Saturday, April 12, 2008

எந்த ருசிரா ராமா ஏமி ருசிரா! நீ நாமம்

Visit BlogAdda.com to discover Indian blogs

ஸ்ரீராம நவமி


சத்ய நாராயணப் பெருமாள்

இராம பட்டாபிஷேக கோலம்








ஸ்ரீ ராம நாம மகிமை




கௌசலை தன் திருமகனாய் ஸ்ரீ ராமன் அவதரித்த ராம நவமி தினமான இன்று ராம நாமத்தின் மகிமையைப் பற்றி படிப்போம். இராம பட்டாபிஷேக காட்சிகளை கண்டு மகிழ்வோம்.




கிடைப்பதற்கரிய இந்த மானிடப்பிறவியை நாம் எடுத்தது பகவத் பக்தி செய்து சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு, முக்தி என்னும் இறைவனோடு ஒன்றுவதுதான் என்பது நமது சநாதன தர்மத்தின் அடிப்படையான கொள்கையாகும். இவ்வாறு பிறப்பு, இறப்பு என்னும் இந்த சக்கரத்திலிருந்து விடுபடுவதற்கு பகவத் பக்தியென்னும் கருவியே சாலச் சிறந்ததாகும். பக்தி ஒன்பது வகைப்படும்.





1.ச்ரவணம் -கேட்டல் - ஸ்ரீபரிஷத் மஹாராஜா




2. கீர்த்தனம் - புகழ் பாடுதல் - ஸ்ரீ சுகர்




3.ஸ்மரணம் - மனத்தால் சிந்தித்தல் - பிரகலாதன்




4.பாதஸேவனம் - திருவடி பிடித்து அடிமை கொள்ளல் - ஸ்ரீ மஹா லக்ஷ்மி




5.அர்ச்சனம் - புஷ்பம் கொண்டு அர்சித்தல் - ஸ்ரீ பரத சக்ரவர்த்தி




6.வந்தனம் - ஸாஷ்டாங்க வர்தம் - ஸ்ரீ அக்ரூரர்




7.தஸ்யம் - தாசனாக இருந்து பணி புரிதல் - ஆஞ்சனேயர்




8.ஸக்யம் - நண்பனாக இருந்து பழகுதல் -அர்ச்சுனன்




9.ஆத்ம வேதனம் - ஸ்ரீ பலிச் சக்கரவர்த்தி





இவற்றுள் ஸ்மரணம் என்ப்படும் நாம சங்கீர்த்தனத்தால் பக்தியின் உறுதியான நிலையையுண்டு பண்ண வல்லது என்பது நம்து முன்னோர்களான முனிபுங்கவர்கள் கண்ட உண்மையாகும். நாரதர், பிரகலாதன், துருவன் ஆகிய பரம பாகவதர்களின் வரலாறுகள் இந்த உண்மையை நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனிப் போல் உணர்த்துகின்றன.





நாம ஸ்மரணம் செய்ய எண்ணற்ற நாமாக்கள் உள்ளன அவற்றுள் தாரக மந்திரமான ஸ்ரீ இராம நாமாவின் மகிமையை காண்போம்.









கோதண்ட ராமர்



இராம நவமியன்று இரவு



ராம பட்டாபிஷேக சேவை



இராமாயண கீர்த்தனையென்னும் நூலில் அருணாசலக்கவிராயர் இந்த இராம நாமத்தின் சிறப்பபை வெகு அழகாக உருவகம் செய்துள்ளார். "திருந்தும் நம: சிவாய நாராயணா என்று ஜபிக்கு மந்திரம் இரண்டும் மெய்தானே உரைக்கும் மந்திரமிரண்டில் இரண்டாம் எழுத்திரண்டும் ஒரு இராமனாகி வந்த பெருமானே" என்று பெருமிதத்துடன் புகழுகிறார்.




இராம பெருமான் பிறந்த போது வசிஷ்டரை பெயரிட தசரதர் வேண்ட " ஓம் நமோ நாராயணாய", ஓம் நமசிவாய என்ற அஷ்டாக்ஷரம், பஞ்சாக்ஷரம் இவையிரண்டிலும் அமைந்துள்ள இரண்டாம் அக்ஷரமான 'ரா' , 'ம' இரண்டு அக்ஷரங்களை இனைத்து அஷ்டாக்ஷர, பஞ்சாக்ஷர மந்திரங்களின் உயிர் நாடியாக இராம என்று நாமமிட்டார்.


