Tuesday, June 21, 2016

கோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -4

Visit BlogAdda.com to discover Indian blogs


                               ஆண்டாள் விமான கலசம்                                    
 ரங்கநாயகித்தாயார் விமானம் 

இனி இக்கோவிலின் அமைப்பைப் பார்போமா? கோவிலுக்குள் நுழையும் போது மொட்டை கோபுரம் தான் நம்மை வரவேற்கின்றது முகப்பில் பட்டாபிஷேக இராமர் திருக்கோல சுதை சிற்பம். உள்ளே நுழைந்தவுடன் அனுமன் சன்னதியின் பின் பகுதி, தன் இதயத்தை பிளந்து ஸ்ரீராமரை காட்டும் கோலமும், கருட பகவானும் நம்மை வரவேற்கின்றனர். சன்னிதியில் சிறிய திருவடியாம் மாருதி, சஞ்சீவி மலையை து‘க்கிய நிலையில் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். உற்சவ மூர்த்தி அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கின்றார், அவரது அழகே அழகு, அஞ்சனா தேவியின் அற்புத புத்திரனின் சன்னிதியின் முன் அழகான மண்டபம், மண்டபத்தின் சுவற்றில் இராமாயண கதை மிகவும் அழகாக சித்திரக்களாக தீட்டப்பட்டுள்ளன.                  (முந்தைய  பதிவில் கண்ட சித்திரங்கள்) பலி பீடத்தில் உப்பும், மிளகும் கொட்டப்பட்டுள்ளன, அம்மன் கோவில்களில் நாம் பார்க்கும் காட்சி இங்கே அனுமன் சந்நிதியிலும் பார்க்கக் கிடைக்கின்றது.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மையளித்து காப்பான்.


(ஐம்பூதங்களில் ஒன்றான வாயுவின் குமாரன் அனுமன், மற்றொரு ஐம்பூதமான ஆகாயத்திலே தாவி, மற்றொரு ஐம்பூதமா ஆழ் கடலை ஸ்ரீ ராமாருக்காக தாவி, இலங்கையிலே பூமி பிராட்டியின் திருமகளார் žதாபிராட்டியைக் கண்டு , கண்டனன் கற்பினுக்கணியை என்று ஆனந்தக்கூத்தாடி, இலங்கையை ஐம்பூதங்களின் ஒன்றான அக்னிக்கு இரையாக்கினான் அந்த சுந்தரன் நம்மை காப்பான்.) என்று சொல்லின் செல்வனை மனதார வணங்கி விட்டு உள்ளே சென்றால் வல பக்கம் ஹனுமந்த தீர்த்தம் என்னும் குளம் உள்ளது. அதன் கரையில் உள்ள கல் வெட்டில் தும்பல பெண்ட நாராயண செட்டியார் நினைவாக அவரது பாரியாள் காமாக்ஷ'யம்மாள் அவர்களால் கீலக வருடம் ஸ்ரீ ஸ்ரீ கோதண்டராமருக்கு ஹனுமந்த தீர்த்தம் என்னும் குளமும், இலக்ஷ்மி தீர்த்தம் என்னும் மடப்பள்ளி கிணறும் அர்ப்பணிக்கப்பட்டது என்பதை தமிழிலும், சுந்தரத் தெலுங்கிலும் இயம்புகின்றது. குளக்கரையில் முன் மண்டபத்துடன் கூடிய ரங்கநாயகித் தாயார் சன்னதியில் ஜகன் மாதாவை வணங்கி தாயார் சன்னதியை வலம் வந்தால், ஊஞ்சல் மண்டபம் காணலாம். வெளி மண்டபத்தின் மேலே கோதண்ட ராமர் சுதை சிற்பம். தீபஸ்தம்பம், பலி பீடம், துவஜஸ்தம்பம் மற்றும் கருடன் சன்னதி இம்மண்டபத்தில் உள்ளன. கருடன் சன்னதியிலும் தெலுங்கில் கல்வெட்டு உள்ளன. கருடனின் அனுமதி பெற்று இராமர் சன்னதியை வலம் வரும் போது விஷ்வசேனர் கோஷ்டத்தில், தானாகவே தோப்புக்கரணம் போட்டு பின் உள்ளே நுழையும் போது இரு புறமும் யானை சிலைகளை கண்டு களிக்கலாம். முன் மண்டபம் இப்போது சன்னதிகள் ஆகியுள்ளன. வலப்புரம் ரங்கனாதர் சன்னதி, இரு புறமும், தாயார்கள் இருவரும் அமர்ந்திருக்க நாபியிலிருந்து பிரம்ம தேவர் எழுந்தருளிய நிலையில், சிறு புலியூர் போல் பால சயனத்தில் சேவை சாதிக்கின்றார் பெருமாள்.

