப்படும் நேத்ர தரிசன தீபாராதனை மிகவும் சிறப்பு வாய்ந்தது. 













படத்தை கிளிக்கி பெரிதாக்கி பெருமாள் மற்றும் தாயார்களின் திருமுக மண்டலத்தை திவ்யமாக சேவிக்கலாம்.



கற்பக விருக்ஷம் பின்னழகு

ஸ்ரீவேங்கடேச  மங்களாசாசனம் 

ப்ரயாஸ் ஸ்வசரணௌ பும்ஸாம்  சரண்யத்வேந பாணிநா
க்ருபயா திசதே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம் (9)

திருவேங்கடமுடையான் தனது வலது திருக்கரத்தை முன்புறமாக கீழ் நோக்கி தனது திருவடியை காட்டுகின்றான். அது இதுவே சரணாகதி என்று உணர்த்துகின்றது.   இந்த உண்மையை  உலகோர்க்கு உணர்த்தும்  திருவேங்கடமுடையானுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும். 

தாயாம்ருத தரங்கிண்யாஸ் தரங்கைரிவ சீதலை
அபாங்கை: ஸிஞ்சதே விச்வம் வேங்கடேசாய மங்களம் (10)

திருவேங்கடமுடையான் தனது தண்ணிய கடைக்கண்களால் உலகத்தை கடாக்ஷிக்கிறான்.  அலை நிறைந்த அம்ருத ந்தியில் அமிழ்ந்தெழுந்தது போல உலகம் களிக்கின்றது. அத்தகைய திருவேங்கடமுடையானுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும். 


                                                                              மலையப்ப சுவாமியின் சேவை தொடரும்.........



Labels: , ,

2 Comments:

Blogger மாதேவி said...

திருவேங்கடமுடையான் கற்பக விருட்ச உலா கண்குளிரப் பெற்றோம்.

மிக்க நன்றி.

August 15, 2012 at 6:37 AM  
Blogger S.Muruganandam said...

மீண்டும் வந்து சேவியுங்கள் மாதேவி

September 10, 2012 at 1:47 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home