எத்தனை முறை தரிசித்தாலும் திகட்டாத அழகு இராமன்








இந்த மந்திரத்திலுள்ள "ராம" என்ற இரண்டு அக்ஷரங்களை நாம் நீக்கினால் அஷ்டாக்ஷரம், மற்றும் பஞ்சாக்ஷரம் இரண்டும் அர்த்தமற்றதாக ஆகிவிடும். அதாவது 'நாராயண' என்ற வாக்கியத்தில் ராவை நீக்கினால் 'நாயணா' அதாவது ந அயநாய என்று மாறும். அயநம் என்ற பதத்திற்க்கு மோக்ஷம், கதி என்ற பொருள்களுண்டு. எனவே மோக்ஷம் இல்லை என்று பொருள் கிடைக்கும். அது போல 'நம: சிவாய' என்னும் வாக்கியத்திலுள்ள 'ம:' என்ற எழுத்தை நீக்கிவிட்டால் அந்த வாக்யம் 'நசிவாய' என மாறிவிடும். அப்பொழுது 'சிவாய' மங்களத்தின் பொருட்டு 'ந' இல்லை. அதாவது மங்களமில்லை என்பதாகும்.எனவே இந்த இரண்டு மந்திரங்களின் சிறப்பான பொருளும் இந்த இரண்டு அக்ஷரங்கள் இல்லாது போனால் குலைந்து விடும். இவைகளை எவரும் ஜெபம் செய்யமுடியாது.இவ்வாறு வைணவம், சைவம் என்னும் இரண்டுக்கும் பொதுவாக , மையமாக அமைந்த காரணத்தால் நம் முன்னோர்கள் இந்த 'ராம' என்னும் மந்திரத்தை தாரக மந்திரம் என்று பெருமையுடன் போற்றி ஜபம் செய்து வந்தனர்.






தாரகம் என்னும் சொல் ப்ரணவத்தையும், கடத்தல் என்ற பொருளையும் காட்டும். எனவே பிறவிக்கடலைக் கடக்க இந்த இராமநாம தாரகம் என்னும் தோணியே சிறந்தது.





இந்த இராம நாமத்தின் சிறப்பை உணர்ந்து ஜபம் செய்து வந்தால். அந்த ஜபத்தினால் உண்டாகும் அளவற்ற பயன்களை, நமது முன்னோர்களாம முனிகளும், பரமாசார்யர்களும், பலப்படியாக போற்றிப் புகழ்ந்துள்ளதை பல் வேறு பக்தி நூல்களில் விஸ்தாரமாக காணலாம். அதனாலன்றோ தியாகய்யரும் "எந்த ருசிரா இராமா ஏமி ருசிரா ராமா" என்று பக்தி ஒழுக பாடிப்ப்ரவினார் அந்த இராகவனின் நாமத்தை.



அன்னை ஆதி பராசக்தி அன்று நால்வருக்கு அறம் உரைத்த ஆதிகுருவைப் பார்த்து வினவுகின்றாள்










கேனோயாயேன லகுனா விஷ்ணோர் நாம ஸகஸ்ரகம்



பட்யதே பண்டிதைர் நித்யம் ச்ரோது மிச்சாம் யஹம் ப்ரபோ







ஐயனே விஷ்ணு சகஸ்ரநாமத்தை தினமும் பாராயணம் செய்ய எளிமையான வழி என்ன என்று?









ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே



சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராணனே








(வனப்புடன் விளங்கும் வதநத்தையுடையவளே! அழகிய திருமேனியுடையவளே! மனதை கவருகின்றவளே! ஸ்ரீ ராம ராம ராம என்று மனதிற்கு இனிமையாயுள்ள ராமனிடத்தில் இன்பம் கொள்ளுகின்றேன். இந்த 'இராம நாமம்' சஹஸ்ர நாமத்திற்கு ஒப்பாக விளங்குவதாகும் என்று அன்றாலின் கீழ் அமர்ந்து சொல்லாமல் வெறும் சின் முத்திரையால் உண்மைப் பொருளை நால்வருக்கு உணர்த்திய ஸ்ரீ பரமேஸ்வரன் ராம நாமத்தின் சிறப்பை விளக்குகின்றார். )






யதா வர்ணயத்கர்ண மூலேந்த காலே சிவோராம ராமேதி ராமேதி காச்யாம்ததேகம்பரம் தாரகம் ப்ரஹ்மரூபம் பஜேஹம் பஜேஹம் பஜேஹம் பஜேஹம்