ஆந்சநேயர்  விமானம்

ஆண்டாள் விமானம் 


தாயார் விமானம் 


பச்சைமா மலை போல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே


என்று பாடி வணங்கி விட்டை பின் கர்ப்ப கிரகத்தை நோக்கி உள்ளே சென்றால் நின்ற கோலத்தில் கோதண்ட ராமராக ஸ்ரீ ராமரும், žதா பிராட்டியும், இலக்குவனும் கிழக்கு முக மண்டலத்துடன் சேவை சாதிக்கின்றனர். கீழே ஆதி மூலவரான பட்டாபிஷேக ராமர் சேவை சாதிக்கின்றார். பட்டாபிஷேக ராமர் அருகே ஸ்னான மூர்த்தி, சக்கரத்தாழ்வார். அர்த்த மண்டபத்தில் உற்சவ மூர்த்திகள் சேவை சாதிக்கின்றனர் எம்பெருமானின் திருமேனி அழகே அழகு. வெள்ளி கவசம் போர்த்தப்பெற்று எழிலாக வலக்கையில் அம்பும், இடக்கையில் வில்லும் ஏந்தி சேவை சாதிக்கின்றனர்.


ராமாய ராம பத்ராய ராம சந்த்ராய வேதஸே !
ரகுநாதாய நாதாய žதாய: பதயே நம: !! என்றும்


ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே !
சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம் வராணனே !!


என்று ஈஸ்வரரே திருவாய் மலர்ந்தருளிய சகஸ்ர நாமத்தின் சாரமான ராம நாமத்தை மனமுருக ஜபித்து நின்றால் மனது அப்படியே லேசாகி விடுகின்றது, ஸ்ரீ ராமரை வணங்கி வெளியே வந்தால் இடப்புறம் யோக நரசிம்மர் சன்னதி. அவரை
ஆடியாடி அகங்கரைந்து இசை

பாடிபாடிக் கண்ணிர் மல்கி எங்கும்

நாடிநாடி நரசிங்கா! என்று
வேண்டி இச்சன்னதியிலே உற்சவ மூர்த்த்தியாக எழுந்தருளியுள்ள நவநீத கிருஷ்ணரையும் வணங்கி மற்ற சன்னதிகளுக்கு செல்வோம்.இராமாயண சுருக்கம், இராகவனே தாலேலோ என்று தாலாட்டு என்று இராமரை பற்றி அதிகம் பாசுரம் பாடியதாலோ என்னவோ குலசேகராழ்வாருக்கு தனி சன்னதி. அடுத்தது கருடன், சேனை முதலியார், நம்மாழ்வார், மற்றும் கலியன் சன்னதி . அடுத்த சன்னதி ஆச்சாரியர்கள் சன்னதி, உடையவரும், சலிக்கிராம மாலையுடன் , அனந்தழ்வார் குடைப்பிடிக்க மணவாள மாமுனிகளும் சேவை சாதிக்கின்றனர்.


மூலவர் விமானம் 


கும்பாபிஷேகம் 


மூலவர் விமான கும்பாபிஷேகம் 
கொடிமர கும்பாபிஷேகம் கற்பூர ஆரத்தி 

புனித நீர் தெளிக்கின்றார்கள் 


கும்பாபிஷேகத்திற்க்குப்பின் 
ஆண்டாள் விமான கலசம் 


குடமுழுக்கைக் சேவிக்க வந்த 
பக்தர் கூட்டம் 
இத்தொடரின் மற்ற பதிவுகளைக் காண இங்கு செல்லவும் கோதண்டராமர் குடமுழுக்குப்பதிவுகள் நிறைவு பெற்றன.  வந்து சேவித்த அனைவருக்கும் நன்றி.

