Tuesday, August 14, 2012

திருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -5

Visit BlogAdda.com to discover Indian blogs
கற்பக விருட்ச சேவை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பசுவாமி
கற்பகவிருக்ஷ வாகன சேவை

  
அதிகாலை துவங்கி மதியம் வரை சூரிய பிரபை, சேஷ வாகனம், கருட வாகனம், ஹனுமந்த வாகனம் ஆகியவாகனங்களில் சேவை சாதித்தார்  மலையப்பசுவாமி


.

மதியம் சுவாமி புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெற்றது. சக்ரசுவாமி புஷ்கரணிக்கு எழுந்தருள் பக்தர்களுக்கு தீர்த்தம் கொடுத்தருளினார். உடல் முழுவதும் 7 எருக்கன் இலை வைத்து பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர்.

 

பின்னர் சுமார் 4 மணியளவில் மலையப்ப சுவாமி  உபய நாச்சியார்களுடன் கற்பக விருக்ஷ வாகனத்தில் எழுந்தருளி சேவை  சாதித்தார்.  அந்த அற்புத காட்சிகளை இப்பதிவில் காணுகின்றீர்கள்.குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா பாடலில் வரும் ஒரு சரணம்

யாரும் மறுக்காத மலையப்பா
யாரும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும்
கருணை கடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
இவ்வாறு கேட்டவருக்கு இல்லை இல்லை,  நினைத்தவருக்கு நினைத்த வரம் தரும் கற்பகமாம் ஸ்ரீதேவி பூதேவி  நாச்சியார்களுடன் பெருமாள் எழுந்தருளி அருள் பாலிப்பதை சேவித்தால் நமது மனக்குறைகள் எல்லாம் தீயினில் தூசாகும் என்பது திண்ணம். நமது அத்தனை பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.  
பிரம்மோற்சவத்தின் போது
 பெருமாள் கற்பக விருக்ஷ வாகனத்தில் சேவை சாதிக்கும் போது கான்பிக்கப்படும் நேத்ர தரிசன தீபாராதனை மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

படத்தை கிளிக்கி பெரிதாக்கி பெருமாள் மற்றும் தாயார்களின் திருமுக மண்டலத்தை திவ்யமாக சேவிக்கலாம்.கற்பக விருக்ஷம் பின்னழகு

ஸ்ரீவேங்கடேச  மங்களாசாசனம் 

ப்ரயாஸ் ஸ்வசரணௌ பும்ஸாம்  சரண்யத்வேந பாணிநா
க்ருபயா திசதே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம் (9)

திருவேங்கடமுடையான் தனது வலது திருக்கரத்தை முன்புறமாக கீழ் நோக்கி தனது திருவடியை காட்டுகின்றான். அது இதுவே சரணாகதி என்று உணர்த்துகின்றது.   இந்த உண்மையை  உலகோர்க்கு உணர்த்தும்  திருவேங்கடமுடையானுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும். 

தாயாம்ருத தரங்கிண்யாஸ் தரங்கைரிவ சீதலை
அபாங்கை: ஸிஞ்சதே விச்வம் வேங்கடேசாய மங்களம் (10)

திருவேங்கடமுடையான் தனது தண்ணிய கடைக்கண்களால் உலகத்தை கடாக்ஷிக்கிறான்.  அலை நிறைந்த அம்ருத ந்தியில் அமிழ்ந்தெழுந்தது போல உலகம் களிக்கின்றது. அத்தகைய திருவேங்கடமுடையானுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும். 


                                                                              மலையப்ப சுவாமியின் சேவை தொடரும்.........Labels: , ,

Wednesday, August 8, 2012

கண்ணன் நம்பி பிறந்தனன்

Visit BlogAdda.com to discover Indian blogs

கோகுலாஷ்டமி நாளான இன்று சென்னை மேற்கு மாம்பலம் சத்ய நாராயணப்  பெருமாளின் கண்ணன் திருக்கோலம் சிலவற்றைக் கண்டு களியுங்கள் அன்பர்களே. 