பரம பவித்திர இறக்க முக்தித்தலமான காசிசேக்ஷத்திரத்தில் ஜ“வன்கள் சரீரத்தை விடும் போது, ஸ்ரீ விஸ்வநாதர் அவர்களுடைய வலது செவியில் அந்த ஸ்ரீ ராமனுடைய தாரக மந்திரமான "ராம ராம" என்னும் திருநாமத்தை உபதேசம் செய்கின்றார். அந்த ஸ்ரீராமனை, புண்ய புருஷோத்தமனை, சர்வோத்தமனான ஸ்ரீ ராமனை, ஜனன மரண துக்கத்தின் போது நம்மைக் காக்கும் தாரக பிரம்ம ரூபியுமான இராமனை நான் வணங்குகின்றேன் என்று பகவத் பாதாள் இராமனின் சிறப்பைப் பாடுகின்றார்.










இரத்னாகரன் என்ற வேடன் ராம நாமத்தை இடைவிடாது ஸ்மரணம் செய்து வால்மீகியானார்.
இராம நாம பாராயணத்தால் தீராத நோய்கள் தீரும், நீண்ட ஆயுள் சித்திக்கும், பகை ஒழியும், குடும்பச் சச்சரவுகள் நீங்கும், எடுத்த காரியங்கள் கைகூடும், தெய்வீக சக்தி ஏற்படும். எப்பேர்பட்ட பாவமும் தீரும். மரணத்தின் விளிம்பிற்கு செல்பவர்கள் கூட நலம் பெறுவார்கள்.






மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்





தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே





இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்





செம்மைசேர் நாமம் தன்னை கண்களில் தெரியக் கண்டான்.













நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே





திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே





ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே





இம்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்





என்கிறார் கம்பநாட்டாழ்வாரும் இராம நாமத்தின் மகிமையை.








ராமதாபிநீ உபஷத், ராமரகஸ்யோபஷத், முக்திபஷத் முதலிய உபஷத்களில் இராம நாமத்தின் பெருமை விஸ்தாரமாக கூறப்பட்டுள்ளது. எனவே ஸ்ரீராமநாம தாரக மந்திரத்தை ஜப்ம் செய்து வந்தால் இவ்வுலகில் சகல நன்மைகளையும் பெருவதோடு, முடிவில் ஸ்ரீராம ஸாம்ராஜ்யமாம் அழியாப் பேரின்ப நிலையை அடையாலாமென்பது உறுதி.





இராமாயணத்தை கையில் ஏந்திய கோலத்தில்
அருள் பாலிக்கும் அஞ்சனை அரும்புதல்வன்














எங்கெங்கு இராமன் புகழ்ப் பாடப்படுகின்றதோ அங்கெல்லாம் அரக்கர்களுக்கு எமனைப் போன்ற வாயு புத்திரர் சிரஞ்žவி அனுமான், சிரமேற் கூப்பிய கரங்களுடன், ஆனந்தபாஷ்பக் கண்களுடன் தோன்றுகிறார்.







சதாசிவ பிரம்மேந்திரர் தமது பாடல் ஒன்றில் இராம நாம சிறப்பை இவ்வாறு பாடுகின்றார். " ஏ நாக்கே! 'ராம' என்னும் அமுதத்தைப் பருகுவாய். ராமன் என்னும் சுவையைப் பற்றுவாய். பாவங்களின் தொடர்பை அது போக்கும். பலவிதமான பழ ரசங்களால் அது ரம்பியது. பிறப்பு, இறப்பு, அச்சம், துன்பம் இவற்றை அது போக்கும். யமம், ஆகமம் என்னும் எல்லா சாஸ்திரங்களுக்கும் சாரமாக இருப்பது ராம நாமமே. ராமனின் நாமமே உலகைப் பாதுகாக்குகின்றது. வெளிவேஷக்காரர்களையும், நல்லவர்களாக மாற்றுகிறது. சுகர், சவுனகர், கவுசிகர் ஆகியோர் தம் வாயால் ராம அமுதத்தை பருகினார்கள். அத்தகைய ராம அமுதத்தை நீயும் பருகுவாயாக."


இராம பட்டாபிஷேக புறப்பாடு






இராம நாமம் எல்லா நன்மைகளின் இருப்பிடம், கலி தோஷம் நீக்கும், எல்லா வளங்களையும் வழங்ககும் பரமபதத்தினை நல்கும்.






