திருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -4a
இரத சப்தமி சக்ரஸ்நானம்
சுவாமி புஷ்கரணி நீராழி மண்டபம்
திருமலையில் இரதஸப்தமி அர்த்த பிரம்மோற்சவம் (அரை பிரம்மோற்சவம்) என்றழைக்கப்படுகின்றது. பிரம்மோற்சவத்தின் கடைநாள் சக்ரஸ்நானம் நடைபெறுவது போல இரத சப்தமியன்றும் சக்ரஸ்நானம் நடைபெறுகின்றது . காலை வாகன சேவைகள் முடிந்த பின் உச்சிக்காலத்தில் சுவாமி புஷ்கரணிக்கு சக்கரத்தாழ்வார் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகிறார். அப்போது பக்தர்கள் தலையில் ஏழு எருக்கம் இலைகள் வைத்து குளிக்கின்றனர். இவ்வாறு சூரிய ஒளி நம் மேல் பட நீர் நிலைகளில் குளிப்பது ஞானம் பெற இது உதவுதாக ஐதீகம்.
சக்கரத்தாழ்வாருக்காக காத்திருக்கும் பக்தர்கள்
பீஷ்மர் அம்பு படுக்கையில் இருந்து உத்தராயண காலத்திற்கு காத்துக் கொண்டு இருந்த போது வியாசர் அங்கே வர, தான் இவ்வாறு அம்பு படுக்கையில் கிடந்து அல்லல் படுவதற்கான காரணத்தை வினவ. வியாசர் பதிலிறுக்கின்றார், துரியோதனன் சபையில் பாஞ்சாலியை அவமானப்படுத்த துச்சாதானன் முயன்ற போது பிரம்ம்ச்சரிய விரதம் பூண்ட நீதிமானான தாங்கள் தடுக்காததால் ஏற்பட்ட பாவத்திற்க்கான தண்டனை இது என்றார். ஆம் என்று ஆமோதித்த கங்கை மைந்தர் என்ன்டைய தேகத்தை சூரிய கதிரினால் எரித்து சுத்தம் செய்யுங்கள் என்று வேண்ட எருக்கம் இலைகளால் உடல் முழுவதும் தடவி சுத்தம் செய்தார் வியாசர்.
எருக்கம் இலை அர்க்க பத்திரம் என்று அறியப்படுகின்றது. அருக்கன் என்றால் சூரியன். எருக்கம் இலையில் சூரியனின் சாரம் உள்ளது. என்வேதான் சந்திரனை ஜடாமுடியில் தாங்கும் சிவ பெருமான் எருக்கை சூரியனாக அணிகின்றார்.
ஏழு சுரங்கள் கொண்ட இசை எவ்வாறு மனதை ஒருமைப்படுத்துகின்றதோ அது போல ஏழு நிறங்களால் ஆன சூரியனின் கிரணங்களை எருக்கம் இலை ஈர்த்து மனதை ஒருமைப்படுத்துகின்றது, எனவே இறைவன் திருவடியில் ஒன்றலாம் என்பதை உணர்த்தும் நாள்.
Labels: அர்த்தபிரமோற்சவம். எருக்கன் இலை., சக்ர ஸ்நானம், ரத ஸப்தமி
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home