ஆனந்த தரிசனம்
ஏழு மலையானை தரிசிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. பல தடவை திருமலை சென்று விட்டு எழுமலையானை தரிசிக்காமல் திரும்பி வந்த அனுபவம் பலருக்கு உண்டு அடியேனுக்கும் உண்டு. அது போல சில சமயம் எதிர்பார்த்ததை விட அருமையான தரிசனம் கிடைத்து விடும். இந்த தடவை சென்ற போது ஔர் ஆனந்தமான தரிசனம் கிடைத்தது அதை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மலையப்பசுவாமி பிரகார வலம் வரும் காட்சி
செடியாயவல்விணைகள் தீர்க்கும்திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின் கோவிலின் வாசல்
அடியாரும்வானவரும் அரம்பையரும்கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்து உன் பவளவாய்காண்பேனே!
பல தடவை APSRTC பேருந்து மூலம் சென்றிருக்கிறேன். அப்படி செல்லும் போது வைகுண்டம் காம்ப்ளக்ஸ் மூலம் என்று சீக்கிரம் தரிசனம் செய்து விடலாம். வேண்டிய அளவி லட்டு பிரசாதமும் கிடைக்கும். மேலும் திருச்சானூரில் தாயார் தரிசனமும் கிட்டும். ஆனால் அவர்கள் அழைத்து செல்வது போலதான் செல்ல முடியும், அவசரமாக செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது நல்ல வழி.
இனி ஒரு வழி வெங்கட்நாராயணா சாலையில்(சென்னை) உள்ள திருப்பதி திருமலா ஆலயத்தில் ரூ 50/- சுதர்சன தரிசன சீட்டு வாங்கிக் கொண்டு சென்று நம்முடைய விருப்பம் போல் தரிசனம் செய்து விட்டு வரலாம். இந்தத்தடவை இவ்வழியில் சென்றேன்.திருமலையில் கைப்பேசி. கேமராக்கள் அனுமதிப்பது இல்லை என்பதால் அவற்றை எடுத்து செல்வதில்லை இந்த தடவை என்னவோ தோன்றியது ஒரு சிறிய கைக்கேராவை எடுத்துச் சென்றேன். அதில் பதிவு செய்த சில படங்கள் தங்கள் பார்வைக்காக. ( யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்)

ஊஞ்சலில் மலையப்பசுவாமி
காலை 11 மணி தரிசனத்திற்கு சீட்டு வாங்கிக்கொண்டு சென்றேன் சுமார் மூன்று மணி நேரத்தில் தரிசனம் கிட்டலாம் என்று எதிர்பார்த்தேன்.ஆனால் அதிக சமயம் ஆனது ஆனால் அருமையான தரிசன்ம் கிட்டியது. தரிசனம் செய்து விட்டு வெளியே வரும்போது மணி 4.30 (மாலை).
புதிதாக கட்டியுள்ள கலா மண்டபத்தில் திருவேங்கடவன்
அன்னமய்யா, தியாகராஜர் முதலிய
அதற்கு பின் லட்டு வாங்க சென்ற போது கீழிருந்து ஆனந்த நிலைய விமானத்தின் மேல்பகுதி தெரிந்ததை முதலில் புகைப்படம் பிடித்தேன். பின்னர் புதிய லட்டு வாங்கும் கூடத்தில், விமான வெங்கடேசர் தரிசனம் என்னும் அம்புக்குறியுடன் கூடிய ஒரு அறிவிப்புப் பலகைய பார்த்தேன். எப்போதும் உள் பிரகாரம் சுற்றி வரும் போதுதானே விமான வெங்கடேசர் தரிசனம் கிட்டும் இது என்ன என்று பார்க்க அம்புக்குறி காட்டிய வழியல் சென்றபோது தற்போதைய பொட்டின் அருகில் ஆனந்த விமான நிலையத்தின் நேர் எதிரே ஒரு தற்காலிக மர மேடை அமைத்து விமான வேங்கடவனை தரிசனம் செய்யும் வகையில் அமைத்திருந்தனர். அதன் மேலே ஏறி ஆனந்த நிலையத்தின் முழு அழகையும் கேமராவில் பதிந்தேன் மேலும் இராஜ கோபுரங்களையும் கிளிக்கினேன்.
மஹாதுவார இராஜகோபுரம்
( புரட்டாசி பிரம்மோற்சவத்திற்காக தயாராகின்றது)
பறவைப்பார்வையில் இராஜகோபுரங்கள்
ஆனந்த நிலையம் விமான வெங்கடேசர் தரிசனம்
(வெள்ளி பிரபையில்)
பின்னர் மஹாதுவாரம் வந்த போது சகஸ்ர தீப அலங்கார மண்டபத்தில் தீபங்களை ஏற்றிக்கொண்டிருந்தனர். ஊஞ்சல் சேவையை சேவிக்கும் வாய்ப்புக் கிட்டியதே என்று அங்கேயே சிறிது நேரம் அமர்ந்திருந்து முழு சேவையையும் கண்டேன். முதலில் வேத கோஷத்தின் போது முன்னும் பின்னும், பின்னர் இசையைக் கேத்துக்கொண்டே பக்கவாட்டிலும், அதன் பின்னர் நாதஸ்வர மங்கள் இசையைக் செவி மடுத்துக்கொண்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பொன்னூஞ்சல் ஆடி அருளினார் உற்சவர் மலையப்பசுவாமி. நிறைவாக கோபுர தீபமும், கும்ப தீபமும் கண்டருளினார் சுவாமி.
அன்னமய்யா, தியாகராஜர் முதலிய
பாகவதர்களுடன் ஏழுமலையப்பன்
பள்ளியாவதுபாற்கடல்அரங்கம் இரங்கவன்பேய்முலை
பிள்ளையாய்உயிருண்டஎந்தை பிரானவன்பெருகுமிடம்
வெள்ளியான்கரியான் மணிவண்ணனென்றெண்ணி நாள்தொறும்
தெள்ளியார்வணங்கும்மலைத் திருவேங்கடம்அடைநெஞ்சமே!

ஆனந்த நிலைய தரிசனம்
பின்னர் யானைகள் முன் செல்ல கோலாட்டக்குழுவினர் பின் செல்ல மாட வீதி வலம் வந்து அருளினார். அப்போது எடுத்த சில புகைப்படங்கள் மேலே உள்ளவை. மிகுந்த மன நிறைவுடனும் ஆனந்தத்துடனும் திரும்பி வரும்போது எடுத்த சில படங்கள் கீழே உள்ளன.
(சுதை சிற்பம்)
அகலகில்லேனிறையுமென்று அலர்மேல்மங்கையுறைமார்பா!
நிகரில்புகழாய்! உலகம்மூன்றுடையாய்! என்னையாள்வானே!
நிகரிலாமுனிக்கணங்கள்விரும்பும் திருவேங்கடத்தானே!
புகலொமன்றில்லாஅடியேன் உன்னடிக்கீழமர்ந்துபுகுந்தேனே.

Labels: ஆனந்த நிலைய விமானம், மலையப்பசுவாமி, விமான வேங்கடேசர்