ராமஸ்மரணாதந்த யோபாயம்நஹ’ பச்யாமோ பவ தரணே!
என்றபடி ஸ்ரீ ராமனுடைய சிந்தனை ஒன்றைத் தவிர பிறவிக் கடலைக் கடப்பதற்கு வேறு உபாயம் ஒன்றும் இல்லை எனவே








வைதேஹி-ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹா-மண்டபே


மத்த்யே புஷ்பக-மாஸனே மணிமயே வீராஸனே ஸுஸ்திகம்


அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜன-ஸுதே தத்வம் முனிப்ப்ய்: பரம்


வ்யாக்க்யாந்தம் ப்ரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம்





கற்பக விருக்ஷத்தின் அடியில் அமைந்த ஸ்வர்ண மண்டபத்தின் நடுவில் மமயமான ஆஸனத்தில் வீராஸனமிட்டு சீதாதேவியுடன் அழகாக வீற்றிருப்பவரும், முன்னிருந்து ஆஞ்சனேயர் கேட்கத் தத்துவத்தை முனிவர்களுக்கு விளக்கிக் கூறுபவரும், பரதன் முதலியவர்களால் சூழப்பெற்றவரும், சியாமளவர்ணரும் ஆன ஸ்ரீராமசந்திர மூர்த்தியை "ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம" என்று போற்றி நன்மை அடைவோமாக.








நிறைவாக இராமனுக்கு மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவ்னே, என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ ! என்று ஸ்ரீ ராமனுக்கு தாலாட்டுப் பாடிய குலசேகராழ்வார் பாசுரம் ஒன்று






அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி


அடலரவைப் பகையேறி அசுரர்தம்மை வென்று


இலங்குமணிநெடுந்தோள் நான்கும் தோன்ற


விண்முழுதும் எதிர்வரத் தன்தாமம் மேவி


சென்றுஇனிது வீற்றிருந்த அம்மான் தன்னைத்


தில்லைநகர்த் திருசித்திரகூடந்தனுள்


என்றும்நின்றான் அவன்இவன் என்றுஏத்தி நாளும்


இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர்! நீரே.







இராம பட்டாபிஷேக புறப்பாடு



வஸிஷ்டோ வாமதேவச்ச ஜாபாலிரத காச்யப:

காத்யாயனோ கௌதமச்ச ஸுயஜ்ஞோ விஜயஸ்த்தா

அப்யஷிஞ்சத் தரவ்யாக்கரம் ப்ரஸன்னேன ஸுகந்தினா

ஸலீலேன ஸஹஸ்ராக்ஷம் வஸவோ வாஸவம்ய யதா


( வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காச்யபர், காத்யாயனர், கௌதமர், ஸுயக்ஞர்,விஜயர் ஆகிய மஹரிஷிகள், நறுமணம் நிறைந்த தூய தீர்த்தத்தால் இந்திரனை வஸுக்கள் அபிஷேகம் செய்தவாறு மானிட சிரேஷ்டரான ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேகம் செய்தார்கள்.)


ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
* * * * * * * * *

Labels: , , ,

கோதண்ட ராமரின் அருட் கோலங்கள்

Visit BlogAdda.com to discover Indian blogs
அன்பர்கள் அனைவருக்கும் " இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்" பிறக்கின்ற சர்வதாரி ஆண்டு மங்களமானதாகவும், சிறப்பாகவும் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்

சித்திரை பௌர்ணமியை தீர்த்த நாளாகக் கொண்டு நஞ்சை அமுதாக்கிய ஸ்ரீ ராமருக்கு பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது பிரம்மோற்சவத்தின் சில அருட்காட்சிகளும் மற்றும் மற்றைய உற்சவங்களின் சில அருட்காட்சிகளும் இப்பதிவில்.




ஸ்ரீ இராமர் அனுமந்த வாகனம்






கோதண்ட இராமர் சந்திரப் பிரபை



தை அமாவாசை லக்ஷ தீபம்





தேரிலிருந்து திரும்பும் ஸ்ரீ இராமர்







இராமர் திருத்தேர்



ஸ்ரீ இராமர் கருட சேவை


புன்னை மர வாகன சேவை

சூடிக் கொடுத்த சுடர்கொடியாள் பாடிய
பட்டைப் பணிந்தருளாயே பாசுரம் சேவித்து ஸ்ரீ இராமரை சேவிப்போம்.


வைகுண்ட ஏகாதசியன்று வைகுண்ட நாதர் கோலம்



புஷ்ப பல்லக்கு


நாளை ஸ்ரீ ராம நவமி.
இராம நாம மகிமையும்
பட்டாபிஷேக கோலங்களும்
சேவிப்போம்.

Labels: , , ,