Labels: , ,

Saturday, June 18, 2016

கோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -3

Visit BlogAdda.com to discover Indian blogs
சித்திர சுந்தர காண்டம்

வங்காயல குப்பைய செட்டியார் என்பவர் இப் பெருமாளின் பக்தர். இவருக்கு நேர் வாரிசு கிடையாது . எனவே இவரது பங்காளிகள் இவரது சொத்தை அபகரிக்க திட்டமிட்டு மெல்ல கொல்லும் விஷத்தை இவரது உணவில் கலந்து விட்டனர். இந்த உலகம் யாவையும் தாமுளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலுமாகிய அலகிலா விளையாட்டுடை அண்ணலிடம், அந்த ஸ்ரீ ராமரிடம் இவர்கள் கபடம் எவ்வாறு செல்லும், குறிப்பினால் எம்பெருமான் இந்த உண்மையை செட்டியாருக்கு உணர்த்தி விஷத்தையும் முறித்து விட்டார். பின் கோவிலை பெரிதாக கட்டித்தர ஆணையிட்டார். அதே சமயம் கோவில் நிர்வாகி ப்ரா.வே. தேனு குப்தா வெங்கட ரங்கையா அவர்கள் கோவிலை பெரிதுபடுத்த நினைத்தார். செட்டியாரும் பெருமாள் ஆனையை கூறி ரூபாய் 4000/- கொடுத்தார். கோயிலின் பழைய சாமான்களை விற்ற பணம் ரூபாய் 1000/-த்தையும் சேர்த்து 1926 ஜூன் 23 தேதி தொடங்கி, 26ம் தேதி அஸ்திவாரம் தோண்டப்பட்டது. ஆகமவிதிப்படி விரிவாக்கப்பட்டு, 1927ம் வருடம் ஏப்ரல் 30 நாள், நின்ற கோல கோதண்டராமர் , சீதா பிராட்டி, இலக்குவன் சிலைகள் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, வைகாஸன ஆகமவிதிப்படி, கோவிலின் சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. திருநீர் மலை ரங்கனாதப் பெருமாள் சம்ரோக்ஷணத்தன்று இத்தலத்திற்கு எழுந்தருளி மங்களாசாசனம் செய்துள்ளார். பெருமாள் செய்த லீலையின் நினைவாக குப்பைய செட்டியார் தனது மற்றும் தனது மனைவி ஆண்டாளம்மாள் இருவரும் எம்பெருமானை கீழே விழுந்து வணங்கும் நிலையில் சிலைகளை தரையில் செதுக்கச் செய்தார். இன்றும் முன் மண்டபத்தில் இந்த சிலைகளை நாம் காணலாம்.

தற்போது மஹா மண்டபத்தில் ஒரு தூணில் வங்காயல குப்பைய செட்டியார் சிலை அமைத்துள்ளனர். 


அனுமன் சூரியனை பழம் என்று எண்ணி பிடிக்க செல்லுதல் 
( அஞ்சனை அன்னை)பிரம்மாவிடம்   வரம்  பெறுதல் சுக்ரீவனின் அமைச்சராதல் 


இராம இலக்குவனை வரவேற்றல் 

சுக்ரீவனுடன் தோழமை 

சீதையை  தேடப்புறப்பட்ட போது 
அனுமனிடம் கணையாழி அளித்தல்  ஆழ்   கடலைக்  கடத்தல் அசோக வனத்தில் சீதையைக்கண்டு 
கனையாழி அளித்து சூடாமணி பெறுதல் 


சீதையிடம் விடைபெறுதல் 


தசக்ரீவனுடன் சரியாசனம் லங்கா தகனம் கண்டேன் சீதையை  


இராம -இராவண யுத்தம் இராம பட்டாபிஷேகம்
தாயார் முத்துமாலை பரிசாக அளித்தல் 


சஞ்சீவி பர்வத ஆஞ்சநேயர் 
யோக ஆஞ்சநேயர் 

இவ்வாலயத்தின் சஞ்சீவி பர்வத ஆஞ்சநேயரின் முன் மண்டபத்தில் வரைந்துள்ள இந்த அருமையான ஓவியங்கள் அனுமனின் சரிதத்தை கூறுகின்றன. அதை அன்பர்களாகிய தங்களுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.

இத்தொடரின் மற்ற பதிவுகளைக் காண இங்கு செல்லவும் 
 திருக்குடமுழுக்கு காட்சிகள் தொடரும் . . . . . . . .