                                   சத்ய நாராயணர்  தவழும் கண்ணன் கோலம்
                                 
                                                  (வெண்ணெய்த்தாழி கிருஷ்ணன் கோலம்)


வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் 

கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில் 

எண்ணெய் சுண்ணம் எதிரெதிர்தூவிட 
                                   கண்ணன்முற்றம் கலந்தளறாயிற்றே.  -பெரியாழ்வார் 


பெருமாளின் பின்னழகு

                                           மாணிக்கங்கட்டி வயிரமிடைகட்டி
                              ஆணிப்பொன்னாற்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
                                  பேணியுனக்கு பிரமன்விடுதந்தான்
                  மாணிக்குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ

பெருமாள் கீதாச்சாரியன் கோலம்


சத்ய நாராயணப் பெருமாள் பார்த்தசாரதி பெருமாள் அலங்காரம்

பெருமாள்  வலக்கையில் சங்கம்,  இடக்கை " என்னை சரணடைவாய் நான் உன்னை கடைத்தேற்றுவேன்" ( மாம் ஏகம் சரணம் வ்ரஜ) என்னும்  வரத முத்திரை.  திருமுகத்தில் சாரதிக்கே உரிய மீசை.அர்ச்சுனுக்கு கீதை உபதேசம் செய்யும் கோலம் 


அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி  நல்வாழ்த்துக்கள்

Labels: ,

திருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -4a

Visit BlogAdda.com to discover Indian blogs
இரத சப்தமி சக்ரஸ்நானம் 
சுவாமி புஷ்கரணி நீராழி மண்டபம் 


திருமலையில் இரதஸப்தமி அர்த்த பிரம்மோற்சவம்  (அரை பிரம்மோற்சவம்) என்றழைக்கப்படுகின்றது. பிரம்மோற்சவத்தின் கடைநாள் சக்ரஸ்நானம் நடைபெறுவது போல  இரத சப்தமியன்றும் சக்ரஸ்நானம் நடைபெறுகின்றது . காலை வாகன சேவைகள் முடிந்த பின் உச்சிக்காலத்தில்  சுவாமி புஷ்கரணிக்கு சக்கரத்தாழ்வார் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகிறார். அப்போது பக்தர்கள்  தலையில் ஏழு எருக்கம் இலைகள் வைத்து குளிக்கின்றனர். இவ்வாறு சூரிய ஒளி நம் மேல் பட நீர் நிலைகளில் குளிப்பது ஞானம் பெற இது உதவுதாக ஐதீகம்.

சக்கரத்தாழ்வாருக்காக காத்திருக்கும் பக்தர்கள் 

பீஷ்மர் அம்பு படுக்கையில் இருந்து உத்தராயண காலத்திற்கு காத்துக் கொண்டு இருந்த போது வியாசர் அங்கே வர, தான் இவ்வாறு அம்பு படுக்கையில் கிடந்து அல்லல் படுவதற்கான காரணத்தை வினவ. வியாசர் பதிலிறுக்கின்றார், துரியோதனன் சபையில் பாஞ்சாலியை அவமானப்படுத்த துச்சாதானன் முயன்ற போது பிரம்ம்ச்சரிய விரதம் பூண்ட நீதிமானான தாங்கள் தடுக்காததால் ஏற்பட்ட பாவத்திற்க்கான தண்டனை இது என்றார். ஆம் என்று ஆமோதித்த கங்கை மைந்தர் என்ன்டைய தேகத்தை சூரிய கதிரினால் எரித்து சுத்தம் செய்யுங்கள் என்று வேண்ட எருக்கம் இலைகளால் உடல் முழுவதும் தடவி சுத்தம் செய்தார் வியாசர்.எருக்கம் இலை அர்க்க பத்திரம் என்று அறியப்படுகின்றது. அருக்கன் என்றால் சூரியன். எருக்கம் இலையில் சூரியனின் சாரம் உள்ளது. என்வேதான் சந்திரனை ஜடாமுடியில் தாங்கும் சிவ பெருமான் எருக்கை சூரியனாக அணிகின்றார்.

ஏழு சுரங்கள் கொண்ட இசை எவ்வாறு மனதை ஒருமைப்படுத்துகின்றதோ அது போல ஏழு நிறங்களால் ஆன சூரியனின் கிரணங்களை எருக்கம் இலை ஈர்த்து மனதை ஒருமைப்படுத்துகின்றது, எனவே இறைவன் திருவடியில் ஒன்றலாம் என்பதை உணர்த்தும் நாள்.Labels: , ,