Labels: , ,

Thursday, June 16, 2016

கோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -2

Visit BlogAdda.com to discover Indian blogs
ஆதி காலத்தில் இவ்வாலயத்தில் இராமர் பத்ராசலத்தில் உள்ளது போல பத்ராசலத்தில் உள்ளது போலவே ஸ்ரீ ராமரின் இடத் தொடையில்          ஸ்ரீ சீதா பிராட்டியர் அமர்ந்திருக்க, இளைய பெருமாள் இலக்குவன் குடைப் பிடிக்க, திருவடியை அனுமன் தாங்க பட்டாபிஷேக கோலத்தில் எழுந்தருளி அருள்பாலித்துக்கொண்டிருந்தார். பின்னர் சீதா லக்ஷ்மண  கோதண்டராமரராகவும் கோவில் கொண்டார் 
இவ்வாலய வளாகத்தின் உள்ளேயே  ஹனுமத் தீர்த்தம் என்ற திருக்குளமும், லக்ஷ்மி தீர்த்தம் என்ற மடப்பள்ளி கிணறும் அமைந்துள்ளன.  திருப்பணி செய்தவர்கள் அமைத்த கல்வெட்டு. 

ஹனுமத் தீர்த்தக்கரையின் கருடாழ்வார் 


பத்ராசல இராமன் வைபவம்: இராமதாசர் ஹைதராபாத் திவானிடம் பணி செய்து வந்தார். அவர் வரியாக வசூலித்த பணத்தைக் கொண்டு பத்ராசலத்தில் இராம பெருமானுக்கு ஒரு சிறந்த கோவிலைக் கட்டினார். அதனால் திவான் அவரை சிறையில் அடைத்தார். சிறையில் வாடிய இராமதாசர் அந்த ஸ்ரீ இராமனையே சரண் என்று அடைந்தார். இராமா உனக்காக கோவில் கட்டியதற்கு கிடைத்த பலன் இது தானா? எத்ற்காக எனக்கு இந்த தண்டனை என்று மனமுருகி வேண்டி நின்றார். தன் அன்பன் சிறையில் வாடுவதைக் கண்டு பொறுக்க முடியாமல் அந்த இராமனும் இலக்குவனுமே அந்த பணத்தை இரு வாலிபர்களாக வந்து திவானிடம் திருப்பித்தர, உண்மை உணர்ந்த திவான் இராமதாசரை விடுதலை செய்தார். ஸ்ரீ இராமரின் பரிபூரண கடாட்சத்திற்க்கு ஆளான பக்த இராம தாஸர் வழி வந்த வேங்கட வரத தாசர் என்பவர் , பத்ராசலத்தில் உள்ளது போலவே ஸ்ரீ ராமரின் இடத் தொடையில் ஸ்ரீ žதா பிராட்டியர் அமர்ந்திருக்க, இளைய பெருமாள் இலக்குவன் குடைப் பிடிக்க, திருவடியை அனுமன் தாங்க பட்டாபிஷேக கோலத்தில் பெருமாளை பிரதிஷ்டை செய்து இக்கோவிலைக் கட்டினார். இந்த ஸ்ரீ பட்டாபிஷேக இராமரே இக்கோவிலின் ஆதி மூலவர். நஞ்சை அமுதாக்கி கோதண்டராமராகவும் இக்கோவிலில் பெருமாள் வந்து அமர்ந்த அற்புத லீலையைப் இனிப் பார்ப்போமா?
மஹா மண்டபத்தின் முன் உள்ள அழகிய யானை சிற்பங்கள் 


ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே |
ரகுநாதாய  நாதாய சீதாயா பதயே நம:  ||


நஞ்சை அமுதாக்கிய பெருமாள் (உற்சவர்)யாக சாலை 


சயனாதி  வாசத்தில்  தாயாரும் பெருமாளும்


பெருமாளுக்கு ஆலவட்ட  கைங்கரியம் செய்யும் பாக்கியம் இன்று அனைவருக்கும் கிட்டியது.


காவல் காக்கும் லக்ஷ்மணப் பெருமாள்


வீணை இசையுடன் திவ்விய பிரபந்தம்
 சேவிக்கும் அன்பர்கள் 

இத்தொடரின் மற்ற பதிவுகளைக் காண இங்கு செல்லவும் 
                                        திருக்குடமுழுக்கு காட்சிகள் தொடரும் . . . . . . . . 

Labels: , , ,